அதிமுக, திமுக கோட்டையைத் தகர்த்த விஜய்யின் அல்காரிதம்.. 'இன்ஸ்டாகிராம்' மூலம் 'மாஸ்டர்' ஸ்கெட்ச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் 50 ஆண்டுகால திராவிட ஆதிக்கத்தை உடைத்து, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று 'தனிப்பெரும்' சக்தியாக உருவெடுத்திருக்கிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இந்த இமாலய வெற்றிக்கு பின்னால் இருப்பது பணபலமோ அல்லது சாதி பலமோ கிடையாது. அது விஜய்யின் 'டிஜிட்டல் ஆயுதம்'தான். 'இன்ஸ்டாகிராம்' வைத்திருந்த அல்காரிதமும், அதனை விஜய்யும், விஜய் ரசிகர்களும் சரியாக பயன்படுத்தியது தான் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. இதில் அதிமுக, திமுக பெரிய அளவில் கோட்டைவிட்டுவிட்டதாக அரசியல் நிபுணர்கள் கூறினார்கள்.

அதிமுக, திமுக போன்ற தமிழ்நாட்டின் பாரம்பரிய கட்சிகள் இன்றும் போஸ்டர் ஒட்டுவதிலும், அத்துடன் மேடை போட்டுப் பேசுவதிலும் மும்முரமாக இருந்தன. சமூக வலைதளங்களை பொறுத்தவரை ட்விட்டர், பேஸ்புக்கில் இமேஜ் வைத்து கார்டு போடுவதையும், அதனையே இன்ஸ்டாவில் ரீல்ஸ் வடிவில் ஷேர் செய்வதையும் செய்து வந்தன. விஜய் மற்றும் தவெகவினரோ இளைஞர்களின் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களைக் குறிவைத்தனர். குறிப்பாக 18 முதல் 25 வயதுடைய 'ஜென்ஸீ' இளைஞர்களை ஈர்க்க இன்ஸ்டாகிராம் தளத்தை சரியான ஆயுதமாக மாற்றியது தவெக.

The Instagram Algorithm That Shattered the AIADMK-DMK Strongholds Vijay s Master Plan

அதிமுக, திமுக செய்த 'தவறு' என்ன?

திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இன்ஸ்டாகிராமை வெறும் கட்சி அறிக்கைகளையும், தலைவர்களின் நீண்ட வீடியோக்களையும் பகிரும் ஒரு 'நோட்டீஸ் போர்டு' போலத்தான் பார்த்து வந்தன. ஆனால் விஜய் ரசிகர்களோ, தங்கள் தலைவனின் படம் முதல் நாள் வெளியானால் என்ன வைப் இருக்குமோ அதுபோல் வீடியோவாக கிரியேட் செய்தனர்.

விஜய்யின் அல்காரிதம்

அவர்கள் கிரியேட் செய்த ஸ்லோ-மோஷன் வீடியோக்கள், ட்ரெண்டிங் மியூசிக் மற்றும் ஈர்க்கக்கூடிய 'வைப்' போன்றவை இளம் தலைமுறை ரசிகர்களை ஈர்த்தன. ஏற்கனவே பலர் விஜய் ரசிகர்கள் என்பதால், வேலை எளிதானது. ஆயிரக்கணக்கானோர் அதேபோன்று உருவாக்கி இன்ஸ்டா முழுவதும் பரப்பினார்கள்.இன்ஸ்டா அல்காரிதம் பொதுவாக எதனை நீங்கள் பார்க்கிறீர்களோ, அதனையே திரும்ப திரும்ப காட்டும். அதனை சரியாக பயன்படுத்தியது தான் விஜய்யின் அல்காரிதம்.

