துணிக்கடைக்காரர்கள் இனிமேல் மாடலிங் போட்டோ ஷுட் நடத்த கஷ்டப்பட வேண்டாம்.. வந்தாச்சு அழகான மாடல் ஏஐ
ஸ்டாக்ஹோம்: துணிக்கடைக்காரர்கள் இனிமேல் மாடலிங் போட்டோ ஷுட் நடத்த கஷ்டப்பட வேண்டாம்; அழகான மாடல் ஏஐக்களை எளிதாக உருவாக்கும் தொழில்நுட்பம் வந்துவிட்டதாக ஏஐ தொழில்நுட்ப நிபுணர் செந்தாழல் ரவி தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏஐ சூழ் உலகம் என்பது இப்போது நிஜமாகிவிட்டது. ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தில் போர் புரிய ரோபோக்களை தயாரிக்க வேண்டும் என்று கூறுவார்கள். விரைவில் அது சாத்தியம் ஆகும் என்பது உறுதியாகி உள்ளது. அதேபோல் அந்த படத்தில் எந்திரனே காதலில் விழுவது போன்று எடுத்திருப்பார்கள். வரும் காலத்தில் அதுவும் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை..

ஏனெனில் இன்றைக்கு யார் மாதிரி வேண்டுமானாலும் ஏஐக்களை உருவாக்க முடியும். அந்த ஏஐ உங்களுடன் உரையாடும், உங்களுக்கு வேண்டிய தகவல்களை தரும், உங்களுக்கு உதவி செய்யும். கவிதை எழுதும், கதை எழுதும், உங்களது ஹோம் ஒர்க்கை பண்ணும். உங்களுக்கு கணக்கு வழக்கில் உதவும்.. எந்த மொழியில் இருந்தாலும் உங்களுக்கு உங்கள் மொழியில் விஷயத்தை காட்டும். சாப்பாடு பரிமாறும், ரோபோக்கள் இந்த உலகத்தை ஆளப்போகிறது. அடுத்த 10 வருடங்கள் ரோபோக்கள் மற்றும் ஏஐக்களின் காலமாக உருவெடுக்கப்போகிறது. கம்ப்யூட்டர்களுக்கு ஒரு காலம் இருந்தது. மொபைல்களின் காலமும் இப்போது இருக்கிறது. அடுத்த வரப்போவது ஏஐக்களின் காலம்.
ஏஐ தொழில்நுட்பம் தெரிந்தவர்களே உலகை ஆள்வார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அதுதான். நம்முடைய பெரும்பாலான வேலைகளை ஏஐக்களும் ரோபோக்களும் செய்ய போகின்றன. இதுவரை மனிதன் தான் எல்லா வேலைகளையும் செய்து வந்தான். அவனுக்கு உதவவே தொழில்நுட்பங்கள் இருந்தன. இனி ஏஐக்கு உதவத்தான் மனிதன் தேவைப்பட போகின்றான்.
வெறும் கீ கொடுத்த பொம்மையாக அல்லாமல் சிந்தித்து செயல்படக்கூடிய ரோபோக்களும் ஏஐக்களும் உருவாகி வருகின்றன இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பற்றி யாருக்குமே தெரியவில்லை. அதேநேரம் ஒன்று மட்டும் உறுதி. சாப்பாடு பரிமாறுபவர் முதல் சாப்ட்வேர் என்ஜினியர் வரை, ஆட்டோ ஓட்டுபவர் முதல் ஆட்டோ மொபைல் என்ஜினியர் வரை அத்தனை பேர் வேலையையும் ஏஐக்களும் ரோபோக்களும் செய்ய போகின்றன. பல கோடி மக்களின் வேலையை காலி செய்ய போகிறது என்பது நிஜம்.
போட்டோஷாப், கிராபிக்ஸ், மார்பிங், வாய்ஸ் மாற்றுதல், அசலை போன்ற போலியான நபர்களை வீடியோவில் உருவாக்குவது, ஒருவரது குரலை அப்படியே உருவாக்குவது, என எல்லா வேலையும் ஏஐ செய்து வருகிறது. செய்திகளும் மக்களுக்கு வாசிக்க தொடங்கிவிட்டது.
இந்நிலையில் தொழில்நுட்ப நிபுணர் செந்தாழல் ரவி தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், துணிகடைக்காரர்கள் இனிமேல் மாடலிங் போட்டோ ஷுட் நடத்த கஷ்டப்பட வேண்டாம். ஒரு நல்ல கணினி இருந்தால் போதும். stable diffusion லோக்கலில் ரன் ஆகிறது, ஆயிரக்கணக்கான படங்களை சிறப்பான தரத்தில் உருவாக்கி கொள்ளலாம். காத்திருக்க நேரம் இல்லாததால் ஒரு நிமிடத்தில் உருவாக்கிய படங்கள். இதில் நீங்கள் கொடுக்கும் சேலை டிசைன் உடன் ஒரு மாடல் கொடுத்து விட்டால் போதும்." என்று கூறியுள்ளார்.
துணி கடை காரர்கள் இனிமேல் மாடலிங் போட்டோ ஷுட் நடத்த கஷ்டப்பட வேண்டாம். ஒரு நல்ல கணினி இருந்தால் போதும். stable diffusion லோக்கலில் ரன் ஆகிறது, ஆயிரக்கணக்கான படங்களை சிறப்பான தரத்தில் உருவாக்கி கொள்ளலாம். காத்திருக்க நேரம் இல்லாததால் ஒரு நிமிடத்தில் உருவாக்கிய படங்கள். இதில்… pic.twitter.com/5PiQNRNXYy
— Senthazal Ravi 🇸🇪 (@senthazalravi) December 14, 2023
தனது இன்னொரு பதிவில், செயற்கை நுண்ணறிவியல் டிவி நியூஸ் வாசிப்பாளர்கள் என்ற இனத்தை ஒழிக்க இருக்கிறது. ஒரே செய்தி வாசிப்பாளர் - நியூஸ் ஆங்கர் உலகின் அத்தனை மொழியையும் பேசுவார், மார்ஸ் பற்றிய செய்தியை மார்ஸ் கிரகத்தில் நின்றுகொண்டு சொல்வார், ஏன் தமிழும் பேசுவார். இந்த வீடியோவில் 1:40 - 1:50 பாருங்க. என்று வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் உள்ள அனைத்து செய்திவாசிப்பாளர்களும் ஏஐ என்பது தான் ஆச்சர்யமான உண்மை.
செயற்கை நுண்ணறிவியல் டிவி நியூஸ் வாசிப்பாளர்கள் என்ற இனத்தை ஒழிக்க இருக்கிறது. ஒரே செய்தி வாசிப்பாளர் - நியூஸ் ஆங்கர் உலகின் அத்தனை மொழியையும் பேசுவார், மார்ஸ் பற்றிய செய்தியை மார்ஸ் கிரகத்தில் நின்றுகொண்டு சொல்வார், ஏன் தமிழும் பேசுவார். இந்த வீடியோவில் 1:40 - 1:50 பாருங்க. pic.twitter.com/2WNZgP1PTe
— Senthazal Ravi 🇸🇪 (@senthazalravi) December 13, 2023
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications