ட்விட்டருக்கு போட்டி.. ‘த்ரெட்ஸ்'-ஐ அறிமுகம் செய்த மெட்டா.. 4 மணி நேரத்திலேயே 5 மில்லியன் யூசர்கள்!
சென்னை: ட்விட்டருக்கு போட்டியாக களத்தில் இறங்கியது மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ். த்ரெட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 4 மணி நேரத்திலேயே 5 மில்லியன் பேர் அதில் இணைந்துள்ளனர்.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் போட்டோ அடிப்படையிலான ஆப் ஆன த்ரெட்ஸை இன்று மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டரைக் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ப்ளூ டிக் விதிகளையே மாற்றி, அதனை சப்ஸ்கிரிப்ஷனாக மாற்றினார். அதற்காக மாதா மாதம் சந்தா செலுத்த வேண்டும் என்ற முறையைக் கொண்டு வந்தார்.
ப்ளூ டிக் வெரிஃபைடு கணக்குகள் ஒரு நாளைக்கு 6,000 ட்வீட்களை படிக்கலாம். ப்ளூ டிக் இல்லாதவர்கள் 600 ட்வீட்களை மட்டுமே பார்க்க முடியும். அதிலும் புதிய கணக்குகள் 300 மட்டுமே பார்க்க முடியும் என்ற லிமிட்டை அண்மையில் செட் செய்தார் மஸ்க். பின்னர், இந்த லிமிட்டை வெரிஃபைடு யூசர்களுக்கு 10,000, மற்றவர்களுக்கு 1,000 மற்றும் புதிய யூசர்களுக்கு 500 ஆக அதிகரித்தார்.
முன்பு இலவசமாக கிடைத்த ட்வீட் டெக்கும் தற்போது கட்டணம் செலுத்திய ப்ளூ டிக் பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, வருமானத்தைப் பெருக்க எலான் மஸ்க் செய்து வரும் காரியங்கள் தான் பலரை கடுப்பேற்றி வருகிறது.
ட்விட்டர் யூசர்கள் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், 'த்ரெட்ஸ்' என்ற ஆப்பை ட்விட்டருக்கு போட்டியாக உருவாக்கி களத்தில் இறக்கியுள்ளது மெட்டா நிறுவனம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகிய முன்னணி சமூக வலைதளங்களை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம், எலான் மஸ்கிற்கு ஆப்பு வைக்க தனது த்ரெட்ஸை கோதாவில் இறக்கியுள்ளது.
இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் த்ரெட்ஸ் ஆப்ஸ் iOS மற்றும் ஆண்ட்ராய்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நமது இன்ஸ்டாகிராம் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைந்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உள்ளடக்கிய 500 எழுத்துகள் கொண்ட 'த்ரெட்களை' நாம் பதிவிடலாம்.
த்ரெட்ஸ் செயலி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் உள்ள அம்சங்கள் ஒருங்கிணைந்து கிடைப்பதாக உள்ளது. இது இன்டிபெண்டண்ட் செயலியாக இருந்தாலும், போட்டோ, வீடியோ பகிர்வு தளமான இன்ஸ்டாகிராமின் ஒருங்கிணைந்த பகுதியாகவே த்ரெட்ஸ் உள்ளது. பயனர்கள் இந்த த்ரெட்களை தங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அல்லது அவர்கள் விரும்பும் வேறு எந்த தளத்திலும் பகிரலாம்.
16 வயதுக்குட்பட்ட (அல்லது குறிப்பிட்ட நாடுகளில் 18 வயதுக்குட்பட்ட) பயனர்கள் த்ரெட்களில் சேரும்போது தானாகவே பிரைவேட் அக்கவுண்டாக உருவாகும் என்று இன்ஸ்டாகிராம் குறிப்பிட்டுள்ளது. டிவிட்டரின் முக்கியமான அம்சங்களில் ஒன்று, அது பயனர்களுக்கு தேவையான பதிவுகளை கொண்டு சேர்க்கும்.
அதே பாணியில் தாங்கள் பின்தொடரும் கணக்கில் இருந்தும், பின் தொடராத கணக்கில் நமக்கென பிரத்யேகமாக பரிந்துரைக்கப்படும் பதிவுகளையும் தொகுத்து தரும்படியாக அல்காரிதத்துடன் வந்துள்ளது த்ரெட்ஸ். இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் நாம் பின் தொடர்பவர்களை மொத்தமாக இதிலும் ஃபாலோ செய்து கொள்ளும் வசதியை கொடுத்துள்ளது த்ரெட்ஸ்.

மெட்டாவின் 'த்ரெட்ஸ்' அறிமுகப்படுத்தப்பட்டதுமே ஏராளமான யூசர்கள் அதனைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மெட்டா நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், த்ரெட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 4 மணி நேரத்திலேயே 5 மில்லியன் பயனாளர்கள் சைன் அப் செய்துள்ளதாக த்ரெட்டில் பதிவை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக மார்க் ஸுக்கர்பெர்க், "இன்ஸ்டாகிராமின் சிறந்த பகுதிகளை எடுத்து டெக்ஸ்ட், ஐடியாஸ், மற்றும் உங்கள் மனதில் உள்ளதை விவாதிப்பதற்கான புதிய அனுபவத்தை உருவாக்குவதே எங்கள் பார்வை. இந்த வகையான நட்பு சமூகம் உலகிற்கு தேவை என்று நான் நினைக்கிறேன், முதல் நாளிலிருந்து த்ரெட்ஸின் ஒரு பகுதியாக இருக்கப்போகும் உங்கள் அனைவருக்கும் நன்றி." எனத் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications