ஆண்ட்ராய்டு வேண்டாம்.. சாதாரண செல்போனிலேயே இனி பணம் அனுப்பலாம்! Nokia 2660 Flip போனை பாருங்க
சென்னை: கூகுள்பே, ஃபோன்பே போன்ற UPI முறை பண பரிவர்த்தனை இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆண்ட்ராய்டு அல்லாத போனிலும் இந்த UPI பண பரிவர்த்தன வசதியை கொண்டு வர செல்போன் நிறுவனங்கள் முயன்றிருக்கின்றன. அந்த வகையில் தற்போது நோக்கியாவின் ஆண்ட்ராய்டு அல்லாத மொபைலில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்கேனிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளதால் எளிதாக QR Code-ஐ ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பிக்கொள்ளலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை பணம் பரிவர்த்தனை செய்ய வேண்டும் எனில் வங்கியோ அல்லது இதற்கென உள்ள கம்யூட்டர் சென்ட்டரிலோ வரிசையில் காத்திருந்து பணம் அனுப்ப வேண்டும். ஆனால் இந்த நிலைமை எல்லாம் 2016ம் ஆண்டு வரைக்கும்தான். அதன் பின்னர் பண பரிமாற்றத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. அதாவது இந்தியாவில் அப்போதுதான் UPI பண பரிவர்த்தனை முறை தொடங்கியது. தொடக்கத்தில் அதன் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 90 லட்சம். ஆனால் தற்போது இது 10 கோடியை கடந்திருக்கிறது.

மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டுமே UPI பண பரிமாற்ற வசதிகள் இருக்கின்றன. ஆனால் கிராமப்புறங்களில் சாமானிய மக்கள் இன்னமும் சாதாரண ஆண்ட்ராய்டு அல்லாத பட்டன் மொபைல்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஆண்ட்ராய்டு இல்லாத மொபைல்களிலும் இந்த UPI வசதியை கொண்டு வர மொபைல் நிறுவனங்கள் முயன்று வருகின்றன. தற்போது இதனை நோக்கியா சாதித்திருக்கிறது.
அதாவது நோக்கியாவின் 2660 flip 4G மொபைல் சந்தைக்கு சமீபத்தில்தான் வந்தது. இந்த மொபைல் 4ஜி வசதியுடன் இருப்பதாலும் மூடி திறக்கும் வகையில் அமைந்திருப்பதாலும் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது தவிர 2.8 இன்ச் டிஸ்பிளை வசதி, இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தும் வசதி, புளூடூத், USB, பிளாஷ் லைட்டுடன் கூடிய 0.3 மெகாபிக்சல் கேமரா, 0.05 GB ஸ்டோரேஜ், மெமரி காார்டு போடும் வசதி, ரேடியோ FM, MP3 ஆப்ஷன் போன்றவை இந்த மொபைலின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
இது எல்லவற்றைவிட ஸ்பெஷலான ஒன்றுதான் UPI பண பரிமாற்ற வசதி. இந்த வசதியை ஆண்ட்ராய்டு அல்லாத பட்டன் மொபைலான 2660 flip 4Gயில் நோக்கியா கொண்டு வந்திருக்கிறது. ஏற்கெனவே இதுபோன்ற மொபைலை வைத்திருப்பவர்கள் சாஃப்வேர் அப்டேட் செய்துகொண்டால் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் சாமானிய மக்களும் UPI பண பரிவர்த்தனையில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலின் விலை ரூ.4,446 மட்டுமே.
ஏற்கெனவே பட்டன் மொபைலில் பணம் பரிவர்த்தனை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி UPI 123பே எனும் வசதியை அறிமுகப்படுத்தியது. அதில் ஐவிஆர் எண்ணை உருவாக்க வேண்டும். பின்னர் குறிப்பிட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு நாம் யாருக்கு பணம் அனுப்புகிறோமா அவர்களின் மொபைல் எண்ணை டைப் செய்ய வேண்டும். ஆனால் இந்த நோக்கியா 2660 flip 4G மொபைலில் ஸ்கேன் வசதி இருக்கிறது என்பதால் ஐவிஆர் எண்ணை உருவாக்க வேண்டிய அவசியம் கிடையாது. அப்படியே கூகுள்பே, ஃபோன்பே மாதிரி ஸ்கேன் செய்து பணத்தை பரிமாற்றம் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications