ஜியோ வழங்கும் அட்டகாச ஆஃபர் ரீசார்ஜ் பிளான்! எக்கச்சக்க தள்ளுபடி.. 3 நாள் தான் டைம்.. உடனே பண்ணுங்க!
சென்னை: ஜியோ நிறுவனம் வழங்கும் குடியரசு தின ஆஃபர் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ளன. இந்த ஸ்பெஷல் ஆஃபர் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
இந்தியாவின் டாப் டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவ்வப்போது அதிரடி சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், குடியரசு தினத்தை முன்னிட்டு ரூ.2,999 விலையில் வருடாந்திர பிரீபெய்டு பிளான் ஒன்றை ஆஃபர் ரேட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சூப்பர் சலுகைகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை மட்டும் வழங்கப்படும். எனவே, ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெற முந்தவும்.

ஜியோவின் 2,999 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி காலம் ஒரு வருடம். இந்த திட்டத்தில், யூசர்கள் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுவார்கள். இந்த பிளானில் தினசரி 2.5 ஜி.பி டேட்டா என ஒட்டுமொத்தமாக 365 நாட்களுக்கு 912.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் யூசர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் பெறுவார்கள்.
இந்த திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஃபேஷன் சில்லறை ரீடெய்லர்கள் மற்றும் ஃபுட் டெலிவரி ஆப்களுக்கான தள்ளுபடி கூப்பன்களை பெறலாம். அதாவது, Swiggy, Ixigo, Ajio, Tira உள்ளிட்ட பிராண்டுகளின் கூடுதல் தள்ளுபடிகளை இந்த சிறப்பு ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான் மூலமாக பெறலாம்.
குடியரசு தின சலுகையின்படி, ரூபாய் 2,999 ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் பிரபலமான இ- காமர்ஸ் தளங்கள், ஆன்லைன் ஃபேஷன் வெப்சைட்ஸ் மற்றும் ஃபுட் டெலிவரி ஆப்களுக்கான தள்ளுபடி கூப்பன்களைப் பெறலாம். ரிலையன்ஸ் டிஜிட்டலில் குறிப்பிட்ட பொருட்களை வாங்கும் போது ஜியோ 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். அதாவது ரூ.5,000-க்கு மேல் பொருட்கள் வாங்கினால் இந்த தள்ளுபடியை பெறலாம்.
இந்த ரீசார்ஜ் பிளானில், ஜியோ ரூபாய் 125 மதிப்புள்ள இரண்டு ஸ்விக்கி கூப்பன்களை வழங்குகிறது. ரூ.299க்கு மேல் மதிப்புள்ள ஆர்டர்கள் செய்யும்போது இந்த ஆஃபரை ரிடீம் செய்யலாம். மேலும் Ixigo கூப்பனையும் வழங்குகிறது. இதன் மூலம் விமான டிக்கெட் விலையில் ரூ. 1,500 வரை தள்ளுபடி பெறலாம்.
மேலும், ஏஜியோ தளத்தில் ரூ.2,499க்கு மேல் ஆடைகள் வாங்கும் போது ரூ.500 மதிப்புள்ள ஏஜியோ தள்ளுபடி கூப்பனை பெறலாம். மேலும், Tira-வில் ரூ. 999க்கு மேல் மதிப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 30 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. உடனடியாக ரூ.2,999க்கு ரீசார்ஜ் செய்து ஏகப்பட்ட தள்ளுபடியை பெறுங்கள். இந்த சலுகை வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications