டீக்கடையில் UPI மானத்தை வாங்குதா? இன்டர்நெட்டே இல்லாமல் பணம் அனுப்ப முடியும்! இந்த நம்பர் முக்கியம்!
சென்னை: இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட யூனிஃபைட் பேமெண்ட் இண்டர்ஃபேஸ் ( unified payments interface) எனப்படும் யூபிஐ (UPI) இந்தியா வர்த்தகத்தில் ஒரு மிகப்பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நெட்வொர்க் பிரச்சனை, சர்வர் கோளாறு காரணமாக யுபிஐயில் பணம் அனுப்புவது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். இந்த நிலை இணைய வசதி இல்லாத இடங்களில் கூட யுபிஐ மூலம் பணத்தை அனுப்பலாம். இது ஸ்மார்ட் போன், ஃப்யூச்சர் போன் என அனைத்து வகையான ஃபோன்களிலும், அனைத்து வகையான நெட்வொர்க்களிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பொதுமக்களுக்கு எளிமையாக்கும் வகையில் அறிமுகமான UPI முறைமை, நம் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. ஒரு காலத்தில் எங்குச் சென்றாலும் கையில் பணம் வைத்திருப்பது வழக்கம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் UPI பரிவர்த்தனைகள் அதிகரித்து, பணம் எடுத்துச் செல்ல வேண்டிய நிலையையே போக்கிவிட்டது என சொல்லலாம். அதேசமயம், இணைய தரம் குறைபாடான நேரங்களில் UPI செயல்படாமல் போவது பயனர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

யுபிஐ சேவை
இந்த பிரச்சனைக்கான தீர்வாகவே அரசு USSD அடிப்படையிலான ஆஃப்லைன் UPI சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த ஆஃப்லைன் பேமென்ட் முறையை பயன்படுத்துவதற்கு மிக உயர்ந்த ஸ்மார்ட்போன் தேவையில்லை. எளிய கீபேட் போன் இருந்தாலும் போதும். ஆனால், உங்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மூலமே நெட் வசதி இல்லாமல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும், ஒருமுறை ஆன்லைனில் இருந்து உங்கள் வங்கி அப்ளிகேஷன் அல்லது இணையதளம் மூலம் UPI PIN செட் அப் செய்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அதன் பிறகு இணைய வசதி தேவைப்படாது.
நெட் இல்லா பரிவர்த்தனை
ஆஃப்லைன் UPI பயன்படுத்த வேண்டுமானால் நீங்கள் உங்கள் மொபைலில் *99# என்பதை டயல் செய்ய வேண்டும். இதனால் இணையம் இல்லாமலே இயங்கும் ஒரு சிறப்பு மெனு திறக்கும். இந்த மெனுவில் கணக்கைத் தேர்வு செய்த பிறகு, பணம் அனுப்புதல், பெறுதல், பேலன்ஸ் பார்த்தல் உள்ளிட்ட அனைத்து விருப்பங்களும் கிடைக்கும். பெறுநரின் மொபைல் நம்பர், UPI ID அல்லது வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு ஆகியவற்றை உள்ளிடலாம். அனுப்ப வேண்டிய தொகையையும் UPI PIN-ஐயும் உள்ளிட்டதும், பரிவர்த்தனை சில வினாடிகளில் முடிந்து விடும்.
*99# சேவை
ஆனால் இந்த முறையில் சில வரம்புகள் உள்ளன. ஒரு ஆஃப்லைன் பரிவர்த்தனையின் அதிகபட்ச வரம்பு ₹5,000. மேலும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ₹0.50 கட்டணம் வசூலிக்கப்படும். இதுவே ஆன்லைன் UPI-யிலிருந்து மாறுபடும் முக்கிய அம்சம். இருந்தாலும், அவசர சூழலில் இது மிக பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக, இந்த சேவை விடுமுறை நாட்களிலும் செயல்படும்; எந்த நெட்வொர்க், எந்த மொபைல் சாதனம் என்ற பேதமும் காணப்படாது.
டிஜிட்டல் பேமென்ட்
தினசரி வாழ்க்கையில் இணையம் இல்லாத சூழலில் சிக்கி தவிக்கும் பலருக்கும் இந்த ஆஃப்லைன் UPI ஒரு நம்பகமான மாற்று வழியாகிவிட்டது. தொழில்நுட்ப முன்னேற்றம் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், ஊரகப் பகுதிகளிலும் சமமான பயன்பாட்டை பெறச் செய்வதே இந்த சேவையின் நோக்கமாகும். இணைய சிக்கல்கள் இருந்தாலும் பரிவர்த்தனைகள் ஆட்கொல்லாது நடைபெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த *99# UPI சேவை, இந்தியாவின் டிஜிட்டல் பேமென்ட் பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாக வளர்ந்து வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications