"சர்ப்ரைஸ்" லிஸ்ட்! இந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவை என்ன? முதலிடத்தில் எது பாருங்க! ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்த 2023ஆம் ஆண்டு முடிய இன்னும் சில வாரங்களே இருக்கிறது. இதற்கிடையே கூகுள் தளத்தில் இந்தாண்டு அதிகம் தேடப்பட்ட தலைப்புகள், கேள்விகள், குறித்த தகவல்களைக் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

'இயர் இன் தேடல் 2023' என்ற லிஸ்டில் அதிகம் தேடப்பட்ட செய்திகள், பொழுதுபோக்கு, மீம்கள், பயணம், சமையல் டிப்ஸ் என பல்வேறு விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

 What are the most googled terms and questions in internet on 2023

சர்ப்ரைஸ் லிஸ்ட்: கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் இருந்து சந்திரயான்-3 ஏவப்பட்டது. அது ஆகஸ்ட் மாதம் கடைசி வாரம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இது இஸ்ரோவின் மாபெரும் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. மற்றும் சந்திரனில் தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா மாறியது. மேலும், நிலவின் தென் துருவத்தில் ஒரு நாடு வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

இந்தாண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 தலைப்புகள் என்று பார்க்கும் போது சந்திரயான் 3 முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து கர்நாடக தேர்தல் முடிவுகள், இஸ்ரேல் செய்திகள், சதீஷ் கௌசிக், பட்ஜெட் 2023, துருக்கி நிலநடுக்கம், அதிக் அகமது, மேத்யூ பெர்ரி, மணிப்பூர் செய்திகள், ஒடிசா ரயில் விபத்து ஆகியவை இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளாக இருக்கிறது.

முதலிடம் யாருக்கு: இதில் இருக்கும் பெரும்பாலான செய்திகள் இந்தியாவில் நடந்தது தான். அதேநேரம் கடந்த அக். மாதம் ஆரம்பித்த இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்தும் மக்கள் அதிகம் தேடியுள்ளது. இதில் தெரிகிறது. இது தவிர துருக்கி நிலநடுக்கம் குறித்தும் அக். மாதம் இறுதியில் உயிரிழந்த பிரன்ட்ஸ் சீரியஸ் நடிகர் மேத்யூ பெர்ரி குறித்தும் இந்தியாவில் அதிக பேர் தேடியுள்ளது இதில் தெரிய வருகிறது.

அதேபோல கூகுள் 'இயர் இன் தேடல் 2023' லிஸ்டில் இந்தாண்டு அதிகம் தேடப்பட்ட கேள்விகள் என்றும் தனியாக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. ஜி20 மாநாடு, சாட் ஜிபிடி, இன்ஸ்டாகிராம் ஆகியவை இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. மேலும், இந்த லிஸ்டில் புது நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்ட செங்கோலும் இடம்பிடித்துள்ளது.

அதிகம் தேடப்பட்ட கேள்விகள்

1) ஜி20 என்றால் என்ன

2)UCC என்றால் என்ன,

3) சாட்ஜிபிடி என்றால் என்ன

4) ஹமாஸ் என்றால் என்ன

5) 28 செப்டம்பர் 2023 அன்று என்ன நடந்தது

6) சந்திரயான் 3 என்றால் என்ன

7) இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ் என்றால் என்ன

8) கிரிக்கெட்டில் டைம் அவுட் என்றால் என்ன

9) ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் என்றால் என்ன?

10) செங்கோல் என்றால் என்ன

அதேபோல How To என்ற தலைப்பில் தேடப்பட்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் முடி கொட்டுவது, ஆதார் பான் கார்ட் லிங் ஆகியவை அதிகம் இருக்கிறது.

அதிகம் தேடப்பட்ட கேள்விகள்

1) அதிக வெயில் காரணமாக ஏற்படும் தோல் மற்றும் கூந்தல் பாதிப்புகளை வீட்டிலேயே சரி செய்வது எப்படி

2) யூடியூப் தளத்தில் விரைவில் 5 ஆயிரம் பாலோயர்ஸ் பெறுவது எப்படி

3) கபடியில் சிறப்பாக விளையாடுவது எப்படி

4) கார் மைலேஜை அதிகரிப்பது எப்படி

5) செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவது எப்படி

6) ரக்ஷாபந்தன் நாளில் என் சகோதரியை ஆச்சரியப்படுத்துவது எப்படி

7) சுத்தமான காஞ்சிபுரம் பட்டு சேலையை அடையாளம் காண்பது எப்படி

8) ஆதாருடன் பான் இணைப்பை செக் செய்வது எப்படி

9) வாட்ஸ்அப் சேனலை உருவாக்குவது எப்படி

10) இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெறுவது எப்படி

இந்தியாவில் அதிகம் பின்தொடரும் விளையாட்டுகளான கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுகளில் சிறந்த தேடல்களின் பட்டியல் உள்ளது.

விளையாட்டு பிரிவில் 10இல் 8 கிரிக்கெட் சார்ந்தே இருக்கிறது. ஆசிய கேம்ஸ், புட்பால் தொடரான இந்தியன் சூப்பர் லீக் ஆகியவை டாப் 10இல் இடம் பிடித்துள்ளது.

விளையாட்டில் டாப் 10 பிடித்தவை: இந்தியன் பிரீமியர் லீக், கிரிக்கெட் உலகக் கோப்பை, ஆசிய கோப்பை, வுமன் பிரீமியர் லீக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தியன் சூப்பர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், ஆஷஸ், மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை, SA20 (சவுத் ஆப்பிரிக்கா டி20 தொடர்) குறித்து அதிகம் தேடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+