முடங்கிய மைக்ரோசாஃப்ட்.. மீண்டும் சிக்கல்! முக்கியமான செயலிகளை பயன்படுத்த முடியாமல் யூசர்கள் அவதி!
டெல்லி: மைக்ரோசாஃப்ட் 365 இன்று மிகப்பெரிய முடக்கத்தைச் சந்தித்துள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான யூசர்கள், இன்று மைக்ரோசாஃப்ட் 365, மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். இந்தச் சிக்கலை தீர்ப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் முன்னணி டெக் நிறுவனமாக விளங்குகிறது பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட். மைக்ரோசாப்ட் 365 என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ப்ரொடக்டிவிட்டி டூல்களின் தொகுப்பு. இந்த செயலி இன்று உலகம் முழுவதும் பரவலான செயலிழப்பை சந்தித்துள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயனர்கள் அத்தியாவசிய மற்றும் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டுள்ளனர்.

செயலிழப்பு - கண்காணிப்பு தளமான, டவுன்டெக்டர் அறிக்கையின் படி, மைக்ரோசாப்ட் 365 இல் சிரமங்களை எதிர்கொள்ளும் பயனர்களால் 24,000 க்கும் மேற்பட்ட இஸ்யூக்கள் இன்று பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பயனர்களில் பலர் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் செயலியில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்., 4,700 க்கும் மேற்பட்ட புகார்கள் இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட்ஸ்ட்ரைக்கின் தவறான சாஃப்ட்வேர் அப்டேட்டால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உலக அளவில் மிகப்பெரிய மைக்ரோசாஃப்ட் செயலிழப்பு ஏற்பட்டது. அந்த சம்பவம், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 8.5 மில்லியன் விண்டோஸ் சாதனங்களை பாதித்தது.
அந்த செயலிழப்பு, விமான நிறுவனங்கள், வங்கிகள் முதல் சுகாதார சேவைகள் வழங்கும் மருத்துவமனைகள் வரை லட்சக்கணக்கான நிறுவனங்களின் செயல்பாடுகளை முடக்கியது. பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள், தனிநபர்கள் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் மென்பொருளில் இயங்கும் கணினி, மடிக்கணினிகளில் நீலத் திரை தோன்றி, 'கணினி செயலிழந்துள்ளது' என எரர் காட்டியது.
மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் இந்தியாவில் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர், விஸ்தாரா, ஏர் இண்டியா நிறுவனங்களின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. டெல்லி விமான நிலையத்தில் டிஜிட்டல் பலகைகள் செயல்படாததால், விமான வருகை, புறப்பாடு விவரங்கள் பலகையில் எழுதி வைக்கப்பட்டன. போர்டிங் பாஸ், கையெழுத்து பிரதியாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு மைக்ரோசாஃப்ட்டில் மீண்டும் அதேபோன்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் அவுட்லுக், வேர்ட், எக்செல் மற்றும் டீம்ஸ் போன்ற டூல்களை நம்பியிருக்கும் வணிகங்கள் மற்றும் தனிப்பட்ட பயனர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சிக்கலை ஒப்புக் கொண்டுள்ளது. எக்ஸ் சமூக வலைதளத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், "பயனர்கள் பல Microsoft 365 சேவைகளை அணுக முடியாத சிக்கலை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.' எனத் தெரிவித்துள்ளது.
எனினும், செயலிழப்புக்கான காரணத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. எவ்வளவு நேரத்தில் இந்தப் பிரச்சனை சரியாகும் என்றும் தெரிவிக்கவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்த முடக்கத்திற்கான மூல காரணத்தை ஆராய்வதால், பயனர்கள் சேவைகளின் முழு மீட்புக்காக காத்திருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications