“வாவ்” ஓடிடி, யுபிஐ.. ரூ.999 பட்டன் போனில் இத்தனை வசதிகளா? "Jio Bharat V2" வியக்கவைத்த அம்பானி
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி இந்தியாவில் விலை குறைந்த செல்போனானான ஜியோ பாரத்தை அறிமுகம் செய்து இருக்கும் நிலையில் அதில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.
இந்தியாவின் நம்பர் ஒன் செல்போன் நெட்வொர்காக உருவெடுத்து இருக்கும் ஜியோவின் உரிமையாளரான முகேஷ் அம்பானி, கடந்த சில ஆண்டுகளாக ஜியோவின் பெயரில் விலை மலிவான செல்போன்களை வெளியிட்டு வருகிறார். பல ஆயிரங்களை செலவழித்து செல்போன் வாங்க முடியாத மக்கள் பயன்படுத்தும் வகையில் அந்த செல்போன்கள் இருந்தன.

அந்த வரிசையில் தற்போது மிகவும் விலை குறைவான 5ஜி செல்போனை அறிமுகம் செய்து உள்ளார் முகேஷ் அம்பானி. இந்தியாவிலேயே இணைய வசதி கொண்ட மிகவும் விலை குறைந்த செல்போனாக இது பார்க்கப்படுகிறது. ஜியோ பாரத் வி2 என்ற பெயர் கொண்ட இந்த செல்போனின் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே.
இந்தியாவில் இன்னும் 2ஜி அலைவரிசை சேவையை பயன்படுத்தி வரும் 25 கோடி செல்போன் பயனாளர்களை குறிவைத்து இந்த திட்டத்தை ஜியோ நிறுவனம் தொடங்கி உள்ளது. குறிப்பாக யுபிஐ வசதி என்பது அத்தியாவசியமாகிவிட்ட இக்காலத்தில் அந்த வசதியும் இந்த செல்போனில் இருப்பதாக கூறப்படுகிறது.
முதல் கட்டமாக இந்த நிறுவனம் 10 லட்சம் பயனாளர்களிடம் பரிசோதனை முயற்சியாக தங்கள் செல்போன்களை வழங்கி பயன்படுத்த வைத்து பார்த்தது. இந்த புதிய ஜியோ பாரத் வி2 செல்போன் ஜியோ பாரத் என்ற தளத்தில் இயங்குகிறது. இதற்கு முன் விற்பனை செய்யப்பட்ட ஜியோ பாரத் செல்போன்களிலும் இதே தளம்தான் பயன்படுத்தப்பட்டது.
ஒரு காலத்தில் இந்தியாவின் முன்னணி செல்போன் நிறுவனமாக இருந்த கார்பன் நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளது ஜியோ. பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய இந்த ஜியோ பாரத் வி2 செல்போனை அறிமுகம் செய்வதில் பிற செல்போன் உற்பத்தியாளர்களும் ரிலையன்ஸ் ஜியோவுடன் பங்குதாரர் ஆகலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது பரிசோதனை முயற்சியாக 10 லட்சம் பேரிடம் வழங்கப்பட்டு இருக்கும் ஜியோ பாரத் செல்போன், வரும் ஜூலை 7 ஆம் தேதி முதல் பொது விற்பனைக்காக வர உள்ளது. இந்த ஜியோ பாரத் வி2 செல்போனில் மேற்குறிப்பிட்ட வசதிகள் மட்டுமின்றி, இந்த செல்போனை வாங்குவதன் மூலம் டேட்டா ரீசார்ஜ் திட்டங்களில் பல்வேறு சலுகைகளை அது வழங்க உள்ளது.
- வெறும் பட்டன் போனாக காட்சி தரும் இதில் பல்வேறு வசதிகள் இடம்பெற்று உள்ளன. குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சினிமா ஓடிடி தளம் இதில் உள்ளது.

- அதில் சினிமா, விளையாட்டு போட்டிகள், வெப் சீரீஸ்களை காணலாம். அதேபோல் ஜியோ சாவ்ன் செயலியையும் அதில் பயன்படுத்த முடியும். தமிழ் உட்பட பல மொழிகளை சேர்ந்த 8 கோடிக்கும் அதிகமான பாடல்களை கேட்டு மகிழலாம்.
- இதில் உள்ள கேமராக்களின் மூலமாக உங்கள் நினைவுகளை போற்றிப் பாதுகாக்கலாம்.
- இந்தியா முழுவதும் அன்லிமிட்டடாக பேசி மகிழலாம். ரூ.123 க்கு 12 ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் டாக் டைமும் கிடைக்கும். ஆண்டு சந்தாவாக ரூ.1234 ஐ செலுத்தினால் ஒரு நாளை 500 எம்பியுடன் ஆண்டு முழுவதும் இலவசமாக பேசி மகிழலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications