ஜியோ + யூடியூப் ஜாக்பாட் போனஸ்! இதுதான் பொங்கல் பரிசா? யாருக்கு கிடைக்கும்! ஆக்டிவேட் செய்வது எப்படி
சென்னை: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, தொடர்ச்சியாகத் தனது யூசர்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதற்கிடையே குறிப்பிட்ட திட்டங்களில் ரீசார்ஜ் செய்வோருக்கு யூடியூப் தளத்தில் மிகப் பெரிய ஒரு சலுகையை ஜியோ அறிவித்துள்ளது. இது என்ன சலுகை.. இது யாருக்குக் கிடைத்தும். இதைப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் டெலிகாம் துறையை மொத்தமாகப் புரட்டிப்போட்ட நிறுவனம் என்றால் ஜியோ தான். இதற்கு முன்பு ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ.200 வரை தர வேண்டி இருந்தது.

ஜியோ:
ஆனால், ஜியோ தான் நிலைமை மொத்தமாகப் புரட்டிப்போட்டது. இப்போது மாதம் முழுக்க இணையச் சேவையைப் பயன்படுத்தவே ரூ.300க்கு ரீசார்ஜ் செய்தால் போதும் என்ற சூழல் உருவாகி உள்ளது. ஜியோவின் இந்த அதிரடியால் டெலிகாம் துறையில் முன்னணி நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது. இப்போது நாட்டில் அதிகபட்ச பயனாளர்களைக் கொண்ட டெலிகாம் நிறுவனமாகவும் ஜியோ இருக்கிறது.
அதேநேரம் அடுத்தகட்டமாகத் தனது பிஸ்னஸை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளிலும் ஜியோ இறங்கியுள்ளது. அதன்படி ஜியோ நிறுவனம் இப்போது ஃபைபர் இணையச் சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதற்காக ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபர் என்று இரு விதங்களில் சேவையை வழங்கி வருகிறது.
யாருக்கு கிடைக்கும்:
இதற்கிடையே குறிப்பிட்ட பிளான்களை தேர்வு செய்யும் ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் பயனாளர்கள் யூடியூப் பிரீமியம் சர்வீஸை இரண்டு ஆண்டுகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது நாட்டில் உள்ள ஜியோஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் பிரீமியம் சர்வீஸ் வைத்திருந்தால் யூடியூப் தளத்தில் விளம்பரங்கள் வராது. மேலும், பேக்-கிரவுண்டில் வீடியோ ப்ளே ஆகும் வசதியும் கிடைக்கும். இது தவிர யூடியூப் மியூசிக் தளத்திலும் ஏகப்பட்ட வசதிகள் நமக்கு கிடைக்கும். இப்போது யூடியூப்பில் வரும் விளம்பரங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில் இது முக்கியமானதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன பேக்:
இது தொடர்பான அறிவிப்பை ஜியோ தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபரில் ரூ.888, ரூ.1199, ரூ.1499, ரூ.2499, ரூ.3499 ஆகிய பிளான்களில் இருப்போர் இலவசமாக யூடியூப் ப்ரீமியம் சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபர் போஸ்ட்பெய்ட்டை பொறுத்தவரை 30Mbps, 100Mbps, 300Mbps, 500Mbps and 1Gbps வேக பிளானில் இருப்போருக்கு இந்த சலுகை கிடைக்கும்.
யூஸ் செய்வது எப்படி:
இந்த மேல் கூறிய பிளான்களில் இருப்போர் மைஜியோ செயலி அல்லது ஜியோ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் யூடியூப் பிரீமியம் தொடர்பாக உள்ள பேனரை கிளிக் செய்ய வேண்டும். அதற்கு அடுத்த பக்கத்தில் எந்த கணக்கில் யூடியூப் பிரீமியம் சேவை வேண்டுமோ அந்த கூகுள் கணக்கை (ஜிமெயில் ஐடி) பதிவிட வேண்டும். அவ்வளவு தான். இதை நாம் செய்தால் போதும்.. அடுத்த நொடியே 2 ஆண்டுகளுக்கான இலவச யூடியூப் பிரீமியம் ஆக்டிவேட் ஆகிவிடும்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications