Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லேட்டஸ்ட் மொபைல் போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் பொறுங்க! டாப் மாடல்கள் களத்துக்கு வருது.. ரேட் எவ்ளோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட் போன் வாங்கும் திட்டத்தில் இருக்கிறீர்கள் என்றால் இன்னும் ஒருசில நாட்கள் மட்டும் காத்திருங்கள். டாப் மொபைல் பிராண்டுகள், இந்த மாதத்தில் அடுத்தடுத்து தங்கள் புதிய மாடல்களை களத்தில் இறக்குகின்றன. புதிதாக அறிமுகமாகும் போன்களில் பெட்டராக இருப்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த ஜூலை மாதத்தில் பல ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பல 5G போன்கள் வரிசை கட்டி வருகின்றன. சாம்சங் கேலக்சி எம்34, நத்திங் போன் (2), ஒன்பிளஸ் நார்ட் 3, ஐக்யூ00 நியோ ப்ரோ, ரியல்மீ நார்ஸோ 60 சீரிஸ் போன்ற பிரபலமான போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. சில முக்கிய மாடல்களின் குயிக் வியூ இங்கே..

Top brands launch new phones during this July: Here is the quick view and approx. prices

OnePlus Nord 3: OnePlus Nord 3 ஜூலை 5ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த மாடல் போன் சுமார் 6.74 இன்ச் அளவில் இருக்கும். இது OnePlus Nord சீரிஸில் வருவதால், இது பெரும்பாலும் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். OnePlus Nord 3 ஸ்மார்ட்போன் பவர்ஃபுல் MediaTek Dimensity 9000 சிப்செட்டுடன் வரும் எனத் தெரிகிறது. 16 ஜிபி ரேம் - 156 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5000 mAh பேட்டரியுடன், 8 ஜிபி ரேம், 128 மற்றும் 256 இண்டர்னல் மெமரி வேரியண்ட்டில் வரும். இந்தியாவில் OnePlus Nord 3 இன் விலை ரூ.30,000 -க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Top brands launch new phones during this July: Here is the quick view and approx. prices

Realme narzo 60 Series: Realme Narzo 60 மாடல் ஜூலை 6ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. வரவிருக்கும் narzo 60 போனை 1TB சேமிப்பகத்துடன் அறிமுகப்படுத்த ரியல்மி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. Realme சமீபத்தில் ஒரு டீசரில் இதை சுட்டிக்காட்டி இருப்பதால், இதுகுறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Top brands launch new phones during this July: Here is the quick view and approx. prices

Nothing Phone (2): நத்திங் ஃபோன் (2) ஒரு அசத்தலான புதிய 5G ஃபோன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் ஜூலை 11ல் அறிமுகமாகிறது. ஏற்கனவே ஃப்ளிப்கார்ட்டில் ப்ரீ ஆர்டர் விற்பனை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போன், Qualcomm இன் டாப்-எண்ட் ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படும். 6.7 இன்ச் திரை, 4,700mAh பேட்டரி மற்றும் புதிய ஒளி/ஒலி அமைப்புடன் சற்று வித்தியாசமான வடிவமைப்புடன் இந்த போன் வருகிறது.

நத்திங் ஃபோன் (2) போனில் நத்திங் ஓ.எஸ். 2.0 உடன் வரவுள்ளது. பின்புற மற்றும் முன்புற கேமரா சென்சார்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த மாடல் ரூ.35 ஆயிரம் என்ற விலையில் அறிமுகமாகலாம் எனக் கூறப்படுகிறது.

Top brands launch new phones during this July: Here is the quick view and approx. prices

Samsung Galaxy M34: கேலக்ஸி M34 மாடலை வரும் ஜூலை 7ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது சாம்சங். கேலக்ஸி எம் சீரிஸ் போன்களுக்கான சில முக்கிய அம்சங்களை சாம்சங் உறுதி செய்துள்ளது. இந்த ஃபோனில் 120Hz டிஸ்ப்ளே, 6,000mAh பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும். விலை ரூ. 30 ஆயிரம் என்ற அளவில் இருக்கலாம் எனத் தெரிகிறது.

இருப்பினும், Samsung Galaxy M34 5G ஃபோன் 6.6-இன்ச் FHD+ Super AMOLED திரையைக் கொண்டிருக்கும் என்றும் மீடியாடெக் டைமென்சிட்டி 1080 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் இந்த மாடல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Top brands launch new phones during this July: Here is the quick view and approx. prices

iQOO Neo 7 Pro: இந்தியாவில் ஜூலை 4ஆம் தேதி, iQOO Neo 7 Pro ஸ்மார்ட்போன் 6.78-inch FHD+ Samsung E5 AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாக உள்ளது. இந்த மொபைலில் Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் இருக்கும் என்று கூறப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த சிப்செட் போனின் பெர்ஃபாமன்ஸை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. நத்திங் ஃபோன் 2 லும் அதே சிப்செட் தான் பயன்படுத்தப்படுகிறது. நியோ 7 ப்ரோவில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் இருக்கலாம். இதன் விலை 40,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Top brands launch new phones during this July: Here is the quick view and approx. prices

Oppo Reno 10 Pro & Pro Plus: Oppo Reno 10 Pro மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்கள் இந்தியாவில் வரும் ஜூலை 10 முதல் அறிமுகமாகிறது. Oppo Reno 10 Pro மாடல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 50 மெகா பிக்சல் மெயின் கேமராவுடன், 32 மெகா பிக்சல் டெலிபோட்டோ கேமராவும் வருகிறது. இதன் விலை ரூ.30,000த்திற்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, Oppo Reno 10 Pro Plus மாடல் 16 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டர்னலுடன் வருகிறது. இதில் 64 எம்.பி டெலிபோட்டோ கேமரா இடம்பெறும். இதன் மூலம் செம்மையான போட்டோக்களை எடுக்கலாம். இதன் விலை ரூ.45 ஆயிரம் என்ற அளவில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+