மாதா மாதம் ஒரே இம்சைப்பா.. ஒரே ரீசார்ஜ்.. வருடம் முழுக்க நோ தொல்லை.. Vi வழங்கும் சூப்பர் பிளான்கள்!
சென்னை: மாதா மாதம் அல்லது 28 நாட்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருப்பது இம்சையாக இருக்கிறதா? ரீசார்ஜ் செய்யுமாறு வரும் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்கள் தொல்லையாக இருக்கின்றனவா? ஒரே ஒரு முறை ஆண்டுக்கு ரீசார்ஜ் செய்தால் போதும். சிறப்பான பிளான்களை வழங்குகிறது வோடஃபோன் ஐடியா நிறுவனம்.
வோடஃபோன் ஐடியா நிறுவனம், தமது வாடிக்கையாளர்களுக்கு, அசத்தலான 5 வருடாந்திர ரீசார்ஜ் பிளான்களை தருகிறது. மலிவு விலையில் தொடங்கி, ஓடிடி தள சப்ஸ்கிரிப்ஷன் இலவசம் என்பது வரை பல ரேஞ்ச்களில் இந்த ரீசார்ஜ் பிளான்கள் கிடைக்கின்றன. அவற்றைக் குறித்து பார்க்கலாம்.

1,799 பிளான்: வோடஃபோன் ஐடியாவின் மிக மலிவான இந்த ஆண்டு திட்டம், அரிதாக இண்டர்நெட் சேவையை பயன்படுத்துபவர்கள் மற்றும் கீபேட் போன்களை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றது. மாதா மாதம் அதிக தொகை கொடுத்து ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக ஒரே ஒரு முறை ரூ.1,799 ரீசார்ஜ் செய்தால் போதும். வருடத்தின் 365 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 3600 எஸ்.எம்.எஸ், அதோடு 24 ஜிபி டேட்டா ஆகியவற்றைப் பெறலாம்.
2,899 பிளான்: வோடஃபோன் வழங்கும் ரூபாய் 2,899 ரீசார்ஜ் பிளானில், தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். அதோடு, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 100 எஸ்.எம்.எஸ் ஆகியவை இலவசம். மேலும், பின்ச் ஆல் நைட் சலுகை மூலம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவசமாக அன்லிமிடெட் டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு, வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை, சனி மற்றும் ஞாயிறுகளில் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
2,999 பிளான்: வோடஃபோனின் ரூபாய் 2,999 பிளான், தினசரி லிமிட் இன்றி ஒட்டுமொத்தமாக 850 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஒரு நாள் நீங்கள் குறைவாக நெட் பயன்படுத்துவீர்கள், சில நாட்களில் அதிக நெட் தேவைப்படும். அப்படியானவர்களுக்கு இந்த லம்ப்சம் டேட்டா ரீசார்ஜ் மிகுந்த பயன் அளிக்கும். நீங்கள் விரும்பும் நேரத்தில் எந்த தடையும் இன்றி டேட்டாவை அடித்து நொறுக்கலாம். அதோடு, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 100 எஸ்.எம்.எஸ் ஆகியவை இலவசம்.
3,099 பிளான்: ரூபாய் 3,099 பிளான் ஆனது, தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வழக்கம்போல அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 100 எஸ்.எம்.எஸ் ஆகியவை உண்டு. மேலும், பின்ச் ஆல் நைட் சலுகை மூலம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவசமாக அன்லிமிடெட் டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு, வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை, சனி மற்றும் ஞாயிறுகளில் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் இலவசம். தற்போது இந்த பிளானை vi ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூபாய் 75 தள்ளுபடியும் பெறலாம்.
3,199 பிளான்: ரூ. 3,199 ரீசார்ஜ் திட்டத்தில், மற்ற பலன்களோடு கூடுதலாக, ஒரு ஆண்டுக்கு இலவச அமேசான் பிரைம் வீடியோ சந்தா வழங்கப்படுகிறது. அதாவது இந்த பேக்கில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்.எம்.எஸ் ஆகியவை கிடைக்கும். பின்ச் ஆல் நைட் சலுகை மூலம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவசமாக அன்லிமிடெட் டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், வார நாட்களில் தினசரி 2 ஜிபி டேட்டாவில் பயன்படுத்தாத மீதத்தை, வீக்கெண்ட் சனி மற்றும் ஞாயிறுகளில் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம், Vi ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இப்போது ஒரு நாள் முழுவதும் 9 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஒரு வருடம் முழுவதும் தினசரி 2 ஜிபி நெட், இரவில் அன்லிமிட்டெட் நெட் அன்லிமிட்டெட் கால்கள் மற்றும் பொழுதுபோக்கு தளமான அமேசான் ப்ரைம் வீடியோ சேவைகளை அனுபவிக்க முடியும்.












Click it and Unblock the Notifications