சினிமாவில் வருவது போல் ‛டைம் ட்ராவல்’ செய்ய ஆசையா? ஆய்வாளர்கள் சொல்லும் ஷாக் தகவல்!
சென்னை: சினிமாக்களிலும், கதை புத்தகங்களிலும் டைம் ட்ராவல் எனப்படும் காலப்பயணம் குறித்து ஏராளமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், இதில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குறிப்பாக டைம் ட்ராவல் செய்பவர்கள் சந்திக்கும் இரண்டு பிரச்னைகளை அவர்கள் கூறியுள்ளனர்.
முதலில் டைம் ட்ராவல் என்றால் என்ன என்று பார்ப்போம். இந்த பிரபஞ்சத்தில் மிகவும் வேகமானது ஒளிதான். இது தோராயமாக விநாடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ வரை பயணிக்கும். இந்த ஒளியின் வேகத்தில் பயணிப்பவர்கள் டைம் ட்ராவல் செய்ய வாய்ப்பிருக்கிறது. அதாவது, ஒரு த்ரட் மில்-லில் நீங்கள் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு கீழே 1,2,3 என நம்பர்கள் சென்றுக்கொண்டிருக்கின்றன. இதில் 10வது எண் வரும்போது திடீரென கைப்பிடியில் கையை ஊன்றி கால் இரண்டையும் மேலே உயர்த்தி சில விநாடிகள் வைத்திருந்தால் என்ன ஆகும்?

கீழே உள்ள எண்கள் 11,12 என கடந்து 20 வரை சென்றிருக்கும். ஆக இதுதான் கால பயணம். காலத்தின் வேகத்தில் நீங்கள் பயணிக்கும் போது பூமி இயல்பாக இருக்கும். அங்குள்ளவர்களுக்கு காலம் சரியாக சென்றுக்கொண்டிருக்கும். ஆனால் உங்களுக்கு காலம் மிகவும் மெதுவாக சென்றுக்கொண்டிருக்கும். இதற்காக நீங்கள் 3 லட்சம் கி.மீ/வி வேகத்திற்கு பயணிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அதில் பாதி வேகத்தில் பயணித்தால் கூட கால பயணம் சாத்தியமாகும்.
ஆனால் நீங்கள் எவ்வளவு வேகமாக பயணிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வயது (காலம்) மெதுவாக நகரும். சரி ஒரு கட்டத்தில் விநாடிக்கு 3 லட்சம் கி.மீட்டரையும் தாண்டி போனால் என்ன ஆகும் என்று ஒரு கேள்வி எழலாம். அதற்கான விடையை ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். அதாவது ஒளியை விட அதிக வேகமாக போகும் போது நீங்கள் இறந்த காலத்திற்கு செல்வீர்கள். அதாவது உங்களுடைய குழந்தை பருவத்திற்கு போவீர்கள்.
அப்புறம் என்ன ஜாலியா நம்முடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை மாற்றிவிடலாம் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அங்குதான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அதாவது, இறந்த காலத்திற்கு போனால் நாம் அங்கேயே மாட்டிக்கொள்வோம். திரும்ப வரவே முடியாது என்று ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.
ஏனெனில் நீங்கள் உங்களுடைய பள்ளி பருவத்திற்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கு உங்களுடைய தாத்தா இருக்கிறார். நீங்கள் செய்யும் ஏதோ ஒரு தவறான செயல் உங்கள் தாத்தாவின் இறப்புக்கு காரணமாக இருந்துவிடுகிறது. அப்படியெனில் உங்கள் அப்பா எப்படி பிறந்திருக்க முடியும்? நீங்கள் எப்படி பிறந்திருக்க முடியும்? ஆக இது முற்றுப்பெறாத ஒரு குழப்ப நிலையை உருவாக்கிவிடும். இதற்கு பெயர்தான் grandfather paradox.
அதேபோல இரண்டாவது பிரச்னை, ஒரு விஷயத்தின் தோற்றத்தை அழிப்பது. தற்போது நம்மிடம் வெப்பநிலைமானி(தெர்மோமீட்டர்) இருக்கிறது. இதை நீங்கள் கையோடு ஒரு 500 ஆண்டுகளுக்கு பின் எடுத்துச் செல்கிறீர்கள். அங்கு இதை பயன்படுத்தும் போது மற்றவர்களுக்கு இதன் மீது ஆர்வம் ஏற்படுகிறது. எனவே இதை எப்படி உருவாக்குவது என்பது குறித்து கற்றுக்கொடுக்கிறீர்கள்.
மீண்டும் நிகழ்காலத்திற்கு வருகிறீர்கள். இப்போது சொல்லுங்கள் தெர்மோமீட்டரை கண்டுபிடித்தது நீங்கள் சொல்லிக்கொடுத்த குழுவா? அல்லது கலிலியோ கலிலியா? இப்படியாக பல விஷயங்கள் உருவான வரலாறு என்பது முற்றிலும் மறைந்துவிடும்.
மேற்குறிப்பிட்ட இரண்டு பிரச்னைகளுமே தீவிரமானவை. பெரும் பாதிப்பை உருவாக்கக்கூடியவை. எனவே காலப்பயணம் சினிமாக்களில் காட்டுவதை போல சிம்பிளானது கிடையாது. கொஞ்சம் சிக்கலானதுதான். ஆனால் இப்போதைக்கு நாம் இதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் நம்மால் ஒளியை விட வேகமாக போகவே முடியாது. அதாவது இறந்த காலத்திற்கு போக முடியாது என்று ஐன்ஸ்டீன் உறுதியாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications