வாயை பிளந்த டெக் உலகம்! உலகின் முதல் டிரான்ஸ்ப்ரண்ட் லேப்டாப்.. அசத்திய லெனோவா.. இது புதுசா இருக்கே
சென்னை: உலகின் முதல் டிரான்ஸ்ப்ரண்ட் லேப்டாப்பை அறிமுகப்படுத்தி, ஒட்டுமொத்த டெக் உலகையும் வாய் பிளக்க வைத்திருக்கிறது லெனோவா நிறுவனம்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், புதிய ஐடியாக்களை அறிமுகப்படுத்தவும் அவ்வப்போது தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்று கூடுவதுண்டு. இப்படியாக சர்வதேச மொபைல் காங்கிரஸ் (WMC) என்கிற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்பங்கள் ஒன்று கூடி தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும். அந்த வகையில் இந்த ஆண்டு ஸ்பெயினில் இந்த WMC நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில் லெனோவா காட்சிப்படுத்திய லேப்டாப் ஒன்று ஒட்டுமொத்த டெக் தயாரிப்பாளர்களையும் அலறவிட்டிருக்கிறது. அப்படி என்ன இந்த லேப்படாப்பில் ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? டிரான்ஸ்ப்ரன்ஸி தான் இதன் ஸ்பெஷல். அதாவது, சாதாரண கண்ணாடியை பார்த்தால் எப்படி அந்த பக்கம் இருப்பது நமக்கு தெரியுமோ, அதேபோல இந்த லேப்டாப்பின் டிஸ்பிளே கண்ணாடி மாதிரி டிரான்ஸ்ப்ரண்ட்டாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
லெனோவா நிறுவனம், திங்க்புக்(ThinkBook) என்கிற வரிசையில் லேப்டாப்களை விற்பனை செய்து வருகிறது. இந்த சீரிஸில்தான் இந்த டிரான்ஸ்ப்ரண்ட் லேப்டாப்பும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப்க்கு 17.3 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்பிளே 55% டிரான்ஸ்ப்ரண்ட் தன்மை கொண்டதாகும். அதேபோல கீ போர்ட் பகுதியும் டிரான்ஸ்ப்ரண்ட்டாக இருக்கிறது. மற்ற சாதாரண லேப்டாப்பை போல இதை மடித்து எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.

இந்த லேப்டாப்பின் டிஸ்பிளேவுக்கு 1000 நைட்ஸ் பிரைடை்னஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. டிவி, சினிமான திரைகளுக்கு 400 நைட்ஸ் பிரைடை்னஸ் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், டிரான்ஸ்ப்ரண்ட் லேப்டாப்புக்கு 1000 நைட்ஸ் பிரைடை்னஸ் போதுமானதாக இருக்கும். மற்றபடி டிஸ்பிளே 720 பிக்சல் கொண்டதாக இருக்கிறது. ஆனால் இதற்கு AMOLED பேனல் கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மைக்ரோ எல்இடி டிஸ்பிளேதான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஹார்டுவேர் விவகாரங்களை பொறுத்த அளவில், என்னென்ன பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை லெனோவா விவரிக்கவில்லை. இந்த வகை லேப்டாப்புகள் கட்டிடகலை வடிவமைப்பாளர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. என்னதான் இந்த லேப்டாப்பை பார்த்தவுடன் வாங்க வேண்டும் போல தோன்றினாலும், இதை உடனடியாக வாங்க முடியாது என்பதுதான் உண்மை. காரணம், தற்போது காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெறும் மாடல்தான்.
இதை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர 5 ஆண்டுகள் ஆகும் என்று லெனோவா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. லெனோவா நிறுவனத்தின் திங்க்புக் சீரிஸ் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த புதிய டிரான்ஸ்ப்ரண்ட் லேப்டாப்பும் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications