இனி தூக்கமே வராதே! ஐபோன் 16 சீரிஸ் மொபைல்களின் இந்திய விலை நிலவரம் என்ன தெரியுமா? முழு தகவல்
நியூயார்க் : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற இட்ஸ் க்ளோ டைம் நிகழ்வில், ஆப்பிள் 16 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர் பாட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட அனைத்து சாதனங்களின் விலை என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
உலக அளவில் செல்போன் விற்பனை பிரிவில் முன்னணி இடத்தில் இருக்கும் ஆப்பிள் தனது ’இட்ஸ் க்ளோ டைம்’ நிகழ்வில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இந்த நிகழ்வில் ஐபோன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், ஆப்பிள் வாட்ச், ஏர் பட்ஸ், ஐஓஎஸ் 18 உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளது.
இட்ஸ் க்ளோ டைம் நிகழ்வு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்கியது. ஆப்பிள் நிறுவனத்தின் யூடியூப் சேனல், ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிள் இணைய தளத்தில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கலிபோர்னியாவின் குபர்ட்டினோவில் உள்ள ஆப்பிள் தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் வெளியானது. ஆப்பிளின் அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுடன், 4th ஜெனரேஷன் ஏர்பாட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்கு தளம், ஆப்பிள் வாட்ச் 10 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. அவற்றின் விலை என்ன? என்பது குறித்து தனியாக பார்க்கலாம்..
iPhone 16 சீரிஸுக்கான தொடருக்கான ப்ரோ-ஆர்டர் செப்டம்பர் 13 அன்று இந்தியாவில் மாலை 5:30 மணிக்கு தொடங்குகிறது. முதல் விற்பனை செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலையைப் பொருத்தவரை, ஐபோன் 16 ஆரம்ப விலை $799 ( இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 67,000), அதேசமயம் ஐபோன் 16 பிளஸ் $899 ( இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 75,500) விலையில் கிடைக்கும். ஐபோன் 16 ப்ரோ 128GBக்கு $999 (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.83,870) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 256GBக்கு $1199 (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1 லட்சம்) என்ற விலையில் கிடைக்கும். இவை அனைத்தும் அமெரிக்காவின் விலை மட்டுமே.

இந்தியாவில் ஐபோன் 16 79,900 ரூபாய்க்கும், ஐபோன் 16 பிளஸ் 89,900 ரூபாய்க்கும் கிடைக்கும். இதேபோல் ஐபோன் 16 ப்ரோ இந்தியாவில் ரூ.1,19,900 என ஆரம்ப விலையுடன் விற்பனைக்கு வரும். மிகவும் அதிக எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் இந்திய சந்தையில் 1,44900 ரூபாய் வரை விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மெமரி வேரியண்ட்களில் 256 ஜிபி மெமரி திறன் கொண்ட ஐபோன் ப்ரோ மேக்ஸ் ரூ.99,106க்கும், 512 ஜபி மெமரி திறன் கொண்ட ஐபோன் ப்ரோ மேக்ஸ் ரூ. 115,661க்கும், 1000 ஜிபி, அதாவது 1TB மெமரி திறன் கொண்ட ஐபோன் ப்ரோ மேக்ஸ் ரூ. 132,216 க்கும் விற்பனைக்கு வருகிறது.
இதே போல் ஆப்பிள் வாட்ச் 10, GPS மாடலின் விலை விலை ரூ.32,891, GPS + Cellular version-ன் விலை ரூ.41,311 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது
நான்காம் தலைமுறை ஏர்பாட்ஸின் முதல் மாடல் AirPods 4 இதன் விலை ரூ.10,681 ஆகவும், இரண்டாவது மாடல் AirPods 4 Active Noise Cancellation வசதி கொண்டதன் விலை ரூ.14,817 ஆகவும், மூன்றாவது AirPods Maxன்விலை ரூ.45,421 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications