ஜியோ வாடிக்கையாளர்களுக்கு செம நியூஸ்! மாதம் வெறும் ரூ.50 மட்டுமே! 5ஜி டேட்டாவை வாரி வழங்கும் அம்பானி

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி அன்லிமிட்டட் சேவையை வழங்கி வருவதால் இப்போது பலரும் 4ஜி மொபைலில் இருந்து 5ஜி மொபைலுக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில், ஜியோ நிறுவனம், 5ஜி அப்கிரேட் வவுச்சரை அறிமுகம் செய்துள்ளது. இதனை உங்கள் நண்பர்களுக்கும் 'கிஃப்ட்’ செய்து கொள்ளலாம்.

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை அன்லிமிட்டட் ஆக வழங்கி வருகின்றன. எனவே, வாடிக்கையாளர்கள் 5ஜி ஸ்மார்ட் போன்களுக்கு மாறி வருகின்றனர். 5ஜி அன்லிமிட்டட் இணைய வசதி மூலமாக, நாள் முழுக்க ஓடிடி தளங்களில் படங்கள், வெப் சீரிஸ்கள் பார்க்கலாம், கிரிக்கெட் மேட்ச் பார்க்கலாம் என்பதால் பலரும் 5ஜி மொபைல்களுக்கு மாறி வருகின்றனர்.

jio recharge mobile


ஜியோ நிறுவனம் முன்பு அனைத்து 5ஜி மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும், 5ஜி சேவையை அன்லிமிட்டட் இலவசமாக வழங்கி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 5ஜி சேவையை வழங்காமல், தினமும் 2 ஜி.பி மற்றும் அதற்கு மேல் டேட்டா பிளான்களை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 5ஜி சேவை என அறிவிக்கப்பட்டது. அதாவது, 349 ரூபாய் பிளானுக்கு மேல் தான் 5ஜி இலவசமாக கிடைக்கும்.

ரீசார்ஜ் கட்டண உயர்வுக்குப் பிறகு, மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிட்டு மலிவான ஆப்ஷன்களை யூசர்கள் தேடி வருகின்றனர். வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ பல திட்டங்களை குறைந்த விலையில் அளித்து வருகிறது. அந்த வகையில், 5ஜி வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஆச்சர்யமளிக்கும் வகையில், ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, ரூ.601 மதிப்புள்ள ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தை “அல்டிமேட் 5ஜி அப்கிரேட் வவுச்சர்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஒரு வருடம் முழுவதும் அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவை வழங்குகிறது. அதோடு மிக முக்கியமாக முன்பு 5ஜி சேவை வழங்காத ஜியோ பிளான்களுடனும் இதனை பயன்படுத்த முடியும்.

அதாவது, தினசரி 2 ஜிபி அல்லது அதற்கு அதிகமான டேட்டாவை வழங்கும் ஜியோ பிளான்களுடன் மட்டுமே ஜியோ 5ஜி இலவச டேட்டாவை வழங்கி வந்தது. 1.5 ஜிபி அல்லது 1 ஜிபி தினசரி டேட்டாவை பயன்படுத்தும் யூசர்கள், 5ஜி டேட்டாவை பெற முடியாத நிலை இருந்தது. இந்தச் சூழலில் தான் அவர்களும் பயன்படுத்தும் வகையில் ரூ.601க்கு 5ஜி அப்கிரேட் வவுச்சர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.601 5ஜி அப்கிரேட் வவுச்சர் என்பது மொத்தம் 12 மாதங்களுக்கான 5ஜி டேட்டா வவுச்சர்களை உள்ளடக்கிய திட்டம். அதாவது இந்த வவுச்சரை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.51, ரூ.101 மற்றும் ரூ.151 விலையுள்ள பூஸ்டர் பேக்குகள் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவை வழங்கும் பிளான் என்றால் ரூ.51, இரண்டு மாதங்களுக்கு 101, மூன்று மாதங்களுக்கு ரூ.151 விலையில் வவுச்சரை ரெடீம் செய்து கொள்ளலாம். ரூ.51 மதிப்புள்ள டேட்டா வவுச்சர் கிடைக்கும்.

இந்த வவுச்சரில் அன்லிமிட்டட் 5ஜி அணுகலுடன் கூடுதலாக 4ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது. உதாரணமாக, ரூ.51 திட்டத்தில் 3 ஜிபி 4ஜி டேட்டாவும், ரூ.101 திட்டத்தில் 6 ஜிபி டேட்டாவும், ரூ.151 திட்டத்தில் 9 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் இந்த வவுச்சர்களை ஒவ்வொரு மாதமும் அல்லது 2, 3 மாதங்களுக்கு ஒருமுறை My jio ஆப்பில் இருந்து ரெடீம் செய்துகொள்ள வேண்டும். ரூ.601 டேட்டா வவுச்சரை கிஃப்ட்டாக எந்தவொரு ஜியோ யூசருக்கும் அனுப்பவும் முடியும். இந்த வவுச்சரை MyJio account சென்று உங்கள் நண்பர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ கிஃப்ட் செய்ய முடியும்.

ஆனால் உங்கள் ஜியோ மொபைல் எண்ணின் கீழ் இந்த டேட்டா வவுச்சரை ஒருமுறை ஆக்டிவேட் செய்த பின்னர், தனித்தனியாக ரூ.51 மாதாந்திர வவுச்சர்களை டிரான்ஸ்பர் செய்ய முடியாது. ரூபாய் 601 அப்கிரேட் வவுச்சராக மொத்தமாகத்தான் கிஃப்ட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+