Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போனா வராது.. வோடஃபோன் ஐடியா ரீசார்ஜ் பிளானில் 1 வருடம் முழுக்க Disney + Hotstar இலவசம்.. செம ஆஃபர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான வோடஃபோன் ஐடியா (Vi), தமது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவுடன் ரீசார்ஜ் ஆஃபர்களை அளித்து வருகிறது. டேட்டா போனஸ் உடன் வரும் இந்த கலக்கலான ரீசார்ஜ் பிளான்கள் பற்றி பார்க்கலாம்.

வோடஃபோன் ஐடியா நிறுவனம், தமது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் பிளான்கள் உடன் ஓடிடி சந்தா பலன்களையும் அளித்து வருகிறது. வோடஃபோன் ஐடியா வழங்கும் இந்த பிளான்களின் வேலிடிட்டி, டேட்டா, போனஸ் டேட்டா, Disney+ Hotstar ஃப்ரீ சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவற்றுடன் வரக்கூடிய 3 சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை பற்றி காணலாம்.

Vodafone Idea Offer with Disney+ Hotstar and Bonus Data in 3 recharge plans

வோடஃபோன் ஐடியா ரூ.399 ரீசார்ஜ் பிளான்: வோடஃபோன் ஐடியாவின் 399 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் உடன் தினமும் 100 SMS இலவசம். தினசரி 2.5GB டேட்டா தினமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் Vi Hero அன்லிமிடட் நன்மைகளுடன் வருகிறது, இதில் Binge All Night, அதாவது இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டா, வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை வார இறுதி நாட்களில் கூடுதலாக பயன்படுத்தும் வகையில் Weekend Data Rollover மற்றும் Data Delight ஆகிய சலுகைகளும் அடங்கும்.

இந்த திட்டத்தில் கிடைக்கும் OTT நன்மைகளில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, 3 மாதங்களுக்கு Vi Movies மற்றும் TV VIP ஆகியவை அடங்கும். இது தவிர, இந்த திட்டத்தில் 5 ஜிபி போனஸ் டேட்டாவும் கிடைக்கிறது.

ரூ.499 ரீசார்ஜ் பிளான்: வோடஃபோன் ஐடியாவின் 499 ரூபாய் கொண்ட ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 3GB டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இந்த திட்டத்தில், Vi Hero அன்லிமிடெட் பலன்களுடன், இலவச Disney + Hotstar மொபைல் சந்தா, VI மூவிஸ் மற்றும் TV VIP ஆகியவை 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திலும், பயனர்களுக்கு 5 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது.

ரூ.601 ரீசார்ஜ் பிளான்: ஒரு வருடம் முழுதும் Disney+Hotstar சந்தாவை இலவசமாகப் பெற வேண்டும் என்றால் நீங்கள் வோடஃபோன் ஐடியாவின் ரூ.601 திட்டத்தை பயன்படுத்தலாம் . இந்த திட்டத்தில், அன்லிமிடெட் வாய்ஸ் கால் + ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் தினசரி 3 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் Vi Hero அன்லிமிட்டட் பலன்களைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் 16 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது.

Vodafone Idea Offer with Disney+ Hotstar and Bonus Data in 3 recharge plans

இந்த ரீசார்ஜ் செய்வதன் மூலம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி சந்தாவை ஒரு ஆண்டு முழுமைக்கும் பெறலாம். தனியாக ஹாட்ஸ்டார் (மொபைல்) ஓடிடி சப்ஸ்கிரைப் செய்ய குறைந்தபட்சம் ரூ.499 பிளான் உள்ளது. ஆனால், வோடஃபோனில் ரூ.601க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம், ஓராண்டுக்கு ஹாட்ஸ்டார் ஓடிடி சந்தாவுடன், தினசரி 3 ஜிபி டேட்டா உள்ளிட்ட சலுகைகளை 28 நாட்களுக்கு அனுபவிக்கலாம்.

ரூ.901 பிளான்: இந்த பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் + ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் தினசரி 3 ஜிபி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் Vi Hero அன்லிமிட்டட் பலன்களைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் 48 ஜிபி போனஸ் டேட்டாவும் வழங்கப்படுகிறது.

ரூ. 3,099 பிளான்: இந்த திட்டத்தில், அன்லிமிடெட் வாய்ஸ் கால் + ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் தினசரி 2 ஜிபி டேட்டா ஒரு வருடம் முழுமைக்கும் வழங்கப்படுகிறது. கூடுதலாக 50 ஜிபி போனஸ் டேட்டாவும் வழங்கப்படும். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் Vi Hero அன்லிமிட்டட் பலன்களைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் ஓராண்டுக்கு Disney+Hotstar இல்வச சந்தா வழங்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+