தவெக ஐடி விங்

தவெக-வின் ஐடி விங் விஜய்யின் அரசியல் வருகை, கொள்கைப் பாடல்கள் ஆகியவற்றை 30 வினாடி ரீல்ஸ்களாக மாற்றி தினமும் வைப் ஏற்றிக்கொண்டே இருந்தனர். விஜய்யின் நடை, உடை, ஸ்டைல் ஆகியவற்றை மாஸான பின்னணி இசையோடு வெளியிட்டது, அரசியலில் ஆர்வம் இல்லாத இளைஞர்களையும் தவெக பக்கம் வெகுவாக கவர்ந்தது.

விஜய்க்கு ஓட்டு போடுங்கள்

கட்சிப் பதவியில் இல்லாத ஆயிரக்கணக்கான இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்கள் தாங்களாகவே விஜய்க்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டது ஒரு 'சங்கிலித் தொடர்' விளைவை ஏற்படுத்தினார்கள். இன்ஸ்டாகிராமில் உருவான இந்த அலை வெறும் லைக்குகளுடன் நின்றுவிடவில்லை. இந்த முறை விஜய்க்கு ஓட்டு போடுங்கள்" எனத் தங்கள் பெற்றோர்களை வற்புறுத்தும் அளவுக்கு இளைஞர்களை இந்த அல்காரிதம் மாற்றியது.

எதுவும் தற்செயலானது அல்ல

இன்ஸ்டா அல்காரிதமும், விஜய்யின் அல்காரிதமும் செய்த வேலை தான் இந்த முறை நடந்த மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சி, சிறுவர்கள் கூட விஜய்க்காக அடம்பிடிக்கும் வீடியோக்கள் வைரலானது தற்செயலானது அல்ல, அது திட்டமிட்டு தவெகவினர் பரப்பியது. தவெகவினர் தமிழ்நாடு முழுக்க மிகச்சரியாக செயல்பட்டார்கள்.

தாத்தா பாட்டிகள் மாறியது எப்படி

வழக்கமான அரசியல் என்பது பாட்டிகளுக்கு 1000 பணம், தாத்தாக்கள், அப்பாக்களுக்கு பிரியாணி, சிலருக்கு குவாட்டர் என்று முடிந்து வந்த அரசியலை, அடியோடு மாற்றியது இளம் தலைமுறை தான். காசு வாங்கியபோதும், ஓட்டை மாற்றிப்போட சிறுவர்களும், இளைஞர்களுமே காரணம். அதற்கு இன்ஸ்டாவை விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரியாக பயன்படுத்தினார்கள் என்பதே உண்மை.

108ல் வென்றதால் 108ல் ஏறிய அரசியல்வாதிகள்

"சமூக வலைதள லைக்ஸ் எல்லாம் ஓட்டாக மாறாது" என்று கூறிவந்த பாராம்பரிய அரசியல்வாதிகளுக்குத் தவெக-வின் 108 தொகுதி வெற்றி ஒரு மரண அடியாகவே மாறி உள்ளது. 108ல் வென்று 108ல் அரசியல்வாதிகளை ஏற்றி செல்லும் அளவிற்கு மாற்றியிருக்கிறது. இனி வரும் காலங்களில் நீண்ட அறிக்கைகளை விட, ஒரு நிமிட ரீல்ஸ் வீடியோவே ஆட்சியைக் தீர்மானிக்கும் என்பதை விஜய் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

அல்காரிதத்தை வளைத்தால் ஜெயிக்கலாம்

பழைய கழிதலும், புதியன புகுதலும்.. தமிழக அரசியல் களம் இப்போது முற்றிலுமாக ஒரு டிஜிட்டல் யுகத்திற்குள் நுழைந்துவிட்டது. இனி 'அல்காரிதம்' யாருக்குச் சாதகமோ, அவருக்கே அரியணை என்பது அழுத்தமான உண்மை. உங்களால் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டா அல்காரிதங்களை வசமாக்க முடியும் என்றால் ஆட்சியையே மாற்ற முடியும் என்பதற்கு விஜய்யின் அல்காரிதம் உதாரணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+