ஒன் பிளஸ் போன்கள் & டிவைஸ்கள் இனி கடைகளில் கிடைக்காது.. ரீடெயில் செயின் நிறுவனங்கள் அதிரடி முடிவு!
சென்னை: ஒன் பிளஸ் ஸ்மார்ட் போன்கள், டேப், ஹெட்போன் உள்ளிட்ட ஒன் பிளஸ் தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்த முன்னணி சில்லறை விற்பனை கடைகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கிய மொபைல் சில்லறை விற்பனை நிறுவனங்கள் வரும் மே 1ஆம் தேதி முதல் OnePlus ஸ்மார்ட்போன்கள், டேப்கள், ஸ்மார்ட் வாட்ச், ஹெட்போன்கள், சார்ஜர்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள 23 சில்லறைச் சங்கிலிகளில் உள்ள 4,500 கடைகளில் ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட ஒன் பிளஸ் சாதனங்கள் விற்பனைக்கு கிடைக்காது. குறுகிய லாப வரம்புகள், வாரண்டி மற்றும் பழுது நீக்கத்தில் தாமதம் உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக மே 1 முதல் OnePlus தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்த மொபைல் போன் சில்லறை விற்பனை செயின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
தென்னிந்திய ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (ORA) இதுதொடர்பாக ஒன் பிளஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், கடந்த ஆண்டு முழுவதும், ஒன்பிளஸ் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் குறிப்பிடத்தக்க தடைகளை நாங்கள் சந்தித்துள்ளோம், அவை தீர்க்கப்படாமல் உள்ளன. ஒன்பிளஸ் நிறுவனத்துடன் மிகவும் பயனுள்ள ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்த்தோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன் பிளஸ் தயாரிப்புகளில் தொடர்ந்து குறைந்த லாப வரம்புகள் இருப்பதால், குறிப்பாக அதிகரித்து வரும் செயல்பாட்டு மற்றும் நிதிச் செலவுகளுக்கு மத்தியில், எங்கள் வணிகத்தைத் தக்கவைத்துக்கொள்வது சவாலாக உள்ளது. மேலும், வாரண்டி மற்றும் சர்வீஸ் க்ளெய்ம்களை செயலாக்குவதில் தொடர்ச்சியான தாமதங்கள் மற்றும் சிக்கல்கள் வாடிக்கையாளர் அதிருப்திக்கு வழிவகுத்தது.
மேலும், சிக்கல்கள் தீர்க்கப்படாததால் துரதிர்ஷ்டவசமாக, எங்கள் கடைகளில் உங்கள் தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று தென்னிந்திய ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீதர் டிஎஸ், OnePlus இந்தியாவின் விற்பனை இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், எங்கள் நிறுவனங்களில் OnePlus தயாரிப்புகளின் சில்லறை விற்பனையை மே 1, 2024 முதல் நிறுத்துவதற்கான எங்கள் கூட்டு முடிவைத் தெரிவிக்க விரும்புகிறோம் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆர்கனைஸ்டு ரீடெய்ல் செயின்களின் பதிவு செய்யப்பட்ட சங்கமான ORA, தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் பூர்விகா, சங்கீதா, பிக் சி மற்றும் பூஜா உட்பட 23 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ரீடெயில் விற்பனையாளர் சங்கத்தின் இந்த பிரச்சனைக்கு ஒன் பிளஸ் தலையிட்டு தீர்வு காணாவிட்டால் இந்த நிறுவனங்களின் சுமார் 4,500 கடைகளிலும் ஒன் பிளஸ் சாதனங்கள் விற்பனைக்கு கிடைக்காது.
சில்லறை விற்பனை கடைகளில் ஒன் பிளஸ் சாதனங்கள் கிடைக்காவிட்டால், ஒன் பிளஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டும் இந்தியாவில் பெரிய அடி வாங்கும் எனக் கூறப்படுகிறது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications