5ஜி தெரியும்.. அதென்ன 5.5ஜி.. 10 நொடியில் 5 படம் டவுன்லோட் பண்ணலாம்! அடித்து நொறுக்கும் ஜியோ!

Subscribe to Oneindia Tamil

மும்பை: நமது நாட்டில் இப்போது 5ஜி சேவை பெரும்பாலான முக்கிய ஊர்களுக்கு வந்துவிட்டது. இதற்கிடையே அடுத்த கட்ட பாய்ச்சலாக இப்போது ஜியோ நிறுவனம் 5.5ஜி என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதென்ன 5.5ஜி தொழில்நுட்பம்.. இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் செல்போன் மூலமாகவே இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் எல்லா தரப்பு மக்களிடமும் இணையத்தை எடுத்துச்செல்வதில் டெலிகாம் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

technology mobile jio

இப்போது நமது நாட்டில் எல்லா இடங்களிலும் 4ஜி வந்துவிட்டது. முக்கிய நகரங்களில் 5 ஜி கூட வந்துவிட்டது. இந்தச் சூழலில் தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இப்போது நமது நாட்டில் 5.5ஜி என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதென்ன 5.5ஜி:

5G-அட்வான்ஸ்டு என்றும் அழைக்கப்படும் இது, மொபைல் இணைய வசதியை மேலும் ஒருபடி மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான 5ஜி நெட்வொர்க்கை காட்டிலும் இணையம் வேகமாக இருக்கும். இப்போது சில பகுதிகளில் கவரேஜ் கிடைப்பதில் சிரமம் இருக்கும் சூழலில் அந்த சிக்கலும் சரி செய்யப்படும். இது யூசர்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

5.5ஜி என்பது 5ஜி தொழில்நுட்பத்தின் ஒரு மேம்பட்ட பதிப்பு எனச் சொல்லலாம்.. இது 3GPP கீழ் உருவாக்கப்பட்டது. அதிக வேகம், பரந்த கவரேஜ் மற்றும் மேம்படுத்தப்பட்ட அப்லிங்க் இணைப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் இது உருவாக்குகிறது. இந்த 5.5G நெட்வொர்க்குகளில் அதிகபட்சம் நொடிக்கு 10 ஜிபி வரை இணைய வேகத்தைப் பெறலாம். அதேபோல அப்லோட் வேகமும் நொடிக்கு 1 ஜிபி வரை இருக்கும்.

இணைய வேகம்:

ஜியோ மட்டுமின்றி உலகின் பல்வேறு நிறுவனங்களும் 5.5ஜி சேவையைச் சோதனை செய்து வருகின்றனர். உதாரணமாக, குவைத் நாட்டை சேர்ந்த ஜைன், பல்கேரியாவில் விவாகாம் உள்ளிட்ட நிறுவனங்கள் இதைச் சோதனை செய்தது. அப்போது தான் இணைய வேகம் அதிகபட்சம் நொடிக்கு 10 ஜிபி வரை சென்றுள்ளது.

இந்த ஒரு மேம்பட்ட தொழில்நுட்பத்தைத் தான் ஜியோ இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நெரிசலான பகுதிகளிலும், அவ்வளவு ஏன் மெட்ரோ சுரங்கத்திலும் கூட இணையச் சேவை கிடைக்கும். அதேநேரம் வெளிநாடுகளில் கிடைத்த அளவுக்கு நமது ஊரில் இணைய வேகம் கிடைப்பதில்லை.

10 நொடியில் 5 படம்:

வழக்கமான 5ஜி நெட்வோர்க்கில் நமது நாட்டில் நொடிக்கு 277.78 Mbps என்ற வேகத்தில் இணையம் கிடைக்கும். ஆனால், ஜியோ 5.5ஜி நெட்வோர்க்கில் அதிகபட்சம் 1,014.86 Mbps அதாவது கிட்டதட்ட 1ஜிபி வேகத்தில் நம்மால் இணைய வேகத்தைப் பெற முடியும். இது 5ஜி வேகத்தை விட 380% அதிகமாகும். ஒரு நொடிக்கு கிட்டதட்ட ஒரு ஜிபி என்றால் 10 நொடிகளில் நம்மால் ஹெச்டி தரத்தில் 5 முழு படங்களை டவுன்லோட் செய்ய முடியும்.

ஜியோவின் 5.5G நெட்வொர்க் மல்டி-செல் இணைப்பைக் கொண்டுள்ளது. அதாவது வழக்கமாக ஒரு மொபைல் ஒரு டவரில் இருந்து தான் சிக்னலை பெறும். அந்த டவரில் இருந்து வலிமையான சிக்னல் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே வேறு ஒரு டவருக்கு மாறும். ஆனால், 5.5ஜி தொழில்நுட்பத்தில் நமது கருவியால் ஒரே நேரத்தில் பல டவர்களில் இருந்து சிக்னலை பெறமுடியும். இதன் மூலம் இணைய வேகமும் சிறந்த கால் தரமும் உறுதியாகிறது.

முதற்கட்டமாக ஒன்பிளஸ் நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ள ஒன்பிளஸ் 13 மற்றும் 13ஆர் ஆகிய கருவிகளில் இந்த 5.5ஜி வசதி இருக்கிறது. வரும் காலங்களில் வெளியாகும் இதர செல்போன்களிலும் விரைவில் இந்த வசதி வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+