இதான் கரெக்ட்டான நேரம்.. ட்விட்டர் யூசர்களை கொத்தோடு தூக்க பிளான் போட்ட மெட்டா! வருகிறது ‘த்ரெட்ஸ்’
கலிஃபோர்னியா: ட்விட்டர் நிறுவனத்துக்கு போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 'Threads' எனும் ஆப்பை களத்தில் இறக்குகிறது. ட்விட்டரின் அதிரடி மாற்றங்களால் அதிருப்தியில் இருக்கும் யூசர்களை தம் பக்கம் நோக்கி இழுக்கும் வகையில் வருகிறது த்ரெட்ஸ்.
ட்விட்டரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். தலைமை நிர்வாக அதிகாரியை மாற்றியது, ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டுத் தூக்கியது தொடங்கி, ப்ளூ டிக்குக்கு சந்தா, ட்வீட்களை பார்ப்பதற்கு லிமிட் என எலான் மஸ்க் செய்து வரும் அதிரடி நடவடிக்கைகளால் ட்விட்டர் விளம்பர வருவாய் தொடர்ந்து சரிந்து வருகிறது.

யூசர்கள் கடும் அதிருப்தி: ட்விட்டரில் எலான் மஸ்க் மேற்கொண்டு வரும் மாற்றங்களால் அதை பயன்படுத்தும் யூசர்கள் பெரும்பாலானோர் அதிருப்தி அடைந்துள்ளனர். எலான் மஸ்க் அடுத்து என்ன செய்வாரோ என ட்விட்டர் யூசர்கள் பதற்றத்திலேயே உள்ளனர். ப்ளூ டிக் வெரிஃபைடு கணக்குகள் ஒரு நாளைக்கு 6,000 ட்வீட்களை படிக்கலாம். ப்ளூ டிக் இல்லாதவர்கள் 600 ட்வீட்களை மட்டுமே பார்க்க முடியும். அதிலும் புதிய கணக்குகள் 300 மட்டுமே பார்க்க முடியும் என்ற லிமிட்டை அண்மையில் செட் செய்தார் மஸ்க்.
பின்னர், இந்த லிமிட்டை வெரிஃபைடு யூசர்களுக்கு 10,000, மற்றவர்களுக்கு 1,000 மற்றும் புதிய யூசர்களுக்கு 500 ஆக அதிகரித்தார். முன்பு இலவசமாக கிடைத்த ட்வீட் டெக்கும் தற்போது கட்டணம் செலுத்திய ப்ளூ டிக் பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்வீட் டெக்கின் மூலம் பல கணக்குகளின் ட்வீட்களை ஒரே திரையில் பார்க்க முடியும். இப்போது இதற்கும் கட்டணம் என்பதால் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சமயம் பார்த்து இறங்கும் மெட்டா: இதற்கிடையே, உலக அளவில் பலருக்கு ட்விட்டர் சரிவரச் செயல்படவில்லை என்ற புகாரும் கிளம்பியது. இதனால் RIP ட்விட்டர் என்ற ஹாஷ்டாக்கும் ட்ரெண்ட் ஆனது. நாளுக்கு நாள், எலான் மஸ்க்கின் நடவடிக்கைகள் ட்விட்டர் யூசர்களை எரிச்சலுக்கு உள்ளாகி வருகிறது என்றே சொல்லலாம்.
எலான் மஸ்க் கொண்டு வரும் கட்டுப்பாடுகளால் ட்விட்டர் யூசர்கள் கொதித்துப் போய் உள்ளனர். இந்த சமயம் பார்த்து, ட்விட்டருக்கு போட்டியாக 'த்ரெட்ஸ்' (Threads) என்ற புதிய செயலியை களமிறக்குகிறது மெட்டா நிறுவனம். இது ட்விட்டருக்கு போட்டியாக, அதைப் போன்ற வடிவமைப்புடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
த்ரெட்ஸ்: ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகிய முன்னணி தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா, 'த்ரெட்ஸ்' (threads) என்ற புதிய செயலியை ஜூலை 6 முதல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய செயலி ஜூன் 6ஆம் தேதி அமெரிக்காவிலும், மற்ற நாடுகளில் ஜூன் 7ஆம் தேதியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
ட்விட்டர் செயலிக்குப் போட்டியாக இந்த புதிய 'த்ரெட்ஸ்' (threads) செயலியும் கள இறங்க இருப்பது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. த்ரெட்ஸ் செயலி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் உள்ள அம்சங்கள் ஒருங்கிணைந்து கிடைப்பதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ட்விட்டருக்கு மாற்று: ட்விட்டருக்கு மாற்றாக ஏற்கனவே கூ, ஸ்பில், ப்ளூ ஸ்கை என பல சமூக வலைதளங்கள் வந்தன. ஆனால், அவை பெரிய அளவில் எடுபடவில்லை. இந்நிலையில் தான் வெற்றிகரமான தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப்பை நிர்வாகிக்கும் மெட்டா ட்விட்டருக்கு மாற்று செயலியை கொண்டு வருகிறது.
மெட்டாவின் 'த்ரெட்ஸ்' ட்விட்டரை பின்னுக்குத் தள்ளி யூசர்களின் ஆதரவைப் பெறுமா? த்ரெட்ஸின் அம்சங்கள் பயனாளர்களை ஈர்க்குமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்..!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications