உங்க வீட்டு ஃபேன் மெதுவா சுத்துதா? இந்த 5 டிப்ஸை மட்டும் கவனிங்க! இனி ஃபுல் ஸ்பீடு தான்!
சென்னை: கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் நம் எல்லோருக்கும் இப்போது மிக முக்கியமான பிரச்சனை வீட்டில் இருக்கும் வெப்பம் தான். வீட்டுக்கு வந்ததுமே ஃபேன் ஸ்விட்சை தான் அழுத்துவோம். மின் விசிறிகள் மெதுவாக இயங்கினால் அதுவே நமக்கு பெரும் மன உளைச்சலை கொடுக்கும். உங்கள் சீலிங் ஃபேன் மெதுவான இயங்கினால் அதனை வேகமாகச் சுற்ற வைப்பது எப்படி என பார்க்கலாம்..
கோடையின் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பலரும் ஏசி, ஏர் கூலர்களை வாங்க கடைகளுக்கு படையெடுக்கின்றனர். பெரும்பாலானோர் ஏசி வாங்க முடியாத சூழலில் உள்ளவர்கள். நடுத்தர மற்றும் ஏழை மக்களை வெப்பத்தில் இருந்து சற்று காப்பது மின் விசிறிகள் தான்.

ஃபேன் மெதுவா சுத்துதா?
ஃபேன்கள் சுற்றும் வேகம் நாளடைவில் குறையத் தொடங்குவது வழக்கம். மின்விசிறி மெதுவாக இயங்க ஆரம்பித்தால், நமது ஹால், ரூம் வெப்பமாகிவிடும். உடனே பொதுமக்கள் தங்கள் மின்விசிறிதான் பிரச்சனை என நினைத்து அதனை மாற்ற வேண்டும் எனக் கருதுகின்றனர்.
ஆனால் அதற்கு முன்பு சில விஷயங்களை கவனிக்க வேண்டும். மின்விசிறியில் சிறிய குறைபாடு கூட அதன் வேகத்தை குறைக்கலாம். எனவே, மின்விசிறியின் வேகத்தை அதிகரிக்க சில டிப்ஸ்களை பின்பற்றலாம்.
முக்கிய டிப்ஸ்
1. ஃபேன் பிளேடுகள் வளைந்தோ, நெளிந்தோ இருந்தாலும், சரியாக காற்று வராது. மின்விசிறி மெதுவாக சுற்றுவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே ஃபேன் இறக்கைகள் வளைந்தோ, நெளிந்தோ இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
2. ஃபேனில் அழுக்கு, தூசி அதிகம் சேர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மின்விசிறியின் வேகம் குறைய வாய்ப்புள்ளது. எனவே அடிக்கடி மின்விசிறியை சுத்தம் செய்யவேண்டும். உலர்ந்த துணி கொண்டும், அதன் பின் ஈரத்துணி கொண்டும் ஃபேனை சுத்தம் செய்ய வேண்டும்.
3. ஃபேன் வேகமாக சுற்றுவது இல்லை என்றால், அதன் கண்டென்ஸர் (Condenser) பழுதாகி இருக்க வாய்ப்பு உள்ளது. ஃபேன் வாங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால், கட்டாயம் அதில் உள்ள கன்டென்ஸர் கருவியை மாற்ற வேண்டும். இது ரூபாய் 60 முதலே எலக்ட்ரிக்கல் ஸ்டோர்களில் கிடைக்கும்.
ரெகுலேட்டர்
4. ஃபேன் ரெகுலேட்டர்தான் மோட்டார் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. இது அதிக நாட்கள் பயன்படுத்தும்போது குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதனை கண்டறிந்து மாற்றுவது முக்கியம்.
5. மின்விசிறியின் இறக்கையில் உராய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் மின்விசிறியின் வேகத்தை குறைக்கும். சீலிங்கில் இருந்து தகுந்த அளவில் கம்பி அமைக்கப்பட்டு அதில் ஃபேன் பொருத்தப்பட்டிருப்பதும், ஃபேன் நீண்ட நாள் உழைக்க அவசியமானது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications