7 நொடியில் 100 கிமீ வேகம்.. ரஜினிக்கு கலாநிதி தந்த கருப்பு தங்க ரதம்.. பிஎம்டபிள்யூ எக்ஸ் 7!
சென்னை: ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளதால் நடிகர் ரஜினிகாந்துக்கு பெருந்தொகையை செக் மூலம் கொடுத்துள்ளார் சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறன். கையோடு ரஜினிக்கு பிடித்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரையும் பரிசாக வழங்கி உள்ளார். அந்த காரின் சிறப்பு அம்சங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் , யோகிபாபு, தமன்னா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெயிலர்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை குவித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் 500 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனமே கூறியுள்ளது. ஜெயிலர் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அவருக்கு குறிப்பிட்ட தொகையை செக்காக தானாக முன்வந்து சன் டிவி குழுமத்தின் நிறுவனர் கலாநிதி மாறன் அளித்துள்ளார். அத்துடன் ரஜினிக்கு பிடித்த இருவேறு கார்கள் கொண்டு செல்லப்பட்டன. அதில் பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரை பரிசாக ரஜினி பெற்றுக்கொண்டார்.

பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 கார் இந்திய மதிப்பில்1.50 கோடி ரூபாய் ஆகும்.வரி எல்லாம் சேர்த்து 1.75 கோடி என்கிற அளவில் இருக்கும். பொதுவாக பிஎம்டபிள்யூ கார்கள் தான் பிரபல நடிகர்களின் விருப்பமான வாகனமாக உள்ளது. மிகவும் ஆடம்பரமான சொகுசு வசதிகளுடன், ஸ்டைலிஸ் லுக்குடன் பார்க்கவே கருப்பு நிற தங்க ரதம் போல் இருக்கும். கார் வைத்திருக்கும் யாராக இருந்தாலும் வாழ்வில் ஒருமுறை ஏனும் பிஎம்டபிள்யூ மாடல் காரை ஓட்டிவிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி இருக்க ரஜினிக்கு மட்டும் பிஎம்டபிள்யூ கார் மீது எவ்வளவு ஆசைஇருக்கும் என்பதை பார்த்து கொள்ளுங்கள்.
சரி கலாநிதி மாறன் கொடுத்துள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரில் அப்படி என்னென்ன வசதிகள் உள்ளது என்பதையும் பார்த்தால் ஏன் ரஜினி இந்த காரினை விரும்பினார் என்பதை நீங்களும் அறிவீர்கள்.
பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 கார் தான் தற்போது பிஎம்டபிள்யூ மாடலிலேயே டாப் இடத்தில் உள்ள கார் ஆகும். இதில் இல்லாத வசதிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. அந்த காரை பார்த்தால் ஒரு பெரிய கருப்பு குதிரை பாய்ந்து ஓடுவதற்கு தயாராக நிற்பது போல் இருக்கும்.மற்ற கார்கள் எல்லாம் உயரம் குறைவாக இருக்கும்.ஆனால் இந்த கார் முன்பாக போய் நின்றால் உங்களை விட கார் உயரமாக இருக்கும். இந்த வாகனத்தை சென்னையில் ஓட்டுவது எளிதானது இல்லை. முக்கியமான சாலைகளில் செல்வது தான் ஈஸி, மிகவும் ஒடுக்கமான சாலைகளில் போவது காருக்கு நல்லது அல்ல..
பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 சிறப்பு அம்சங்கள்: பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 கார் தான் எஸ்யுவி கார்களில் மிகவும் ஆடம்பரமான கார். ஹைட்ராலிக் சட்னுடன் கூடிய பானெட் இருக்கிறது.உள்ளே காரின் என்ஜின் பகுதியை திறந்து பார்த்தால் அதில் 3 லிட்டருக்கான பெட்ரோல் என்ஜின் இருக்கும். இந்த என்ஜின் 2993க்கான இன்லைட் ஆறு சிலிண்டர் இருக்கும். இந்த என்ஜினின் மேக்சிமம் பவர் பார்த்தீங்க அப்படீன்னா, 386 @ 6250rpm என்கிற அளவில் இருக்கும். மேக்சிமம் டார்கியூ பார்த்தீங்க அப்படீன்னா 520Nm @ 1850 - 5000rpm என்கிற அளவில் இருக்குமாம்.
இந்த கார் இரண்டரை டன் என்கிற அளவில் எடையுடன் இருக்கும். இந்த கார் 0 முதல் 100 கிலோ மீட்டருக்கு வெறும் 7 செகண்டில் போகும் என்று சொல்கிறார்கள். அந்த அளவிற்கு பவர்புல்லானது இந்த கார். அதேபோல் அதிக பட்சம் இந்தியாவில் 249 கிமீ வேகத்தில் இந்த கார் போகுமாம்.
பிஎம்டபிள்யுக்கென்றே உள்ள ஆக்டிவ் கிட்னி கிரில்ஸ் கொடுத்திருப்பார்கள். இது கார் மிக அதிக நேரம் ஓட்டி சூடானால், அந்தநேரம் அந்த வென்ட் அதுவாகவே ஓபனாகும். அந்த வென்ட் வீட்டிற்கு வந்த பிறகு ஆப் செய்துவிட்டால் குளோஸ் செய்துவிடும். இதன் மூலம் தேவையற்ற குப்பைகள் உள்ளே செல்லாது.
லேசர் ஹெட்லாம்ஸ் கொடுத்துள்ளார்கள். இந்த பிஎம்டபிள்யூ கார்களின் லைட் நிச்சயம் பகல் போல் வெளிச்சம் அளிக்கும்- அதையும் தாண்டி இந்த லேசர் ஹெட்லாம்ஸ் முன்னாடி உள்ள ரிப்ளக்டிவ் மெட்டீரியலில் அடிக்காது. நீங்கள் ஒரு பள்ளமான இடத்தில் ஏற்றி இறக்குகிறீர்கள் என்றால் இது ரோட்டையே கவனமாக பார்த்து கொண்டிருக்குமாம். அதேபோல் காரின் பாக்லாம்ஸ் கீழே வைத்திருப்பார்கள். பொதுவாக மிடில் பகுதியில் தான் இருக்கும். ஆனால் இந்த காரில் கீழே வைத்துள்ளார்கள்.
இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 கார் 5.1 மீட்டர் நீளமும் , 2 மீட்டர் அகலமும், 1.8 மீட்டருக்கான உயரமும் இருக்கும்.காரின் முன்பக்கம் ஒரு கேமராவும், பின்னால் ஒரு கேமராவும் கொடுத்திருப்பார்கள். பம்பர்களிலும் சென்சார் கொடுத்திருப்பார்கள். கேமரா, சென்சார் மூலம் இந்த காரை நீங்கள் எளிதாக ஓட்ட முடியும். சென்னை நகருக்குள் டிராபிகில் ஓட்டும் போது பார்த்து பார்த்து தான் ஓட்டவேண்டும். அதற்காகவே கேமரா மற்றும் சென்சார் கொடுத்துள்ளார்கள் தேசிய நெடுஞ்சாலையில் இது மின்னல் வேகத்தில் பறக்கும். மோசமான சாலையில் ஓட்டும் போது காரில் நீங்கள் சிட்டின் உயரத்தை ஏற்றிக்கொள்ள முடியும். இந்த கார் 80 லிட்டர் கொள்ளவு உடையது. இந்த காரில் டேங்கை பில் பண்ண வேண்டும் என்றால் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயாவது வேண்டும். ஏனெனில் அந்த வேகத்தில் காலியாகிவிடும். இந்த காரின் மைலேஜ் பார்த்திங்க அப்படீன்னா 13.8 கிமீ ஒரு லிட்டருக்கு கொடுக்கும் என்கிறார்கள். எனவே டேங்க் பில் பண்ணுனா குறைந்தது 1050முதல் 1080 கிமீ தூரத்திற்கு கண்டிப்பாக போக முடியும். 1000 கிலோ மீட்டருக்கு எங்குமே பெட்ரோலுக்காக நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. இதில் டாப் ரூப் முழு கிளாஸ் அளவில் இருக்கும்.வேற லெவலில் இருக்கும். மொத்தம் காரில் 6 பேர் பயணிக்க முடியும்.
#JailerSuccessCelebrations continue! Superstar @rajinikanth was shown various car models and Mr.Kalanithi Maran presented the key to a brand new BMW X7 which Superstar chose. pic.twitter.com/tI5BvqlRor
— Sun Pictures (@sunpictures) September 1, 2023
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications