இனி ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.350 ரீசார்ஜ் செய்யணும்? ஏர்டெல் சுனில் மிட்டல் சொன்ன விஷயம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒரு பெப்சி பாட்டில், ஒரு சிப்ஸ் பாக்கெட் வாங்குவதற்கு செலவிடும் பணத்தைவிட மொபைல் ரீசார்ஜுக்கு நாம் குறைவாகவே செலவிடுகிறோம். ஆனால், வங்கிச் சேவை முதல் கல்வி, பொழுதுபோக்கு, அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்துக்கும் இன்று மொபைல் போனையே நம்பியிருக்கிறோம். எனவே, இந்தியாவில் மொபைல் சேவைகளுக்கான மாதாந்திர கட்டணம் சராசரியாக ரூ.350 ஆக இருக்க வேண்டும் என்று ஏர்டெல் நிறுவனர் சுனில் பாரதி மிட்டல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே டெலிகாம் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கல்வி முதல் அரசு நலத்திட்டங்கள் வரை நாம் அனைத்திற்கும் செல்போனை நம்பி இருப்பதால் வேறு வழியில்லாமல் நாம் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

Mobile recharge price hike Airtel Jio

ஏர்டெல்

ஆனால் இப்போதும் கூட உலகிலேயே மிக குறைவான ரீசார்ஜ் கட்டணங்களை கொண்ட நாடாக இந்தியா இருப்பதாகவும் இதனால் டெலிகாம் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனவும் அத்துறையை சேர்ந்த தொழிலதிபர்கள் கூறி வருகிறார்கள். இதற்கிடையே ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனர் சுனில் பாரதி மிட்டல் இது தொடர்பாக சில கருத்துகளை கூறியிருக்கிறார்.

ரூ.350 ரீசார்ஜ் கட்டணம்

அதாவது இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகள் மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவதாகக் கூறியுள்ள அவர், கட்டணத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தையும் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "நீங்கள் சோப்பும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டும் வாங்குகிறீர்கள். அதன் விலை என்ன என்பது உங்களுக்கு தெரியும். ஒரு பெப்சி பாட்டிலுக்கே அதைவிட அதிகமாகச் செலவிடுகிறீர்கள்.

மொபைல் ரீசார்ஜுக்கு மாதம் ரூ.350 செலவிடுகிறோம் என வைத்து கொள்வோம். அதாவது ஒரு நாளைக்கு சுமார் ரூ.10 முதல் ரூ.12 மட்டுமே.. இப்போது நாம் பயன்படுத்தும் சர்வீஸ்களை கணக்கில் கொண்டால் இது நியாயமான கட்டணம் தான்" என்றார்.

எல்லாம் மாறிவிட்டது

இன்று மொபைல் போன் என்பது பேசுவதற்கும் நெட் யூஸ் செய்வதற்கும் மட்டும் பயன்படும் சாதனம் இல்லை. வங்கிச் சேவைகள், யுபிஐ, ஆன்லைன் கல்வி, அரசு நலத்திட்டங்கள் என அனைத்திற்கும் தேவைப்படுகிறது. மேலும் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற பொழுதுபோக்கு தளங்களையும் பயன்படுத்துகிறோம். இப்படி அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கும் மொபைல் கனெக்ஷனுக்கு மக்கள் அதிகம் செலவிட வேண்டும் என்பதே மிட்டலின் கருத்து.

இதற்கு முன்பு மாதம் ரூ.300 சராசரி கட்டணம் இருக்க வேண்டும் என்று மிட்டல் கூறியிருந்தார். இருப்பினும், இந்த மாதம் ரூ.300 என்ற அவரது கணிப்பு 10 ஆண்டுகளுக்கு முந்தையது. அதன் பிறகு பணவீக்கம் மற்றும் டெலிகாம் நிறுவனங்களின் ஆபரேடிங் செலவுகள் அதிகரித்துவிட்டதாகவும் அவர் விளக்கியுள்ளார். அவர் மேலும், "எரிபொருள், மின்சாரம், ஊழியர்களின் சம்பளம், நிர்வாகச் செலவுகள் என அனைத்தும் உயர்ந்துள்ளன. மேலும், இந்தியாவில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்த வேண்டியுள்ளது.

உள்கட்டமைப்பு

சீனாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மொபைல் டவர்கள் உள்ள நிலையில், இந்தியாவில் சுமார் 3.5 லட்சம் டவர்கள் மட்டுமே உள்ளன. இந்தியா தனது தற்போதைய டவர் கட்டமைப்பையாவது இரட்டிப்பாக்க வேண்டும். ஃபைபர் இணைப்புகள் மற்றும் கடலுக்கடியில் செல்லும் தகவல் தொடர்பு கேபிள்களிலும் அதிக முதலீடு தேவை.

மேலும், 5G சேவைகளுக்காக டெலிகாம் நிறுவனங்கள் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளன. ஸ்பெக்ட்ரம் வாங்க பல லட்சம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளதுடன், நெட்வொர்க் கட்டமைப்பை உருவாக்க சுமார் ரூ.1.5 லட்சம் கோடி கூடுதலாக முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த முதலீடுகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை. டெலிகாம் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி பல டிஜிட்டல் நிறுவனங்கள் வருவாய் ஈட்டுகின்றன. அதாவது அவர்கள் அதிகம் முதலீடு செய்யாமலேயே வருமானம் பார்க்கிறார்கள். டெலிகாம் நிறுவனங்கள் முதலீடு செய்தும் மிக குறைந்த வருமானமே கிடைக்கிறது" என்றார்.

எப்போது

இதன் காரணமாகவே மாத சராசரி குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகை ரூ.350ஆக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அதேநேரம் இந்த இலக்கை எப்போது அடைவீர்கள் என்று கேட்டதற்கு "எனக்குத் தெரியாது" என்று மட்டும் பதிலளித்துள்ளார். கடைசியாக 2024 ஜூன் மாதத்தில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை 10 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+