பெரிதாக திட்டம் போடும் எலான் மஸ்க்.. இனி ஜியோ, ஏர்டெல் எல்லாம் தேவைப்படாது.. டைரக்ட்-டு-செல் தான்
வாஷிங்டன்: எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இப்போது அடுத்த பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டது. அவர்கள் இப்போது டைரக்ட்- டு- செல் என்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவுள்ளனர். அடுத்தாண்டு தொடக்கம் முதல் இது மெல்ல அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இந்த டைரக்ட்- டு- செல் திட்டமிட்டபடி வந்தால் டவரே இல்லாத பகுதிகளிலும் கூட அதிவேக இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என்று பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கீழ் ஸ்டார்லிங் இயங்கி வருகிறது.

சாட்டிலைட் மூலம் மொபைல் டவர்கள் இல்லாத இடத்திற்கு இணையச் சேவை தர வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாகும். இதற்கிடையே ஸ்டார்லிங்க் நிறுவனம் இப்போது தனது அடுத்த பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டது.
ஸ்டார்லிங்க்: ஸ்டார்லிங்க் நிறுவனம் நேரடியாக சாட்டிலைட்- மொபைல் இடையே தொடர்பை ஏற்படுத்தி அதன் மூலம் இணையச் சேவையை பயன்படுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது இதற்கு முன்பு வரை ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்குத் தனியாகச் சிறிய டிஷ் போன்ற ரிசீவர் போன்ற கருவியை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். அந்த கருவியின் சைஸ் சிறியது என்றாலும் கூட அது இருந்தால் மட்டுமே ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்த முடியும்.
ஆனால், இப்போது அந்த சிறிய டிஷ் போன்ற கருவி இல்லாமலேயே நேரடியாக தங்கள் சேவையைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையே ஸ்டாரிலிங்க் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களிலிருந்து ஸ்மார்ட்போன்களுக்கு நேரடி சிக்னல் போகும். செல்போன் டவர்கள் எதுவும் தேவைப்படாது என்பதால் இதற்கு முன்பு கவரேஜ் இல்லாத பகுதிகளில் கூட இந்த தொழில்நுட்பம் மூலம் இணையச் சேவையைப் பெறலாம்.
எலான் மஸ்க்: முதற்கட்டமாக பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவை செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எலான் மஸ்க்கும் தனது ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.
இணைய வேகம்: உலகெங்கும் சாட்டிலைட் மூலம் இணையச் சேவையை வழங்க வேண்டும் என்பதற்காக ஸ்டார்லிங்க் அதிவேகமாகத் தனது சாட்டிலைட்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. போதுமான சாட்டிலைட்களை கொண்டு இருப்பதால் இணைய வேகம் குறையாமல் ஸ்டார்லிங்கால் பார்த்துக் கொள்ள முடிகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் ஃபைபர் சேவையில் கூட தனக்கு 50-60Mbps வேகத்தில் தான் இணையச் சேவை கிடைக்கும் என்றும் ஆனால் ஸ்டார்லிங்கில் 250-350 Mbps வேகத்தில் இணையச் சேவை கிடைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்லிங் இப்போது அறிமுகப்படுத்தியுள்ள டைரக்ட்-டு-செல் தொழில்நுட்ப ரீதியாக ஒரு மிகப் பெரிய பாய்ச்சல் என்றே சொல்லலாம். இந்த தொழில்நுட்பம் மூலம் செல்போன் டவர் தேவையின்றி நேரடியாக இணையச் சேவையைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் கவரேஜ் இல்லாத பகுதிகளிலும் கூட தடையற்ற இணையச் சேவையைத் தர முடியும். அடுத்தாண்டு முதல் இந்த தொழில்நுட்பம் படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.
அதிகரிக்கும்: அமெரிக்காவில் இப்போது ஸ்டார்லிங்க் மூலம் அதிகபட்சமாக 220 Mbps வேகத்தில் இணையச் சேவையைக் கிடைக்கிறது. அதேநேரம் இதை 2 Gbps வேகத்திற்கு அதிகரிக்க வேண்டும் என்பதே ஸ்டார்லிங்கின் அடுத்த திட்டமாக இருக்கிறது. இதற்குத் தேவையான சாட்டிலைட்களையும் அவர்கள் ஏற்கனவே அனுப்பத் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது..
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications