ஸ்மார்ட் போனுக்கு டெம்பர் கிளாஸ் போடுறீங்களா? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க! இல்லைன்னா மொத்தமா காலி
சென்னை: ஸ்மார்ட் போன்கள் ஸ்க்ராட்ச் ஆகாமல் இருக்கவும், கீழே விழுந்தாலும் டிஸ்பிளே டேமேஜ் ஆகாமல் இருக்கவும் பலரும் டெம்பர் கிளாஸ் ஒட்டுவது வழக்கம். டெம்பர் கிளாஸ் ஒட்டும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல் இருந்தால் அது உங்கள் ஸ்மார்ட் போன்களுக்கே உலை வைத்துவிடக் கூடும். எனவே, டெம்பர் கிளாஸ் ஒட்டும் போது எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்கள் என்பது தற்போது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. செல்போன் அழைப்புகளுக்கு மடும் இன்றி வங்கி பரிவர்த்தனைகள், ஷாப்பிங், பொழுது போக்கு விஷயங்கள் என அனைத்தையும் உள்ளங்கைக்குள் ஸ்மார்ட்போன்கள் கொண்டு வந்துவிட்டன. செல்போன் புதிதாக வாங்கியவர்கள் உடனடியாக ஸ்கீரின் கார்டு அல்லது டெம்பர் கிளாஸ் பயன்படுத்துவதை பார்க்க முடியும்.

ஸ்மார்ட் போன்கள்: ஸ்மார்ட் போன்கள் கீழே விழுந்தால் டிஸ்பிளே பாதிக்கப்படாமல் இருக்கவும், டிஸ்பிளேவில் கீறல் போன்றவை ஏற்படாமல் இருக்கவும் இந்த ஸ்கீரின் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் இந்த டெம்பர் கிளாஸ் ஓட்டும் போது, சில முக்கியமானவற்றை கவனத்தில் கொள்வது அவசியம். இல்லையென்றால் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து நீங்கள் ஆசை ஆசையாய் வாங்கி வைத்து இருக்கும் ஸ்மார்ட் போன்களை இது காலி செய்ய வைத்துவிடும். எனவே ஸ்மார்ட் போன்களுக்கு ஸ்கீரின் கார்டு ஒட்டும் போது எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்..
டச் சென்சிடிவிட்டி: ஸ்மார்ட் போன்களில் அதன் ஸ்கிரீன் பயன்பாடுதான் மிகவும் முக்கியமானது ஆகும். எனவே டச் சென்சிடிவிட்டி பாதிக்கப்படாமல் நீங்கள் ஒட்டும் ஸ்கிரீன் கார்டு இருக்க வேண்டியது அவசியம். பல லோக்கல் நிறுவனங்கள் குறைந்த விலையில் டெம்பர் கிளாஸ்களை விற்பனை செய்கின்றன. மிகவும் தரம் குறைந்த டெம்பர்கிளாஸ்களால் போன்களின் டச் சென்சிடிவிட்டி பாதிக்கப்படும். இதனால், போனை பயன்படுத்தும் போது டச் சில சமயம் சரியாக வேலை செய்யாதது போல தெரியும். இதன்காரணமாக போனை பயன்படுத்துவர்களுக்கு வெறுப்பு ஏற்படும். எனவே, நல்ல தரமான டெம்பர் கிளாஸ் ஒட்டுவது அவசியம்.
பப்புள்ஸ்: டெம்பர் கிளாஸ் ஒட்டிவிட்டு எழும் இன்னொரு முக்கியமான பிரச்சினை டிஸ்பிளேவில் பப்புள்ஸ் தெரிவது. கடையில் ஒட்டிவிட்டு வீட்டுக்கு வந்தால், டிஸ்பிளேவில் ஆங்காங்கே பப்பிள்ஸ் தெரியும். இந்த பப்புள்ஸ் களால் ஸ்மார்ட் போன்களின் செயல்பாடு பெரிதாக பாதிக்கப்படாது என்றாலும் ஸ்மார்ட் போன்களின் அட்ராக்டிவி லுக் போய்விடும். பல ஆயிரம் கொடுத்து வாங்கினாலும் கூட ஸ்மார்ட் போனின் லுக் கெட்டுவிடும். இதனால், இதுபோன்ற பப்புள்ஸ் ஏற்படாதவாறு டெம்பர் கிளாஸ் ஓட்டுவது அவசியம்.
மிகவும் தடினமான: கடைகளில் பல விதமாக ஸ்கிரீன் புரெடக்டர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. சிலர் செல்போன் எவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தாலும் டிஸ்பிளேவிற்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என நினைத்துக்கொண்டு மிகவும் கடினமான புரெடெக்டர்ஸ்களை பயன்படுத்துவதை விரும்புவார்கள். இதுபோன்ற தடிமனான ஸ்க்ரீன் கார்டுகள் டிஸ்பிளேவின் செயல் திறனை பாதிக்கும். செல்போனை பார்க்கும் போது வித்தியாசமாக தெரியும். அதேபோல, கீழே விழும் போது நெகிழ்வுத்தன்மை எதுவும் இருக்காது. இதனால், எளிதில் உடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
பிரைவேசி: டெம்பர் கிளாசில் என்ன பிரைவேசி இருக்கிறது என நினைக்கலாம்.. ஆனால், ஸ்கிரீன் கார்டுகள் ஒட்டும் போது தரமானவையாக இருக்கிறதா? என்பதை பார்ப்பது மட்டும் இன்றி பிரைவேசி ஸ்கிரின் கார்டா என பார்க்க வேண்டும். சில ஸ்கிரீன் கார்டுகள் அருகில் இருந்து வேறு கோணத்தில் இருப்பவர்களுக்கு டார்க் மோடில் ஸ்மர்ட் போன் இருப்பது போல காட்டும். இதனால் நீங்கள், பேருந்து, ரயில் பயணத்தின் போது அருகில் இருப்பவர்கள் கவனிப்பார்களோ என்ற பயப்படவேண்டியது இல்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications