Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த பட்ஜெட்ல 6GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் போனா? இதுல ஸ்பெஷலே பேட்டரி தானாம்.. அசத்தும் நோக்கியா G42

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, ஒரு தசாப்த காலத்திற்கு முன்பு மொபைல் போன் சந்தையையே கட்டி ஆண்டது. பிறகு, அந்த இடத்திற்கு பல நிறுவனங்கள் போட்டிக்கு வந்தன. இன்றும் மீண்டும் ஸ்மார்ட் போன் யுகத்தில் தனது காலடித்தடத்தை வலுவாகப் பதிக்க முயன்று வரும் நோக்கியா, பட்ஜெட் விலையில், சூப்பர் பெர்ஃபார்ம் 5ஜி ஸ்மாட்போனை அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா நிறுவனம் செம பேட்டரி பேக்கப் உடன் 'நோக்கியா ஜி42 5ஜி' ஸ்மார்ட்போனை கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த போன் நேற்று (செப்டம்பர் 15) முதல் இந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. நோக்கியா நிறுவனம் இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஜி42 5ஜி மொபைலின் சிறப்பு அம்சங்கள், அதன் விலை ஆகியவற்றை பார்க்கலாம்.

Nokia enters battle of budget smartphones under 15k: How is Nokia G42 5g phone?

நோக்கியா G42 5G ஸ்மார்ட்போன், Snapdragon 480+ Octa-core ப்ராசஸர் கொண்டது. இதன் வேகம் 2.2 GHz. ஆண்ட்ராய்டு 13 OS அடிப்படையில் இந்த போன் செயல்படுகிறது. 2 வருட OS அப்கிரேட் உறுதியும் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியை எளிதாக கழற்றி மாட்டும் வகையில் QuickFix Technology கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

இந்த போனில் 50 மெகா பிக்சல் டிரிபிள் ரியர் AI கேமரா உள்ளது பலரையும் கவர்ந்துள்ளது. சிறப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவுக்காக இந்த மொபைலில் டிரிபிள் AI கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனுடன் 2 MP டெப்த் + 2 MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் செய்ய 8 MP முன்புற கேமரா உள்ளது.

Nokia enters battle of budget smartphones under 15k: How is Nokia G42 5g phone?

நோக்கியா G42 5ஜி மொபைல் ஆனது 90Hz Refresh Rate உடன் 6.56 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதன் காட்சியின் விகித விகிதம் 20:9 ஆகும். மேலும், இது 450 நிட்ஸ் அளவுக்கு பிரகாசத்தை அதிகரிக்கும். கார்னிங் கொரில்லா க்ளாஸ் 3 பொருத்தப்பட்டுள்ளது. நோக்கியா G42 5G யின் பின்புற பேனல் 65% ரிசைகில் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆனது.

இந்த ஃபோனில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 5000 mAh பேட்டரி உள்ளது. போன் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 3 நாட்களுக்கு பேட்டரி பேக்அப்பை வழங்கும் என்று நோக்கியா நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்த போனில் QuickFix Technology அடிப்படையில் நாமே மாற்றக்கூடிய ரிமூவபிள் பேட்டரி வசதியை நோக்கியா வழங்கியுள்ளது.

Nokia G42 5G ஒரு டூயல் சிம் ஸ்மார்ட்போன் ஆகும். நோக்கியா G42 ஆனது 5G, Wi-Fi, புளூடூத் 5.1 ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட் சார்ஜ் மற்றும் OTG சப்போர்ட் ஆகியவற்றையும் வழங்குகிறது.

Nokia enters battle of budget smartphones under 15k: How is Nokia G42 5g phone?

நோக்கியா இந்த ஸ்மார்ட்போனை 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் அறிமுகப்படுத்தி உள்ளது. 5ஜிபி கூடுதல் விர்ச்சுவல் ரேம் சப்போர்ட்டும் உள்ளது. இன்டர்னல் ஸ்டோரேஜை 1 டிபி (1024 ஜிபி) வரை விரிவாக்கம் செய்யக்கூடிய வசதியையும் கொடுத்துள்ளது. இந்த போனின் விலையை 12,599 ரூபாய் என்று மிகவும் குறைந்த பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளது நோக்கியா.

Nokia G42 5G மொபைல் So Grey மற்றும் So Purple ஆகிய இரு நிறங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஃபோன் பாக்சில் 20W ஃபாஸ்ட் சார்ஜர், கேபிள் மற்றும் ஒரு ஜெல்லி கேஸ் இருக்கும். தற்போது, இந்த நோக்கியா G42 5G ஸ்மார்ட் போன்களை நோக்கியா நிறுவனத்தின் இணையதளம் மற்றும் அமேசான் தளம் மூலம் வாங்கலாம். 13 ஆயிரத்திற்குள் கிடைக்கும் போன்களில் இந்த மாடல் முக்கிய இடத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+