வெறும் ரூ.999 தான்.. 4 ஜி, கேமரா என கொட்டி கிடக்கும் வசதிகள்.. அம்பானி இறக்கிய ஜியோ பாரத் வி2 மொபைல்
டெல்லி: ஜியோ நிறுவனம் வெறும் 999 ரூபாய்க்கு அட்டகாசமான மொபைலை இப்போது இறக்கியுள்ளது. இதில் 4ஜி, கேமரா என்று அடிப்படையான அனைத்து வசதிகளும் இருக்கிறது.
அம்பானியின் ஜியோ நிறுவனம் அனைத்து தரப்பு மக்களிடமும் தங்கள் நிறுவனத்தை எடுத்துச் செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெலிகாம் நிறுவனத்துடன் சேர்ந்து மொபைல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அவர்கள் பட்ஜெட் விலையில் வெளியிடும் மொபைல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தே வருகிறது. அதன்படி ஜியோ நிறுவனம் இப்போது மேலும் ஒரு பட்ஜெட் மொபைலை சந்தையில் இறக்கியுள்ளது.
ஜியோ மொபைல்: ஜியோபாரத் V2 என்ற மொபைலை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த விலையில் 4ஜி இணையச் சேவையை அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து இந்த மொபைலை கொண்டு வந்துள்ளதாக ஜியோ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மொபைலை விற்பனை இன்று தொடங்கியது. அமேசான், ஜியோ போன்ற தளங்கள் மட்டுமன்றி நாடு முழுக்க பல கடைகளிலும் இந்த மொபைல் கிடைக்கிறது.
இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46வது ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் முக்கிய ஹைலைட்களில் ஒன்றாக இந்த ஜியோ பாரத் வி 2 மொபைல் இருந்தது. கார்பன் நிறுவனம் (Karbonn) தயாரிக்கும் இந்த ஜியோ பாரத் வி 2 ரூ.999க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆஷ் ப்ளூ மற்றும் சோலோ பிளாக் என இரண்டு வகை கலர்களில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணி முதல் ஜியோ மற்றும் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் இதன் விற்பனை ஆரம்பித்துவிட்டது.

என்ன வசதிகள்: ஜியோ பாரத் வி 2 என்ற இது ஒரு சிறிய ரக மொபைலாகும். 1.77-இன்ச் டிஎப்டி (TFT) டிஸ்ப்ளேவை கொண்ட இந்த மொபைலில் ஆடியோ இணைப்பிற்கு 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் வசதி இருக்கிறது. மேலும், இதில் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 0.3MP கேமராவும் இருக்கிறது. இந்த மொபைலை வைத்து டீசன்டாக போட்டோக்களை எடுக்கலாம். இந்த மொபைலில் 1,000mAh பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாழும் பல்வேறு மாநில மக்களின் தேவைக்கு ஏற்ப இந்த மொபைல் 23 மொழிகளையும் சப்போர்ட் செய்யும்.. இதனால் மொபைல் அல்லது இணையத்தைப் பயன்படுத்த ஆங்கிலம் அல்லது குறிப்பிட்ட மொழியை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற சிக்கலை ஜியோ நீக்கியுள்ளது. இந்த மொபைலின் ஸ்டோரேஜ்ஜை மைக்ரோ எஸ்டி கார்டு, அதாவது மெமரி கார்டு மூலம் 128 ஜிபியாக அதிகரிக்கலாம்.
மேலும், இந்த மொபைலில் யுபிஐ பேமெண்டுகளை சப்போர்ட் செய்யும் வகையில் ஜியோ பே வசதியும் இருக்கிறது. மேலும், இதில் ஜியோ சினிமா மற்றும் ஜியோ சாவன் உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளதாக ஜியோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ரீசார்ஜ் வசதி: இத்துடன் ஜியோ நிறுவனம் இந்த மொபைலுக்கு என பிரத்யேக இணைய பேக்குகளையும் வழங்குகிறது. 28 நாட்களுக்கு ரூ.123 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்தால், அன்லிமிடட் கால்களை பேசிக் கொள்ளலாம். அதேபோல 14ஜிபி டேட்டாவும் இதில் நமக்குக் கிடைக்கும். இது மட்டுமின்றி பல வகை ஜியோ செயலிகளைும் நாம் ரூ.123 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் பயன்படுத்திக் கொள்ளலாம்..
அதேபோல ஓராண்டிற்கு ரீசார்ஜ் செய்ய விரும்புவோருக்கும் தனி பேக் ஒன்றை வழங்குகிறது. இதில் நாம் ஆண்டுக்கு ரூ.1,234க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடட் கால் மற்றும் 168 ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல ஜியோ செயலிகளையும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications