ஜியோவில் எல்லா ஓடிடியும் இலவசம்! அள்ளி தரும் அம்பானி.. ரீசார்ஜ் செய்யும் முன் இதை கவனிங்க!
டெல்லி: அம்பானியின ஜியோ நிறுவனம் தனது பயனாளர்கள் பல்வேறு ஓடிடி தளங்களை எளிதாக கண்டு ரசிக்கும் வகையில் அட்டகாசமான திட்டங்களை கொண்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
இப்போது நெட்ஃபிளிக்ஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலிகளை நமது நண்பர்களுடன் பாஸ்வேர்டு பகிர்வதை தடை செய்து அதற்கு பல கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. அதேபோல அமேசான் பிரைமிலும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே இப்போது பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த ஓடிடி தளங்களை பார்க்க அதிக கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கிறது. இருப்பினும், பல ஓடிடி தளங்களுக்கு தனித்தனியாக சந்தாக்களை கட்டினால் அது நமது பர்ஸை பதம் பார்த்துவிடுகிறது.
இதன் காரணமாக இப்போது பல்வேறு நிறுவனங்களும் பல ஓடிடி தளங்களை ஒன்றாக இணைந்து bundle சந்தா முறைகளில் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஜியோ நிறுவனம் இதுபோல பல ஓடிடி சந்தாக்களை இலவசமாக வழங்கி வருகிறது. இலவச ஓடிடியுடன் ஜியோ வழங்கும் முக்கியமான திட்டங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
முதல் பிளான்: முதலில் ரூ.398க்கு ஜியோ வழங்கும் கலக்கல் திட்டம்.. ஜியோவின் இந்த ரூ 398 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.. இதில் தினசரி 2 ஜிபி என்ற விகிதத்தில் 56 ஜிபி டேட்டா கிடைக்கும். 2 ஜிபியை காலி செய்துவிட்டால் 64 Kbps வேகத்தில் இணையம் கிடைக்கும். அன்லிமிடட் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவையும் கிடைக்கும்..
இது தவிர Sony LIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lanka, Planet Marathi, Chaupal, Docubay, EPIC ON, FanCode, Hoichoi உள்ளிட்ட பல்வேறு ஸ்ட்ரீமிங் சேவைகளையும் நாம் ஜியோ டிவி மூலம் பார்த்து ரசிக்கலாம். இத்துடன் ஜியோசினிமா பிரீமியத்திற்கான 28 நாள் சந்தாவும் வழங்கப்படும்.
அடுத்த பிளான்: அடுத்த ரூ.857 ப்ரீபெய்ட் பிளான்.. இது 84 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு திட்டம்.. இதிலும் நமக்கு தினசரி 2 ஜிபி வீதம் மொத்தம் 168 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும்.. இதற்கு முன்பு கூறிய திட்டத்தில் இருப்பது போலவே 2ஜிபி காலியான 64 Kbps வேகத்தில் இணையம்.. அன்லிமிடட் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். இதில் நமக்கு அமேசான் ப்ரைம் மொபைல் எடிஷன் சந்தா 84 நாட்களுக்கு கிடைக்கும். அத்துடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் சேவைகளையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், இதில் நமக்கு ஜியோசினிமா பிரீமியம் வராது..
3ஆவது பிளான்: அடுத்து இதே 84 நாட்கள் செல்படியாகும் மற்றொரு திட்டமும் இருக்கிறது.. ஆனால், இதன் ரேட் அதிகம்.. இது சுமார் ரூ.1099க்கு நமக்கு கிடைக்கிறது. இதில் ஒரு நாளைக்கு 2 ஜிபி வீதம் மொத்தம் 168 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். அன்லிமிடட் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். இதில் மேலை கூறப்பட்ட அனைத்து ஓடிடி சந்தாக்களும் நமக்கு கிடைத்தும். அத்துடன் கூடுதலாக நெட்பிளிக்ஸ் மொபைல் சந்தாவும் கிடைக்கும். அதேநேரம் இதிலும் நமக்கு ஜியோ பிரீமியம் கிடைக்காது.
ஓராண்டு செல்லபடியாகும்: என்னால் அடிக்கடி எல்லாம் ரீச்சார்ஜ் செய்ய முடியாது என்றால்.. உங்களுக்காகவே ஓராண்டு செல்லுபடியாகும் ஒரு பிளானும் இருக்கிறது. இதன் ரேட் ரூ.3227 ஆகும்.. இது 365 நாட்கள் செல்லுபடியாகும். தினசரி 2 ஜிபி, அன்லிமிடட் கால், தினசரி 100 எஸ்எம்எஸ் இதிலும் நமக்கு கிடைக்கும். மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இதில் நமக்கு அமேசான் பிரைம் வீடியோ மொபைல் 1 ஆண்டு கிடைக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications