வரலாறு காணாத ஆஃபர்.. ஆப்பிள் ஐபோன் வாங்க இதுவே சரியான நேரம்! இனிமேல் இப்படியொரு தள்ளுபடி கிடைக்காது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால், அதன் விலையைக் கேட்டாலே நமக்குத் தலை சுற்றிவிடும். ஆனால், இப்போது முந்தைய ஆண்டில் வெளியான ஐபோன் 15 ப்ரோ மாடல்களுக்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சலுகை கிடைத்துள்ளது. ஐபோன் வாங்கும் பிளானில் இருப்போர் இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீர்கள்.

உலகில் என்ன தான் ஏகப்பட்ட மொபைல் கம்பெனிக்கள் இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இருக்கும் மவுசு தனி தான். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை எனக் காத்திருந்து வாங்குவார்கள்.

apple

சமீபத்தில் ஐபோன் 16 வெளியான நிலையில், அதை வாங்கவே பல மணி நேரம் இளைஞர்கள் காத்திருந்தார்கள். அந்தளவுக்கு ஐபோன்களுக்கு எப்போதும் வெறித்தனமான ரசிகர்கள் இருப்பார்கள்.

தள்ளுபடி: ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை சீசன் தொடங்கும் செப். மாதம் பிளிப்கார்ட், அமேசான் தளங்கள் வரலாறு காணாத ஆஃபர்களை அள்ளி தரும். அதன்படி இந்தாண்டு பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டே சேலுக்கு தயாராகிவிட்டது. இப்போது பண்டிகை காலம் நெருங்கும் நிலையில், கடந்தாண்டு வெளியான ஐபோன் 15 மாடலுக்கு வரலாறு காணாத சலுகை கிடைக்கப் போகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த பிக் பில்லியன் டே சேலில் தான் வரலாறு காணாத தள்ளுபடி கிடைக்கும். இதில் மொபைல், டிவி, பிரிட்ஜ் என அனைத்து பொருட்களுக்கும் மிகப் பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐபோன் பிரியர்களுக்கு இதில் ஜாக்பாட் அடித்துள்ளது என்று சொல்லும் அளவுக்கு ஆஃபர் கிடைக்கிறது.

மெகா சலுகை: கடந்தாண்டில் வெளியான ஐபோன் ப்ரோ மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முதல்முறையாக ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் சென்றுள்ளது. கடந்தாண்டு ஐபோன் ப்ரோ மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் வெளியான போது அது இந்தியாவில் முறையே ரூ.1,34,900 மற்றும் ரூ.1,59,900க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி பார்த்தால் ஐபோன் 15 ப்ரோ மாடலுக்கு குறைந்தபட்சம் ரூ. 35 ஆயிரமும், ஐபோன் ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு சுமார் 60 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி கிடைக்கிறது. இது வங்கி சலுகை மற்றும் எக்சேஞ்ச் ஆஃபரை சேர்த்து என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிக் பில்லியன் டே சேலில் ஐபோன்களுக்கு எந்தளவுக்குத் தள்ளுபடி என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், அது குறித்த ஸ்னீக் பீக் இப்போது வெளியாகியுள்ளது. அதில் இரண்டுமே ஒரு லட்சத்திற்குக் கீழ் செல்வது உறுதியாகியுள்ளது.

எவ்வளவு தள்ளுபடி: இப்போது ​​ஐபோன் 15 ப்ரோ மாடல் ரூ. 1,09,900க்கு விற்கப்படும் நிலையில், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ. 1,34,900க்கு விற்கப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் பிர் பில்லியன் டே சேலில் ஐபோன் 15 ப்ரோ ரூ. 89,999க்கும், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ. 99,999க்கும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என இரண்டுமே சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. டிஸ்பிளேவை பொறுத்தவரை ஐபோன் 15 ப்ரோ 6.1 இன்ச் டிஸ்பிளேவையும் மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் பெரிய 6.7 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. இதில் ஆப்பிளின் A17 ப்ரோ சிப்செட் இருக்கிறது.

கேமரா: நம்மில் பலரும் ஐபோன்களை வாங்குவதே அதன் கேமராவுக்கு தான்.. அதன்படி ஐபோன்கள் 15 ப்ரோ மாடல்களில் 48MP பிரைமரி லென்ஸ், 12MP அல்ட்ரா வைட் லென்ஸ் உள்ளன. மூன்றாவது கேமரா மட்டும் சற்று மாறுபடுகிறது ஐபோன் 15 ப்ரோவில் 3x ஜூம் வசதியுடன் கூடிய 12MP டெலிஃபோட்டோ கேமரா இருக்கும் நிலையில், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸில் 5x ஜூம் வசதி கொண்ட 12MP டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+