அம்பானிக்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்.. ஜியோவுக்கு விழுந்த பெரிய அடி! இதை யாருமே எதிர்பார்க்கல
டெல்லி: நமது நாட்டில் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் சந்தை இருப்பை அதிகரிக்கத் தொடர்ச்சியாக முயன்று வருகிறது. இப்போது ஏர்டெல், ஜியோ இடையே தான் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக சில சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆக்டிவ் யூசர் பிரிவில் ஏர்டெல்லை ஜியோ காலி செய்துவிட்டது. ஆனால், மற்றொரு முக்கிய பிரிவில் ஏர்டெல் தான் கிங்காக இருந்து வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை இங்கு இணையச் சேவையை பெரும்பாலும் மக்கள் செல்போன் மூலமாகவே பயன்படுத்துகிறார்கள். இதனால் செல்போன் கட்டணம் என்பது ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது.

டெலிகாம் நிறுவனங்கள்:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது நாட்டில் ஏகப்பட்ட டெலிகாம் நிறுவனங்கள் இருந்தன. ஆனால், ஜியோவின் வருகைக்குப் பிறகு நஷ்டத்தால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இப்போது நமது நாட்டில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய தனியார் நிறுவனங்களும் பிஎஸ்என்எல் அரசு நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் உள்ளன. இவர்கள் யூசர்களை பிடிக்க மிகக் கடுமையாக முயன்று வருகிறார்கள்.
நமது நாட்டில் டெலிகாம் சந்தையை முறைப்படுத்தும் டிராய் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் எந்த நிறுவனத்திடம் எவ்வளவு யூசர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களைப் பகிரும். அதன்படி, கடந்த அக். மாதத்திற்கான டேட்டாவை டிராய் அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் சில சுவாரசிய முடிவுகள் கிடைத்துள்ளன.
ஆக்டிவ் யூசர்கள்:
அதாவது எந்தவொரு நெட்வோர்க்கிற்கும் ஆக்டிவ் யூசர்கள் என்பது ரொம்பவே முக்கியம். மாதாமாதம் யாரெல்லாம் ரீசார்ஜ் செய்கிறார்களோ அவர்கள் தான் ஆக்டிவ் யூசர்கள் என்று அழைக்கப்படுவார்கள். கடந்த அக். மாதம் ஜியா தான் அதிகபட்ச ஆக்டிவ் யூசர்களை சேர்த்துள்ளது. ஜியோ அதிகபட்சமாக 38.4 லட்சம் ஆக்டிவ் யூசர்களை சேர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து ஜியோ 27.2 லட்சம் ஆக்டிவ் யூசர்களை தனது நெட்வோர்க்கில் இணைத்துள்ளது.
அதிர்ச்சி தந்த ஏர்டெல்:
மறுபுறம் மிக முக்கியமான 4ஜி/ 5ஜி பிரிவில் ஜியோவுக்கு பெரிய அடி விழுந்துள்ளது. இந்த 4ஜி/ 5ஜி பிரிவில் இருப்போர் தான் எப்போதும் அதிக தொகைக்கு ரீசாரஜ் செய்வார்கள். அதாவது நிறுவனத்திற்கு அதிக வருவாயைத் தரும் பிரிவாக இது இருக்கும். எனவே, இந்த பிரிவில் எத்தனை யூசர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படும். இந்த முக்கியமான பிரிவில் ஏர்டெல் நிறுவனம் 20.8 லட்சம் யூசர்களை புதிதாக இணைத்துள்ளது. அதேநேரம் ஜியோ நிறுவனம் இந்த பிரிவில் சுமார் 37 லட்சம் யூசர்களை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது ஆக்டிவ் யூசர்கள் பிரிவில் என்ன தான் ஏர்டெலை ஜியோ வீழ்த்தினாலும் கூட அதிக வருவாயை அளிக்கும் 4ஜி/ 5ஜி பிரிவில் ஏர்டெல் தான் முன்னணியில் இருக்கிறது.
பிஎஸ்என்எல்:
கடந்த ஜூலை மாதம் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தின. இதன் காரணமாக அதன் பிறகு தொடர்ச்சியாக அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் யூசர்களை இழந்து வந்தன. அதேநேரம் மறுபுறம் பிஎஸ்என்எல் நிறுவனம் பக்கம் செல்லும் யூசர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது..
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications