த்ரெட்ஸ் இருக்கட்டும்.. ட்விட்டரை ஏற்கனவே கதி கலங்க வைத்த இந்த 2 ஆப்ஸ் பற்றி தெரியுமா?
சென்னை: ட்விட்டர் அண்மையில் கொண்டு வந்த மாற்றங்களால் அதிருப்தியில் இருக்கும் யூசர்களை ஈர்க்க சோசியல் மீடியா மார்க்கெட்டில் பெரும் போட்டியே நிலவுகிறது. அதில் த்ரெட்ஸ் புதிதாக குதித்து பெரும்பாலான யூசர்களை கவர்ந்துள்ளது. ஏற்கனவே இந்தப் போட்டியில் 2 டான்களும் இருக்கிறார்கள்.
எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்திய பிறகு பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வந்துள்ளார். ட்விட்டரை பயன்படுத்த பணம் வசூலிக்கும் வகையில் எலான் மஸ்க் கொண்டு வந்த மாற்றங்களால் பல பயனர்கள் அதிருப்தி அடைந்தனர். அவர்களைக் கவரும் வகையில் கடந்த ஜூலை 6ஆம் தேதி த்ரெட்ஸ் செயலியை களமிறக்கியது மெட்டா. இதுவும் கிட்டத்தட்ட ட்விட்டர் போலவே செயல்படக்கூடியது.

த்ரெட்ஸ்: த்ரெட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தப்பட்ட 48 மணி நேரத்திலேயே 80 மில்லியன் யூசர்கள் சைன் அப் செய்துள்ளனர். இது ட்விட்டருக்கு கடும் போட்டியாக உருவெடுத்துள்ளது. இரண்டே நாட்களில் பெரும்பாலான ட்விட்டர் யூசர்கள் த்ரெட்ஸ் பக்கம் இடம்பெயர்ந்துள்ளது எலான் மஸ்க்குக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
த்ரெட்ஸ் செயலி இப்போதுதான் வந்தது. அதற்கு முன்பே, 2 செயலிகள் ட்விட்டருக்கு ஓரளவுக்கு டஃப் கொடுத்தன. குறிப்பாக ப்ளூடிக் சர்ச்சை, போலி செய்தி பரவல், பயனர்களின் தனியுரிமை, போலியான அக்கவுண்ட்கள் போன்ற சர்ச்சை காரணமாக பலரும் மஸ்டோடன், ப்ளூ ஸ்கை ஆகிய தளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
மஸ்டோடன்: ட்விட்டருக்கு மாற்றாக உள்ள பல மைக்ரோ பிளாகிங் தளங்களில் மஸ்டோடன் என்ற தளம் அதிகமான யூசர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மஸ்டோடன் 2016 இல் ஜெர்மன் சாஃப்ட்வேர் டெவலப்பர் யூஜென் ரோச்கோவால் நிறுவப்பட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர், ரெடிட் மற்றும் இன்ஸ்டாகிராம் போலல்லாமல், இது ஒரு பரவலாக்கப்பட்ட, விளம்பரம் இல்லாத தளம்.
மஸ்டோடன் தளம் ஒரு இலவச ஓப்பன் சோர்ஸ் மென்பொருளாகும். இது டிசென்டர்லைஸ்டு நெட்வொர்க் கொண்ட சர்வர்கள் மூலம் இயக்கப்படுகிறது. எனவே, இது பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கிறது. இதன் காரணமாக யூசர்களின் தகவல்கள், பாதுகாப்பாக இருக்கும் என்பதால் அதிகமானோரால் விரும்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக ட்விட்டர் மீது அதிருப்தி அடைந்த பலர் இத்தளத்தை உபயோகப்படுத்தி வருகின்றனர்.
ட்விட்டரில் ட்வீட் என்று சொல்வது போலவே மஸ்டோடன் கணக்கில் பதிவுகள் டூட்ஸ் என்று கூறப்படுகிறது. இதில் டூட்ஸ்களுக்கு நீங்கள் பதில் அளிக்கலாம் மற்றும் ரீ-போஸ்ட் செய்யலாம். டூட்ஸ் யூசர்கள் ஒருவருக்கொருவர் பின்தொடரலாம். தற்போது இந்த சோசியல் நெட்வொர்க்கில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் யூசர்கள் இருக்கிறார்கள்.

ப்ளூ ஸ்கை: ட்விட்டர் நிறுவனரான ஜாக் டார்ஸி, ட்விட்டருக்கு போட்டியாக புளூ ஸ்கை என்ற ஒரு புதிய நெட்வொர்க்கை உருவாக்கினார். இந்த சமூக ஊடகத்தில் ட்விட்டர் போன்று பல சிறப்பம்சங்கள் உள்ளன. இது பயனர்களின் பிரைவசி டேட்டாவை பாதுகாக்கிறது. தற்போது ப்ளூ ஸ்கை தளம் பீட்டா வெர்ஷனில் வெளியிடப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களால் மட்டுமே தற்போது பயன்படுத்த முடிகிறது. இந்த தளத்தை பயன்படுத்த, காத்திருப்புப் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால், ஏற்கனவே இந்த பீட்டா வெர்ஷனை பயன்படுத்தும் மற்ற பயனரிடமிருந்து இன்வைட் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications