Jio: சத்தமில்லாமல் ஜியோ வைத்த ஆப்பு.. இனி ரீசார்ஜ் கட்டணம் எல்லாம் உயர போகுது! இப்படி ஆகிடுச்சே
சென்னை: இந்தக் காலத்தில் டேட்டா என்பது கிட்டத்தட்ட அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. இதனால் அனைவருமே ரீசார்ஜ் செய்து வருகிறோம். இதற்கிடையே நாட்டின் முக்கியமான டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஜியோ (Jio recharge) சத்தமில்லாமல் ஒரு விஷயத்தைச் செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய தொகை அதிகரிக்கிறது.
கடந்த ஜூலை மாதம் தான் ஜியோ, ஏர்டெல், வி (Vi) உள்ளிட்ட இந்தியாவின் அனைத்துத் தனியார் டெலிகாம் நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தினர். 11% முதல் 23% வரை அனைத்துத் திட்டங்களுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தக் காலத்தில் செல்போன் டேட்டா என்பது கிட்டத்தட்ட அத்தியாவசியமாகிவிட்ட நிலையில், வேறு வழியில்லாமல் மக்கள் தொடர்ந்து ரீசார்ஜ் செய்து வருகிறார்கள்.

ஜியோ செய்த செயல்
கட்டண உயர்வு ஒரு பக்கம் என்றால் சில திட்டங்களின் பலன்களை டெலிகாம் நிறுவனங்கள் சத்தமில்லாமல் நிறுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் தான் நாட்டின் முக்கிய டெலிகாம் நிறுவனமான ஜியோ சத்தமில்லாமல் ஒரு பிளானை நிறுத்திவிட்டது. அதாவது தினசரி 1ஜிபி டேட்டா வழங்கும் எல்லாத் திட்டங்களையும் ஜியோ நிறுத்திவிட்டது.
முன்பு ஜியோவில் ரூ.249க்கு ஒரு திட்டம் இருந்தது. இதன் கீழ் 28 நாட்களுக்குத் தினசரி 1 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசமாகக் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் அன்லிமிடட் 5ஜி கிடைக்காது. ஆனால், 5ஜி எல்லாம் தேவை இல்லை என்போர் இந்தத் திட்டத்தை தான் அதிகம் ரீசார்ஜ் செய்வார்கள். இந்த பிளானை தான் ஜியோ சத்தமில்லாமல் நிறுத்தியுள்ளது. இது மட்டுமில்லை.. இப்போது ஜியோவில் எந்தவொரு தினசரி 1ஜிபி டேட்டா திட்டமும் இல்லை.
கூடுதல் செலவு
இப்போது ஜியோவின் தினசரி டேட்டா திட்டம் ₹299ல் இருந்து தான் தொடங்குகிறது. இதில் நமக்குத் தினசரி 1.5 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசமாகக் கிடைக்கும். இதில் நமக்குத் தினசரி 500 எம்பி டேட்டா கூடுதலாகக் கிடைக்கிறது என்றாலும் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக ரூ.50 செலவிட வேண்டி இருக்கிறது.
ஜியோவில் இன்னும் ₹189 ரீசார்ஜ் திட்டம் இருக்கிறது. இது 28 நாட்களுக்கு இலவச வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இருப்பினும், இதில் நமக்கு தினசரி டேட்டா கிடைக்காது. மொத்தமாகவே 28 நாட்களுக்கும் சேர்த்து 2ஜிபி டேட்டா தான் கிடைக்கும். எனவே, டேட்டா யூஸ் செய்வோருக்கு இது ஏற்ற பிளானாக இருக்காது.
ஜியோ சொல்வது என்ன
நீக்கப்பட்ட தினசரி 1 ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ மீண்டும் அறிமுகப்படுத்துமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக ஜியோ தரப்பில் இருந்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை. அதேநேரம் தினசரி 1 ஜிபி திட்டங்களைப் பயன்படுத்த விரும்புவோர் ரீசார்ஜ் கடைகள் அல்லது ஜியோ ஸ்டோர்களில் மூலம் அதை ரீசார்ஜ் செய்ய முடியும் என ஜியோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், அது அனைவருக்கும் கிடைக்குமா என்பது உள்ளிட்ட விவரங்களை அவர் பகிரவில்லை.
நாட்டின் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட நெட்வொர்க்காக இருந்தாலும் கூட ARPU எனப்படும் ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் வருவாயில் ஜியோ பின்தங்கியே இருக்கிறது. அதை மேம்படுத்தவே ஜியோ இந்த ஒரு ஜிபி பிளானை நிறுத்தியுள்ளது. இது ஜியோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயை அதிகரிக்கும்.
மற்ற நிறுவனங்கள்
ஏர்டெல் மற்றும் வி (Vi) நிறுவனங்களில் இன்னும் தினசரி 1 ஜிபி திட்டங்கள் உள்ளன. ஆனால் அதன் ரேட் ₹299 ஆகும். இதே ₹299 விலைக்கு, ஜியோ தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டெலிகாம் சந்தையில் எப்போதும் ஒரு நிறுவனம் எடுக்கும் நடவடிக்கையை மற்ற நிறுவனங்களும் எடுக்கும். எனவே, ஏர்டெல், வி கூட 1 ஜிபி திட்டங்களை நிறுத்த வாய்ப்புகள் அதிகம்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications