போனா வராது.. ஆப்பிள் ஐபோன் வாங்க இதுதான் சரியான நேரம்.. அதிரி புதிரி ஆஃபர் வழங்கும் Flipkart
சென்னை: ஆப்பிள் வெறியர்கள் பலர், ஐ போன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுமே அடித்துப் பிடித்து வாங்கி விடுவார்கள். சிலர், நல்ல ஆஃபர் வரும்போது அலேக்காக தூக்கி விடுவார்கள். அப்படி, செம ஆஃபருக்கு வெயிட் பண்ணும் ஆப்பிள் பிரியர் நீங்கள் என்றால் இது நல்ல சான்ஸ். அறிமுக விலையை விட ரூ.17 ஆயிரம் அளவுக்கு குறைந்துள்ளது ஐபோன் 15.
ஆப்பிள் நிறுவனம், தமது சமீபத்திய ஐபோன் மாடல்களை 2023 செப்டம்பரில் அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மொபைல் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஐபோன் 15 சீரிஸ் மாடல், டிசைனை பொறுத்தவரை முந்தைய மாடலை அப்படியே கொண்டுள்ளது. இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் ஐபோன் 15 மாடல்கள் கிடைக்கும்.

ஆப்பிள் ஐபோன் அதிரடி சலுகை விலை: ஆப்பிள் ஐ போன் 15 மாடல்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சலுகை விலையில் கிடைக்கின்றன. ஐபோன் 15 சீரிஸ் மாடல்களுக்கு ஃபிளிப்கார்ட்டில் இப்போது சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நீங்கள் ஐபோன் 15-ஐ வெறும் 61,449 ரூபாய்க்கு வாங்கலாம். செப்டம்பர் மாதம் iPhone 15 அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை ரூ. 79,900.
இன்னும் 6 மாதங்கள் கூட தாண்டாத நிலையில் தற்போது ஐபோன் 15 மாடலின் விலை ரூ.17,000 வரை குறைந்துள்ளது. இப்போது ரூ.66,999 என்ற விலையிலேயே ஐ போன் மாடலை வாங்கலாம். மேலும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்த கட்டண முறையின் அடிப்படையில் ரூ.4,500 வரை கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம், இதன் விளைவாக ஐபோன் 16 மாடல் ரூபாய் 61,449 விலையில் கிடைக்கும்.
ஐபோன் 15-ன் 256GB மற்றும் 512GB வேரியண்ட்களின் முந்தைய விலை ரூ.89,900 மற்றும் ரூ.1,09,900 ஆகும். தற்போது இந்த மாடல்களை ரூ.76,999 மற்றும் ரூ.96,999-க்கு ஃபிளிப்கார்ட் ஆஃபரில் வாங்கலாம். அதே போல வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் டீல்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ஐபோன் 15 மாடல்களின் விலையை மேலும் குறைத்து வாங்கலாம். உங்களிடம் பழைய ஐ போன் 14 ப்ரோ மேக்ஸ் இருந்தால் அதற்கு ரூ.46,149 வரை எக்ஸ்சேஞ்ச் ரேட் கிடைக்கும். அதை கொடுத்துவிட்டு இன்னும் சில ஆயிரங்களில் நீங்கள் ஐபோன் 15க்கு அப்கிரேட் ஆகலாம்.
ஐபோன் 15 சிறப்பம்சங்கள்: ஆப்பிள் ஐபோன் 15 மாடல் 6.1 இன்ச் டிஸ்பிளே கொண்டது. 15 மாடலில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் என்பது USB வடிவிலான சி டைப் சார்ஜர் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன்களின் பிரத்யேக சார்ஜரையே பயன்படுத்தி ஆகவேண்டிய கட்டாயம் இனி இல்லை. ஒரு முறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் வரும் வகையில் நல்ல பேட்டரி பேக் 3,349 mAh உள்ளது. மேலும், மியூட் சுவிட்ச் பட்டனுக்கு பதிலாக ஆக்ஷன் சுவிட்ச் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டாண்டர்ட் மற்றும் பிளஸ் மாடல் 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா சென்சாரை கொண்டுள்ளது. இது முந்தைய மாடலில் இருந்த 12 மெகா பிக்சல் இரட்டை கேமரா அமைப்பை விட பெரிய அளவில் அட்வான்ஸ்டு. சிறந்த கேமரா அனுபவத்திற்காக புதிய நைட் மோட், ஸ்மார்ட் HDR மோட் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. இதில் 4K வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும். மேம்படுத்தப்பட்ட Bokeh effects மற்றும் வேகமான ஷட்டர் ஸ்பீடில் புதிய போர்ட்ரெய்ட் மோட்டையும் கொண்டுள்ளன ஐபோன் 15 மாடல்கள்.
12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் செல்ஃபி கேமரா உள்ளது. ஹைகுவாலிட்டி செல்ஃபிகள் மற்றும் ஃபேஸ் ஐடி திறன்களுக்காக 12-மெகாபிக்சல் TrueDepth அம்சத்திலான கேமராவைக் கொண்டுள்ளது. ப்ரோ மாடல்கள், ProMotion தொழில்நுட்பத்துடன் கூடிய Super Retina XDR டிஸ்ப்ளேக்களை கொண்டுள்ளன. ப்ரோ மாடல்கள் இரண்டிலும் A17 ப்ரோ சிப் வழங்கப்பட்டுள்ளது. இது உயர்தர கணினிகளுக்கு இணையாக செயல்படும் திறனை ஐபோன்களுக்கு வழங்கும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications