Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடல் மேல் பறக்கும் கார்.. சென்னை டூ கொல்கத்தா.. 3 மணி நேரம் தான்! ஆனந்த் மகிந்திரா சொன்னதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

மும்பை: கடல் மட்டத்தில் இருந்து 4 மீட்டர் உயரத்தில் பறக்கும் வகையிலான கார் வரப்போகிறதாம். இந்த காரில் ரூ.600 கட்டணம் செலுத்தினால் சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு கடல் வழியாக 3 மணி நேரத்தில் சென்றுவிடலாம். 1600 கிமீ தொலைவை இந்த காரில் சென்றால் வெறும் 3 மணி நேரத்தில் சென்றுவிடலாம். இந்த தகவலை பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா பகிர்ந்து வியந்துள்ளார்.

சென்னையில் இருந்து 1600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்கத்தாவிற்கு காரில் வெறும் 3 மணி நேரத்தில் அதுவும் வெறும் 600 ரூபாய் கட்டணத்தில் பயணிக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அது எப்படி முடியும் சாத்தியம் என நீங்கள் ஆச்சர்யத்துடன் நினைக்கலாம்.

Anand Mahindra flying car technology

ஆனந்த் மகிந்திரா வியப்பு

ஆனால், இது விரைவில் நிஜமாக மாற போகிறதாம். இதற்கான முயற்சிகளில் வாட்டர்பிளை டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தின் இன்குபேஷன் பிரிவுடன் இணைந்து ஈடுபட்டுள்ளது. இந்த தகவலை தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திராவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வியந்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் ஆனந்த் மகிந்திரா இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை மேம்படுத்துவதில் சிலிகான் வாலிக்கு போட்டி அளிப்பதை ஐஐடி மெட்ராஸ் உறுதி செய்கிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் தொழில்நுட்ப முயற்சி குறித்த ஒரு புதிய செய்திகள் வருகின்றன. இந்த திட்டத்தில் எனக்கு பிடித்தது என்னவென்றால், நமது பரந்த நீர்வழிகளை பயன்படுத்துவதற்கான உறுதி மட்டும் இல்லை. இந்த டிசைன் உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

நீர் மட்டத்தில் இருந்து 4 மீட்டர் உயரம்

முன்னதாக ஏரோ இந்தியா 2025-ல் இந்த வாட்டர் காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஹார்ஷ் ராஜேஷ், இது தொடர்பாக பேசியிருந்தார். அப்போது இந்த வாட்டர் பிளை கார் எப்படி இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்பது பற்றி பேசியிருந்தார். அவர் கூறியதாவது:- நீரில் இருந்து டேக் ஆப் செய்து 4 மீட்டர் உயரத்தில் செல்லும் வகையில் இருக்கும்' என்றார்.

கடல் வழித்தடம் என்பதால் அதிவேகத்தில் பயணிக்க முடியும். கொல்கத்தாவில் இருந்து 1,600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னைக்கு வெறும் 600 ரூபாயில் செல்லலாம். இது ரயிலில் மூன்றாம் வகுப்பு கட்டணத்தை விட குறைவு ஆகும்.

எப்போது பயன்பாட்டுக்கு வரும்

தற்போதைக்கு இந்த திட்டம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. ஏரோ இந்தியா நிகழ்ச்சியில் வெறும் டிசைனை மட்டுமே அந்த நிறுவனம் காட்டியது. அடுத்த சில மாதங்களில் முன் மாதிரி கார் ஒன்று ரெடியாகும். 100 கிலோ எடை கொண்டதாக இது இருக்கும். 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு டன் எடையுடன் பறக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்படும். 2026- ஆம் ஆண்டுக்குள் 20 பேர் வரை பயணிக்கும் மாடல் காரை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ஐஐடி மெட்ராஸ் நிதி உதவி அளிக்கிறது. பாதுகாப்பு செக்டாரிடம் இருந்து தற்போது கூடுதல் நிதியை பெறும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது. எதிர்காலத்தில் சரக்கு போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காகவும் பயன்படுத்தும் வகையில் இந்த தொழில் நுட்பம் பயன்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.'

குறுகிய நேரத்தில் தொலைதூர பயணங்கள்

உலகம் வேகமாக தொழில் நுட்பத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் போக்குவரத்துக்காக அதிக நேரம் செலவிடுதை குறைத்து குறுகிய நேரத்தில் தொலை தூரங்களுக்கு செல்லும் வகையிலான திட்டத்திற்கு அதிக முன்னுரிமை தற்போது அளிக்கப்படுகிறது. புல்லெட் ரயில், ஹைப்பர் லூப் ரயில் என மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகம் வரையில் பயணிக்கும் திறன் கொண்ட போக்குவரத்து அமைப்பை உருவாக்கு முயற்சி படுவேகமாக நடைபெற்று வருகிறது.

அந்த வரிசையில் தற்போது இந்த கடல் பரப்பில் 4 மீட்டர் உயரத்தில் பறக்கும் வகையிலான பறக்கும் காரை உருவாக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. வரும் காலங்களில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு, எழும்பூரில் இருந்து தாம்பரத்திற்கு சென்று வருவது போல தினமும் சென்று வரும் நிலைமை வந்தால் கூட ஆச்சர்யபடவேண்டியது இல்லைபோல..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+