ஒன்பிளஸ் போனை பயன்படுத்துறீங்களா? புதிதாக ஏற்படும் பிரச்சனை.. உடனே இதை படிங்க!
சென்னை: ஒன்பிளஸ் போன்களில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக அவ்வப்போது புகார்கள் வரும் நிலையில் தற்போது புதிய பிரச்சனை ஒன்று ஒன்பிளஸ் போன்களில் ஏற்பட தொடங்கி உள்ளன.
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகும் போன் மாடல்களில் ஒன்று ஒன்பிளஸ் போன். ஒன்பிளஸ் போன் 6, 7, 8 போன்ற மாடல்கள், ஒன்பிளஸ் போன் சிஇ. ஒன்பிளஸ் போன் நோர்ட். ஒன்பிளஸ் போன் நோர்ட் லைட் போன்ற மாடல்கள் பல ஒன்பிளஸ் போனில் உள்ளன.

ஒன்பிளஸ், சீனாவின் குவாங்டாங், ஷென்சென் நகரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு சீன நுகர்வோர் மின்னணு உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். இது ஓப்போவின் துணை நிறுவனமாகும். ஓப்போ நிறுவனம் இந்தியாவில் பெரிதாக சாதிக்க முடியவில்லை என்றாலும் அதன் துணை நிறுவனமான ஒன்பிளஸ் இந்தியாவில் டாப்பில் உள்ளது.
ஒன்பிளஸ் போன்களில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக அவ்வப்போது புகார்கள் வருவது வழக்கம். உதாரணமாக இந்த போன்களில் அப்டேட் செய்யப்பட்ட பின் ஸ்கிரீன் நடுவில் கோடு வருவதாக புகார்கள் வைக்கப்படுவது வழக்கம்.
பலருக்கும் பச்சை நிறத்திலும், கருப்பு நிறத்திலும் ஸ்கிரீனில் கோடு ஏற்பட தொடங்கி உள்ளது. இது எத்தனை முறை அப்டேட் செய்யப்பட்டாலும் போவது இல்லை என்று ஒன்பிளஸ் யூசர் புகார்கள் வைக்கின்றனர். இந்த நிலையில் தற்போது புதிய பிரச்சனை ஒன்று ஒன்பிளஸ் போன்களில் ஏற்பட தொடங்கி உள்ளன.
புதிய பிரச்சனை: அதன்படி ஒன்பிளஸ் போன் பலவற்றில் திடீரென ஸ்கிரீன் கருப்பு நிறம் ஆகும் பிரச்சனை ஏற்பட தொடங்கி உள்ளது. லோ எண்ட் மாடல் என்றாலும் சரி ஹை எண்ட் மாடல் என்றாலும் சரி. பல்வேறு மாடல்களில் இந்த பிரச்சனை ஏற்பட தொடங்கி உள்ளது.
போன் வேலை செய்யும், பாடல்கள் ஓடினால் ஸ்பீக்கரில் கேட்கும். ஆனால் ஸ்கிரீன் மட்டும் கருப்பாக இருக்கும். ஸ்கிரீன் மட்டும் இயங்காது. சில மணி நேரங்களில் இந்த பிரச்சனை சரியாகி மீண்டும் ஸ்கிரீன் இயங்க தொடங்கும். இந்த பிரச்சனை திடீரென ஒன்பிளஸ் போன்களில் அடிக்கடி ஏற்பட தொடங்கி உள்ளது.
எப்படி சரி செய்வது?: இதை சரி செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.
1. மொத்தமாக ஒன்பிளஸ் ஸ்டோரில் கொடுத்து அதன் சாப்ட்வேரை மாற்ற முடியும்.
2. ஒன்பிளஸ் போனில் பிளாஷ் செய்து பார்க்கலாம்.
3. ஒன்பிளஸ் போனில் ஹார்ட் அல்லது சாப்ட் ரீசெட் செய்யலாம்.
4. போனில் அதிகம் இடம் பிடிக்கும் செயலிகளை டெலிட் செய்துவிட்டு, ஹாட்ஸ் ஸ்பாட் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துவது.
போன்றவற்றை செய்து இதை சரி செய்ய முயற்சிக்கலாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications