மலிவு விலை ரீசார்ஜ் பிளான் திரும்ப வருது.. வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஸ்வீட் ஷாக் கொடுத்த ஜியோ!
சென்னை: ஜியோ நிறுவனம் ரூ.199 ரீசார்ஜ் பிளானை தொடர்ந்து, தற்போது குறைந்த விலை ரீசார்ஜ் பிளான்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக மலிவு விலையில் மற்றொரு ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதுப்புது ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், எந்தவித டேட்டாவும் இல்லாமல், வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை மட்டுமே உள்ளடக்கிய ரூ.189 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில், தற்போது ரூ.189க்கு இலவச வாய்ஸ் கால் மற்றும் பிற டேட்டா சலுகைகளுடன் ஒரு மலிவு விலை திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது.
ஜியோ வழங்கும் ரூ.189 ப்ரீபெய்ட் பிளான், 28 நாள் வேலிடிட்டி உடன், 300 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதன்பிறகு 64Kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படும்.
கூடுதலாக, இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் மெம்பர்ஷிப் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேசமயம், ஜியோ சினிமா பிரீமியம் இந்த பிளானுடன் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரீசார்ஜ் திட்டம், விலை உயர்வுக்கு முன்பு 155 ரூபாய் பிளானாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த விலை ஏற்றத்துக்குப் பிறகு இப்போது அந்த பிளான் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை. ரூ.199 பிளானுக்கு அடுத்தபடியாக தற்போது மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மற்றொரு பிளான் தான் இந்த ரூ.189 ரீசார்ஜ் பிளான்.
அதே நேரத்தில் ரூ.199 பிளான், 18 நாள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஜியோ நிறுவனம், நீண்ட வேலிடிட்டியுடன் கூடிய மேலும் சில ரீசார்ஜ் பிளான்களை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications