உங்க ஆதார் கார்டு தொலைஞ்சு போச்சா.. உடனே இதை செய்யுங்க.. இல்லைனா பெரிய பிரச்சினை ஆகிடும்
டெல்லி: இன்றைய காலத்தில் ஆதார் அட்டை ரொம்பவே முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்ட நிலையில், அது தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் பார்க்கலாம்.
இன்று நமது நாட்டில் தவிர்க்கவே முடியாத ஒரு ஆவணமாகிவிட்டது ஆதார். நலத்திட்டங்கள், உதவித் தொகை என எந்தவொரு திட்டத்தையும் பெற இப்போது ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆதாரை பாதுகாப்பாக நாம் வைத்திருக்க வேண்டும்.

இருப்பினும், எதிர்பாராத காரணங்களால் ஆதாரை தொலைத்துவிட்டால் உடனடியாக நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் சில இருக்கிறது. ஆதார் தொலைந்துவிட்டால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் மீண்டும் ஆதாரை பெற வேண்டும். இல்லையென்றால் நமக்குத் தான் நலத்திட்டங்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
தொலைந்து போனால்: ஆதார் கார்டு தொலைந்து போனால் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என்று இரு வழிகளிலும் நம்மால் புதிய ஆதாரை பெற முடியும். எந்தவொரு நபரும் தங்கள் ஆதார் எண், பதிவு ஐடி, பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பர் அல்லது மெயில் ஐடியை பயன்படுத்தி ஆதாரை மீட்டெடுக்கலாம். உதய் தளத்திற்குச் சென்று நாம் தொலைந்த ஆதாரை கோரி விண்ணப்பிக்கலாம்.
நம்மிடம் இருக்கும் ஆதார் தொலைந்து பயன்படுத்தவே முடியாத அளவுக்கு மோசமானாலும் கூட இதைப் பயன்படுத்தி நாம் ஆதார் கார்டை பெறலாம். இதுபோன்ற நேரங்களில் நாம் இ- ஆதார் மற்றும் ஆதார் அட்டையை பெறுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
இஆதார்: இ ஆதார் பெற ஆதார் எண்ணைத் தெரிந்திருந்தால் போதும்.. உதய் தளம் அல்லது mAadhaar செயலியில் சென்று நேரடியாக இ-ஆதாரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்ட இந்த இ ஆதாரை பல்வேறு சேவைகளுக்கும் ஆதார் கார்டை போலவே ஒரு ஆவணமாகப் பயன்படுத்த முடியும்.
இ ஆதாரை பெற முதலில் myaadhaar.uidai.gov.in/ என்ற உதய் அமைப்பின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்குச் செல்லவும். அங்கே உள்ள Download Aadhaar என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு உங்கள் ஆதார் எண் மற்றும் அங்கே தெரியும் கேப்ட்சாவை டைப் செய்யவும். தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTPஐ அதில் டைப் செய்து Submit என்பதை கிளிக் செய்யவும். உடனடியாக உங்கள் இ-ஆதார் பிடிஎப் வடிவில் டவுன்லோட் ஆகும்.
எம்-ஆதார் செயலி மூலம்: அதேபோல எம்-ஆதார் என்ற செயலியில் இருந்தும் நீங்கள் இ ஆதாரை டவுன்லோட் செய்யலாம். முதலில் இதற்காக இந்த mAadhaar செயலியைக் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யுங்கள். ஆதார் எண் மற்றும் நமது கைரேகையை வைத்து அதில் லாகின் செய்ய வேண்டும். பிறகு அதில் "My Aadhaar"க்கு சென்று அதில், "Download Aadhaar" என்பதில் உள்ள "e-Aadhaar"ஐ டவுன்லோட் செய்யுங்கள். உங்கள் மொபைலுக்கு வரும் ஒடிபியை பதிவிட்டால், பிடிஎப் வடிவில் இ ஆதார் டவுன்லோட் ஆகும்.
அதேபோல ஆதார் கார்டு தொலைந்து போனாலும் நாம் புது பிவிசி ஆதார் கார்ட்டை பெறலாம், இதற்காக நாம் உதய் தளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு நாம் கட்டணமாக ரூ.50ஐ செலுத்த வேண்டும். வழக்கமான ஆதாரை விட இந்த PVC கார்டில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்க் வலுவாக இருக்கும் என்பதால் இது ஆதாருக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும்.
ஆதார் கார்டு: இதற்கு நாம் முதலில் uidai.gov.in/ தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே "My Aadhaar" என்பதில் சென்று "Order Aadhaar PVC Card" பிறகு "Order Now" என்பதை க்ளிக் செய்ய வேண்டும். பிறகு உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை பதிவு செய்யுங்கள். Proceedஐ கிளிக் செய்யவும். அதில் உங்கள் முகவரி மற்றும் மொபைல் எண்ணை டைப் செய்து Submit என்பதை கிளிக் செய்தால் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒடிபி வரும். அதை டைப் செய்த பிறகு Verify கிளிக் செய்யவும்.
அதில் நாம் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். "Pay Now"க்கு சென்று பணத்தைச் செலுத்துங்கள். அதைத் தொடர்ந்து கன்பர்மேஷன் மெசேஜ் வரும். அதைத் தொடர்ந்து உங்கள் முகவரிக்கு 15 நாட்களில் ஆதார் கார்டு அனுப்பப்படும்.












Click it and Unblock the Notifications