யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பது இனி ரொம்ப ஈஸி! ரூல்ஸை தளர்த்திய YouTube.. அப்படி போடு! செம!
சென்னை: யூடிபர்கள் இனி பணம் சம்பாதிப்பது இன்னும் ஈஸி. எளிதாக பணம் சம்பாதிக்கும் வகையில் மானிட்டைசேஷன் விதிகளை மாற்றியுள்ளது யூடியூப் நிறுவனம். என்ன விஷயம்னு சிம்பிளா இங்கே பார்க்கலாம்.
யூடியூப், உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக உள்ளது. நகரம் - கிராமம், பெரியவர்கள் - சிறியவர்கள் என எந்த வேறுபாடும் இன்றி பல்வேறு தரப்பினரும் யூடியூபை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். யூசர்கள் பணம் சம்பாதிக்கக்கூடிய பல வழிகளையும் யூடியூப் வழங்குகிறது.

யூடியூபர்கள் வருமானம்: பல யூடியூபர்கள், தாங்கள் பார்த்து வந்த மாதச் சம்பள வேலைகளை விட்டுவிட்டு இப்போது யூடியூப் மூலம் கிடைக்கும் பணத்தில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அந்தளவுக்கு யூடியூபர் தொழில் லாபகரமானதாகவும் உள்ளது. யூடியூப் வீடியோக்கள் மூலமாக பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும்.
அனைவரும் அறிந்த நேரடியான வழி, நாம் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு, அதன் ஸ்ட்ரீமிங் பயன்பாட்டிலிருந்து சம்பாதிப்பது. யூடியூபில் சேனலை தொடங்குவது எளிதான காரியம் என்றாலும், அடுத்தடுத்து நல்ல வரவேற்பைப் பெற்று, பணம் சம்பாதிக்கும் அளவுக்கு உயர்வது நம் உழைப்பு, கன்ட்டென்ட்டை பொறுத்துத்தான்.

என்னதாம்ப்பா இல்ல?: யூடியூபில் இல்லாததே இல்லை எனும் அளவுக்கு மீன் பிடிப்பது முதல் ராக்கெட் சயின்ஸ் வரை எல்லா விஷயங்களும் இருக்கிறது. சினிமா விமர்சனம், சமையல் குறிப்புகள், ஆரோக்கிய டிப்ஸ், மென்பொருள் மொழி வகுப்புகள், தொழில்வாய்ப்பு பயிற்சிகள், செடி வளர்ப்பு முறைகள், செல்லப்பிராணி வளர்ப்பு ஆலோசனைகள், மலிவு விலை சந்தை பொருள்கள், சுற்றுலா தலங்கள், டெக் ரிவியூஸ், மாடித்தோட்டம், ஆடல் பாடல் பயிற்சிகள் என எத்தனையோ வெரைட்டிகளில் ஆயிரக்கணக்கான சேனல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
இவை போக, பிராங்க் வீடியோஸ், கணவன்-மனைவி செல்லச் சண்டைகள், குடும்ப விழாக்கள், பாட்டி வைத்தியம், கிராமத்து சமையல், குழந்தைகளின் சுட்டித்தனம், தனிப்பட்ட திறமைகள் என பல விஷயங்களை கூட வீடியோவாக யூடியூபில் பதிவேற்றி பலரும் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

மானிட்டைசேஷன் ரூல்ஸ்: யூடியூப் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், முதலில் நீங்கள் பதிவிடும் வீடியோக்கள் மக்களிடையே வரவேற்பு பெற வேண்டும். உங்களது சேனலின் சப்ஸ்கிரைபர்கள் அதிகமாக இருக்க வேண்டும். அதோடு, உங்கள் வீடியோக்களை லட்சக்கணக்கான மக்கள் பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நீங்கள் விரும்பும் அளவுக்கு வருமானம் கிடைக்கும்.
பல்வேறு மானிடைசேஷன் விதிமுறைகளை, யூடியூப் நிறுவனம் வைத்துள்ளது. ஒருவர் யூடியூப் சேனல் தொடங்கிய பின்பு, அந்த சேனல் குறைந்தது 1,000 சப்ஸ்கிரைபர்களை கொண்டிருக்க வேண்டும். ஒரு ஆண்டில், நீங்கள் பதிவிடும் வீடியோக்களை 4,000 மணி நேரம் பார்வையாளர்கள் பார்த்திருக்க வேண்டும் அல்லது 90 நாட்களுக்கு யூடியூப் ஷார்ட்ஸ்களின் வியூஸ் 10 மில்லியனை எட்டியிருக்க வேண்டும்.
இவற்றை பூர்த்தி செய்திருந்தால், உங்கள் சேனல் மானிடைசேசன் செய்யப்படும். அதன் மூலம் உங்கள் வீடியோக்களுக்கு இடையே விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப உங்களுக்கு மாதாமாதம் பணமும் கிடைக்கும்.
இனி ரொம்ப ஈசி: இப்போது இந்த நிபந்தனைகள் குறைக்கப்பட்டு புதிய யூடியூப் மானிடைசேசன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய யூடியூப் மானிடைசேசன் ரூல்ஸ் படி, யூடியூப் சேனலுக்கு 500 சப்ஸ்கிரைபர்கள் இருந்தாலே போதும். 90 நாட்களில் 3 வீடியோக்களை பதிவிட்டிருக்க வேண்டும். இந்த வீடியோக்களை 3,000 மணி நேரம் பார்வையாளர்கள் பார்த்திருக்க வேண்டும் அல்லது யூடியூப் ஷார்ட்ஸ் வியூஸ் 3 மில்லியனை எட்டியிருக்க வேண்டும். அவ்வளவுதான்.
இந்த நிபந்தனைகளை எட்டி இருந்தாலே இப்போது மானிட்டைசேஷனுக்குள் வந்துவிடுவீர்கள். 1000 சப்ஸ்கிரைபர்களை எட்டுவதற்குள் பலருக்கும் நாக்குத் தள்ளிவிடும், இதனால், முயற்சியைத் தொடராமல் சில வீடியோக்களோடு யூடியூப் சேனலை ஏறக்கட்டியவர்கள் ஏராளம். இப்போது மானிட்டைசேஷன் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் புதிதாக தொடங்கி வளர்ந்து வரும் யூடியூபர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த புதிய யூடியூப் விதிகள் முதலில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, தைவான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆக, இனி புதிதாக யூடியூப் சேனல் தொடங்க விரும்புபவர்களுக்கும், புதிதாக சேனல் தொடங்கி வளர்ந்து வருபவர்களுக்கும் நல்ல வாய்ப்பு தான்..!
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications