"இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.." எங்க இருந்தாலும் தட்டி தூக்கலாம்.. சாம்சங்கின் புது கருவி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆப்பிள் ஏர்டேக் கருவிகளுக்குப் போட்டியாக சாம்சங் நிறுவனம் ஸமார்ட் டேக் கருவியை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த 2021இல் ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஏர்டேக் சாதனத்தை அறிமுகப்படுத்தியது .. இது ஆப்பிளின் ஒரு வித டிராக்கிங் சாதனமாகும். நாம் ஒரு பொருளைத் தொலைத்தால் அதை கண்டறிய இந்த ஏர்டேக் பயன்படுத்தப்படுகிறது.

 Samsung has launched its Galaxy SmartTag 2 rivalary to Apple airtag

இது பார்க்க ஒரு சின்ன நாணயம் போலவே இருக்கும். இதை நாம் மொபைல், நகை, செல்ல பிராணிகள் என எந்தவொரு பொருளிலும் வைக்கலாம். நமது பொருள் இவை தொலைந்துவிடுகிறது என வையுங்கள்..

புது கருவி: அப்போது நாம் அதில் இருந்து வெளியாகும் ப்ளுடூத் சிக்னல்களை வைத்து அது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறியலாம். இதற்காக ஆப்பிள் நிறுவனம் Find My என்ற நெட்வொர்க்கை ஆரம்பித்துள்ளது. இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கிடையே ஆப்பிளுக்கு போட்டியாக சாம்சங் ஸ்மார்ட் டேக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் டேக் 2 என்ற இந்த மாடல் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 Samsung has launched its Galaxy SmartTag 2 rivalary to Apple airtag

இந்த புதிய கேலக்ஸி ஏர் டேக் 2, சாம்சங் நிறுவனத்தின் முந்தைய ஏர் டேக் பதிப்பைவிடச் சிறப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த புதிய மாடலால் பழைய மாடலை விட வேகமாக இயங்க முடியும். நமது பொருட்களைக் கண்காணிக்க இது பெரியளவில் உதவும். அளவில் சிறியதாகவும் கச்சிதமாகவும் இருக்கும் இந்த ஏர்டேக்கை வைத்து நாம் பல்வேறு வேலைகளைச் செய்யலாம்.

கேலக்ஸி டேக் 2: இந்த சாம்ஸ்சங் கேலக்ஸி ஏர் டேக் 2 water-resistant வசதியுடன் வருகிறது. அதாவது இதை நாம் தண்ணீரில் போட்டாலும் எதுவுமே ஆகாது. இதைப் பயன்படுத்தவும் கூட ரொம்பவே ஈஸி. நாம் SmartThings Find செயலியை டவுன்லோட் செய்து அதன் மூலம் இதைப் பயன்படுத்தலாம்.. இது தொலைந்து போகும் பொருட்களை எளிதாகக் கண்டுபிடிக்க உதவும்.

இந்த கேலக்ஸி ஏர் டேக் 2 கருவியில் காம்பஸ் வியூ என்ற ஆப்ஷன் இருக்கிறது. இதன் மூலம் நாம் தொலைந்து போன பொருட்களை மிக ஈஸியாக கண்டுபிடிக்கலாம். இந்த ஸ்மார்ட் டேக் 2 கருவியில் புதிய லாஸ்ட் மோட் என்ற வசதியும் இருக்கிறது. அதாவது நீங்கள் உங்கள் பேக்கில் இந்த ஸமார்ட் டேக் கருவியை இணைத்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம்..

எப்படி வேலை செய்யும்: அந்த பேக் தொலைந்துவிட்டது என்றால் லாஸ்ட் மோட் வசதி இருப்பதால் உங்கள் பெயர் மற்றும் தொடர்பு கொள்ளும் தரவுகள் அதில் தெரியும். இதற்காக NFC டிஸ்ப்ளேவை அது கொண்டுள்ளது. அந்த பேக்கை கண்டுபிடிக்கும் ஒருவர் அதை ஸ்கேன் செய்தால் போதும் உங்கள் தகவல்கள் எல்லாம் அவருக்குக் கிடைக்கும். இதன் மூலம் நமது பொருள் எங்கே தொலைந்து போனாலும் அதை நாம் ஈஸியாக மீட்டுவிடலாம்.

இந்த ஸ்மார்ட் டேக் 2இல் பவர் சேவிங் மோட் மூலம் அதன் பேட்டரி ஆயுளை 700 நாட்கள் வரை நீட்டிக்கவும் முடியும். இது முந்தைய ஸ்மார்ட் டேக் மாடலை விட இரண்டு மடங்கு அதிகமாகும். பவர் சேவிங் மோட் இல்லை என்றாலும் கூட சாதாரணமாகவே இதன் பேட்டரி ஆயுள் 500 நாட்களாக இருக்கும். இது இது முந்தைய மாடல்களை விட 50 சதவீதம் அதிகமாகும்.

விலை: சாம்சங்கின் இந்த கேலக்ஸி ஸ்மார்ட் டேக் 2இன் விலை ரூ.2,799ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. என்னது இந்த சின்ன கருவிக்கு இந்த ரேட்டா என நீங்கள் ஷாக் ஆகலாம். ஆப்பிள் தனது ஏர்டேக்கை 3490 ரூபாய்க்கு விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது. இந்த ஆப்பிள் ஏர்டேக் வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு கலர்களில் வருகிறது.கேலக்ஸி ஸ்மார்ட் டேக் 2 சாம்சங்கின் ஆன்லைன் ஸ்டோர், அமேசான் மற்றும் சாம்சங் பிரத்தியேக ஸ்டோர்களில் வாங்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+