நெட்பிளிக்ஸ் செய்த தரமான சம்பவம்.. ஜியோ, அமேசானுக்கு கூட கஷ்டம் தான்.. இந்தியாவுக்கு ஸ்பெஷல் யுக்தி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவில் இப்போது ஓடிடி தளங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஜியோ- ஹாட்ஸ்டார், அமேசான் ஆகிய தளங்களுக்குப் போட்டி தரும் வகையில் நெட்ஃபிளிக்ஸ் மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலம் நெட்பிளிக்ஸ் தளம் தனது சந்தை இருப்பை அதிகரிக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்த காலத்தில் ஓடிடி தளங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சினிமா தியேட்டர் செல்ல தயங்கும் பலரும் கூட ஓடிடி தளங்களில் தான் படங்களைப் பார்க்கிறார்கள். சினிமாவை தாண்டி டிவி நிகழ்ச்சிகளும் கூட பல ஓடிடி தளங்களில் ஒளிபரப்பாகிறது.

ott netflix

விரும்பிய நேரத்தில் நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்பதால் வழக்கமான டிபி கேபிளை தவிர்த்துவிட்டு பலரும் ஓடிடி தளங்களில் நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் ஓடிடி தளங்கள்:

இந்தியாவைப் பொறுத்தவரை ஓடிடி வெற்றிக்கு விளையாட்டுப் போட்டிகளை நேரலை செய்வது முக்கியமானதாக இருந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பியதாலேயே ஹாட்ஸ்டாருக்கு அதிகப்படியான சந்தாதாரர்கள் வந்தார்கள். எப்போது ஐபிஎல் டிஜிட்டல் உரிமைகள் கையைவிட்டுப் போனதோ அப்போதே ஹாட்ஸ்டார் சரிவு தொடங்கியது. ஜயோசினிமாஸ் வெற்றிக்கும் கூட விளையாட்டுப் போட்டிகளை நேரலையில் ஒளிபரப்புவது முக்கிய காரணமாக இருக்கிறது.

ஆனால், நெட்பிளிக்ஸ் தளம் இதுநாள் வரை இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து சற்று தள்ளியே இருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது தனது யுக்தியை நெட்பிளிக்ஸ் மாற்றுகிறது. அடுத்தாண்டு முதல் புகழ்பெற்ற டபிள்யுடபிள்யுஇ (WWE) மல்யுத்த போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்று இருக்கிறது.

ott netflix

டபிள்யுடபிள்யுஇ நிகழ்ச்சிகள்

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் சோனி நிறுவனம் தான் டபிள்யுடபிள்யுஇ நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தது. அதன் ஒப்பந்தம் அடுத்தாண்டு நிறைவடையும் நிலையில், அதன் பிறகு நெட்பிளிக்ஸ் தளத்தில் அந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு டபிள்யுடபிள்யுஇ போட்டிகளை நெட்பிளிக்ஸ் தளத்திலேயே ஒளிபரப்பும் வகையில் டீல் போடப்பட்டு இருக்கிறது.

அமெரிக்கா கனடாவில் ஜன. முதலே டபிள்யுடபிள்யுஇ நிகழ்ச்சிகள் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பப்பட இருக்கிறது. ஆனால், இந்தியாவில் சோனி உடனான ஒப்பந்தம் மார்ச் மாதம் வரை இருப்பதால்.. அதன் பிறகே டபிள்யுடபிள்யுஇ நிகழ்ச்சிகள் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பப்படும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் நெட்பிளிக்ஸ் தளமும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சந்தையில் இறங்கி இருக்கிறது.

நெட்பிளிக்ஸின் மாற்றம்

நெட்பிளிக்ஸ் தளம் சர்வதேச அளவில் ஏற்கனவே என்எஃப்எல், பாக்ஸிங் எனப் பல போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பி இருக்கிறது. ஆனால், இந்தியாவில் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஆர்வம் காட்டாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் நெட்பிளிக்ஸ் தனது யூசர்களை அதிகரிக்க இந்த யுக்தியைக் கையாண்டு இருக்கிறது.


நெட்பிளிக்ஸ் ஓடிடி தான் என்பதால் டிவி உரிமைகளைத் தக்கவைக்கச் சோனி நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. இருப்பினும் இந்தியச் சந்தையில் பிரத்தியேக பார்ட்னராக இருக்க நெட்பிளிக்ஸ் விரும்பியதால் டிவி உரிமைகள் சோனிக்கு தனியாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியச் சந்தையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமா, அமேசான் ஆகியவற்றிடம் இருந்து நெட்பிளிக்ஸ் கடும் போட்டியை எதிர்கொள்ளும் நிலையில், இது முக்கிய மாற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டபிள்யுடபிள்யுஇ:

இந்தியாவில் WWE நிகழ்ச்சிகள் டென் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகி வந்தது. கடந்த 2016ல் சோனி நிறுவனம் ஜீ நிறுவனத்திடம் இருந்து டென் ஸ்போர்ட்ஸை வாங்கிய நிலையில், அதன் பிறகு சோனி டென் சேனலில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. இந்தச் சூழலில் தான் அடுத்தாண்டு முதல் டபிள்யுடபிள்யுஇ முழுமையாக ஓடிடி பக்கம் செல்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+