அம்பானிக்கு செக் வைக்கும் எலான் மஸ்க்? ஸ்டார்லிங்க் ரீசார்ஜ் கட்டணம் எவ்வளவு! ஜியோவை விட கம்மியா?
டெல்லி: எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் விரைவில் இந்தியாவில் சேவையைத் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டார்லிங்க் மூலம் தொலைதூர கிராமங்களிலும் இணையச் சேவை கிடைக்கும் என்றாலும் இந்தியாவைப் பொறுத்தவரைக் கட்டணம் தான் முக்கியம். எனவே, சர்வதேச அளவில் இப்போது ஸ்டார்லிங்க் கட்டணம் என்னவாக இருக்கிறது. இது ஏர்டெல் ஜியோ கட்டணத்தை விட அதிகமாக இல்லை குறைவா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் இணையம் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. இந்தியாவில் இப்போது ஏர்டெல், ஜியோ, வோடபோன், பிஎஸ்என்எல் ஆகிய 4 நிறுவனங்கள் மட்டுமே டெலிகாம் சந்தையில் உள்ளன.

ஸ்டார்லிங்க்: அடுத்த கட்டமாக மத்திய அரசு சாட்டிலைட் வழி இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களை அனுமதிக்கவுள்ளது. சர்வதேச அளவில் இதுபோல சாட்டிலைட் மூலம் இணையச் சேவை வழங்கும் முக்கிய நிறுவனமாக எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இருக்கிறது. இதனால் இந்தியாவில் ஸ்டார்லிங்க் தனது சேவையைத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படிச் செயல்படுகிறது: பொதுவாக நமது நாட்டில் பைஃபர் கேபிள்கள் மூலமாகவும் டவர்கள் மூலமாகவும் இணையச் சேவையை வழங்கப்படுகிறது. ஆனால், ஸ்டார்லிங்க் நிறுவனம் பூமியைச் சுற்றிலும் தனது சாட்டிலைட்களை நிலைநிறுத்தியுள்ளது. லோவர் ஆர்பிட் எனப்படும் இடத்தில் சாட்டிலைட்கள் இருக்கும் நிலையில், அதன் மூலமாகவே ஸ்டார்லிங்க் இணையச் சேவை வழங்குகிறது. இதனால் தொலை தூரக் கிராமங்களுக்குக் கூட இணையச் சேவை வழங்க முடியும். இப்படி தான் ஸ்டார்லிங்க் செயல்படுகிறது.
சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம்.. என்ன தான் ஸ்டார்லிங்க் மூலம் தொலைதூர கிராமங்களுக்கும் இணையச் சேவை கிடைக்கும் என்றாலும் அதன் விலை என்னவாக இருக்கும் என்பதே இங்குப் பலருக்கும் முதல் கேள்வியாக இருக்கும். ஏனென்றால், இந்தியாவில் எவ்வளவு வசதி இருந்தாலும் விலை ரொம்பவே முக்கியம். ரேட் குறைவாக இருந்தால் மட்டுமே இந்தியர்கள் புதிய சேவையைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள். நம்ம ஊரில் ஜியோ வந்த போது கூட முதலில் அன்லிமிடட் இணையச் சேவையை இலவசமாகவே வழங்கியது குறிப்பிடத்தக்கது.
விலை எவ்வளவு: தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பிராட்பேண்ட் கனெக்ஷனின் (அதாவது ஆபீஸ் மற்றும் வீடுகளில் வைஃபைக்காக போடுவோமே அது) ரீசார்ஜ் கட்டணம் சராசரியாக ரூ. 800 முதல் ரூ. 1000 வரை இருக்கிறது. அதை விட குறைவான ரேட்டிலும் கூட பிளான்கள் இருக்கிறது என்ற போதிலும் சராசரியாக மக்கள் இந்த ரீசார்ஜ் திட்டத்தையே தேர்வு செய்கிறார்கள்.
மறுபுறம் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்கின் ரீசார்ஜ் கட்டணம் இதை விட 3 மடங்கு அதிகமாகும். சர்வதேச அளவில் 40- 50 டாலராக ஸ்டார்லிங்கின் சராசரி கட்டணம் இருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 3373 முதல் 4217 வரை இருக்கிறது. எனவே, தற்போதைய சூழலில் ரேட்டை வைத்துப் பார்க்கும் போது ஏர்டெல், ஜியோ ஆகியவற்றின் கட்டணமே குறைவாக இருக்கிறது.
குறையுமா: அதேநேரம் பெரும்பாலான சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரும் போது வழக்கமாக அதன் ரேட்டை குறைக்கவே செய்யும். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் லாபத்தைக் குறைத்துக் கொண்டாலும் கூட அதிக பேர் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கினால் பெரிய லாபத்தை அள்ள முடியும். இதனால் பல சர்வதேச நிறுவனங்களும் கூட இந்தியாவில் தங்கள் சேவையைக் குறைந்த விலைக்கே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, எலான் மஸ்கும் கூட இந்தியாவில் ஸ்டார்லிங்க் ரீசார்ஜ் கட்டணத்தைக் குறைக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications