இனி வாட்ஸ்அப் வேலை செய்யாது.. மக்களே அலர்ட்.. வெளியான பெரிய லிஸ்ட்.. உங்க மொபைல் இருக்கா பாருங்க
வாஷிங்டன்: உலகின் முக்கியமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்ப் சில குறிப்பிட்ட மொபைல்களில் வேலை செய்யாது என்ற ஷாக் அறிவிப்பு இப்போது வந்துள்ளது.
இப்போது முக்கிய தகவல் பரிமாற்றம் அனைத்துமே வாட்ஸ்அப் வழியாகத் தான் நடக்கிறது. குறிப்பாகக் கல்லூரிகள், வேலை செய்யும் நிறுவனங்கள் முக்கிய தகவல் தொடர்பு சாதனமாக வாட்ஸ்அப் தான் இருக்கிறது.

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ச்சியாகப் பல அப்டேட்களை கொடுத்து வருகிறது. சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கவும் யூசர்களை தக்க வைக்கவும் புது புது வசதிகளை வழங்குகிறது.
வாட்ஸ்அப்: இதற்கிடையே வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது பழைய செல்போன்களுக்கான ஆதரவை நிறுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அந்த மாடல்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுவனம் நிறுத்தியுள்ளது. பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான ஆதரவை வாட்அஸ்ப் நிறுத்துகிறது. இனி குறிப்பிட்ட மொபைலை வைத்திருப்போரால் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.
இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே இந்த மாடல்களில் வாட்ஸ்அப் வேலை செய்வதில்லை என்ற கூறப்படுகிறது. அதாவது ஆண்ட்ராய்டு 4.4, அதாவது கிட்கேட் மாடலை வைத்திருப்போர் இனிமேல் அவர்கள் மொபைலில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. தற்போது வாட்ஸ்அப் வெளியிட்ட தகவல்களின்படி குறைந்த எண்ணிக்கையிலான மொபைல்கள் மட்டுமே ஆண்ட்ராய்டு கிட்கேட்டில் இயங்கி வந்தன. அவற்றுக்கான சப்போர்ட் நிறுத்தப்பட்டுள்ளது.
வேலை செய்யாது: அதாவது இனிமேல் அவர்கள் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களின் ஒரே ஆப்ஷன் புதிய மொபைலை வாங்குவது மட்டுமே. தற்போது நீங்கள் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்றால் குறைந்தது ஆண்ட்ராய்டு 5.0, அதாவது லாலிபாப் வெர்ஷன் அல்லது அதற்குப் பிறகு வந்த ஆண்ட்ராய்டு பதிப்பை நீங்கள் வைத்திருக்க வேண்டும். அதற்கு முந்தைய வெர்ஷன்களில் வாட்ஸ்அப் இனி வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு கிட்கேட் வெர்ஷன் கடந்த 2013ஆம்ந ஆண்டு வெளியிடப்பட்டது.. அதாவது இந்த ஆண்ட்ராய்டு வேர்ஷனில் சுமார் 10 ஆண்டுகள் வாட்ஸ்அப் வேலை செய்து வந்துள்ளது.. வாட்ஸ்அப் செயலியை இப்போது பயன்படுத்துவோரில் 0.5 சதவீதம் முதல் 0.7 சதவீதம் பேர் மட்டுமே இப்போதும் அந்த பழைய கிட்கேட் ஆண்டராய்டு வெர்ஷனை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அடுத்த குறைந்தது வெர்ஷனுக்கு அப்கிரேட் ஆனால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியும்.
என்ன காரணம்: வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த காலங்களிலும் இதுபோல பழைய ஆண்டிராய்டு வெர்ஷன் மாடல்களுக்கான சப்போர்ட்டை நிறுத்தி உள்ளது. இதை வாட்ஸ்அப் நிறுவனம் வழக்கமான செயல்முறையாகவே செய்து வருகிறது. பழைய ஆண்டிராய்டு வெர்ஷன்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த முடியாது என்பதே இதற்கான முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
எந்த மொபைல் மாடல்கள்: நெக்சஸ் 7, ஹெச்டிசி ஒன், சாம்சங் கேலக்ஸி 2, LG Optimus G Pro, சோனி எக்ஸ்பீரியா இசட், சாம்சங் கேலக்ஸி நெக்சஸ், சாம்சங் கேலக்ஸி S2, சோனி எக்ஸ்பீரியா எஸ்2, மோட்டோரோலா ஜூம், சாம்சங் கேலக்ஸி டேப் 10, சாம்சங் கேலக்ஸி எஸ் உள்ளிட்ட மொபைல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது. இது மட்டுமின்றி ஆண்ட்ராய்டு கிட்கேட்டில் இயங்கும் அனைத்து மொபைல் மாடல்களிலும் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் இந்த மொபைல்களில் எதாவது ஒரு மாடலை பயன்படுத்தி வந்தால்.. இனிமேல் உங்களுக்கு வாட்ஸ்அப் வேலை செய்யாது. நீங்கள் அடுத்த வெர்ஷனுக்கு கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும். பெரும்பாலும் அந்த மாடல்களுக்கு அடுத்த வெர்ஷன் அப்டேட் கிடைக்காது. எனவே, உங்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் புது மாடலை வாங்குவது மட்டுமே.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications