வருது பட்ஜெட் போன்களின் ‘ராஜா’.. இந்த விலையில் இத்தனை வசதிகளோடு களமிறக்கும் ரெட்மி.. சான்ஸே இல்ல!
சென்னை: ரெட்மி நிறுவனம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி தமது லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட் போனான Redmi 13C மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
குறைந்த விலையில், டாப் பெர்பாமன்ஸுடன் பட்ஜெட் போன்களை வெளியிடுவதில் 'கில்லி'யான ரெட்மி, தமது புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு ரெட்மி 12 சீரிஸ் ஃபோன்களை வெளியிட்டு மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற ரெட்மி நிறுவனம், தற்போது 13 சீரிஸ் போன்களை வெளியிட உள்ளது. இந்தியாவில் வரும் 6ஆம் தேதி அறிமுகமாகும் இந்த ரெட்மி 13 C போனானது ஏற்கனவே வெளிநாடுகளில் அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் இந்த புதிய ரெட்மி 13C மாடல், 5g மற்றும் 4ஜி LTE என்று இரு மாடல்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை ரெட்மி நிறுவனம் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. செம ஸ்டைலிஷ் ஆன மாடலாக வரும் ரெட்மி 13 சீரிஸ், பட்ஜெட் ஸ்மார்ட் போன் என்றும் ரெட்மி தெரிவித்துள்ளது.
4GB RAM / 128 GB ROM, 6GB RAM / 128 GB ROM, 8GB RAM / 256 GB ROM, என மூன்று வேரியண்டுகளில் இந்த செல்போனை ரெட்மி நிறுவனம் வெளியிட உள்ளது. இதில் ரெட்மி மொபைலில் 5ஜி மாடல் ரூபாய் 15 ஆயிரம் என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அதே போல 4G LTE மாடல் பத்தாயிரம் ரூபாயில் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார் டஸ்ட் பிளாக் மற்றும் ஸ்டார் ஷைன் க்ரீன், லிலாக் ஆகிய நிறங்களில் இந்த மாடல்கள் கிடைக்கும்.
ரெட்மி 13C 5G மாடல் சிறப்பம்சங்கள்:
MediaTek's Dimensity 6100+ சிப்செட்
8 GB RAM
256 GB வரை இண்டர்னெல் மெமரி
18 W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கும்
5000 MAh பேட்டரி
6.74 இன்ச் HD+ டிஸ்பிளே
90 Hz ரெஃப்ரெஷ் ரேட்
450 nits பீக் ப்ரைட்னஸ்
50 + 2 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் செல்பி கேமரா
விர்ச்சுவல் ப்ராக்ஸிமிட்டி சென்சார்
அம்பியண்ட் லைட் சென்சார்
எலக்ட்ரானிக் காம்பஸ் வசதிகள் இடம்பெறும்

ரெட்மி 13C 4G LTE சிறப்பம்சங்கள்:
MediaTek Helio G85 சிப்செட்
6.74 இன்ச் LCD டிஸ்பிளே
90 Hz ரெஃப்ரெஷ் ரேட்
450 nits பீக் ப்ரைட்னஸ்
ஸ்டோரேஜ்: 4GB/ 128GB, 6GB/ 128GB, 8GB/ 256GB
18W சார்ஜிங் திறன் கொண்ட 5,000 mAh பேட்டரி
50+ 2 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் செல்பி கேமரா
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications