சார்ஜ் % எவ்வளவு இருக்கனும்? நெட்வொர்க் குறைவா இருந்தால் பாதிப்பா? அறிய வேண்டிய செல்போன் சீக்ரெட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்ன தான் அதிநவீன மொபைல்கள் வந்தாலும் கூட, அத்துடன் சேர்த்துக் கூடவே சில பொய்களும் வரும். இந்த பொய்களைக் குறித்து நாம் தெரிந்து கொண்டால் ஸ்மார்ட் போனை இன்னுமே ஈஸியாக பயன்படுத்தலாம்.

இந்த உலகம் ஸ்மார்ட் போன் நிறைந்த உலகமாக மாறி வருகிறது. எல்லாமே ஸ்மார்ட்போன் என்று மாறி வருகிறது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை இப்போது எல்லாமே மொபைல் வசம் மாறி வருகிறது.

கிட்டகட்ட மொபைல் போன்கள் நமது 6ஆவது விரலைப் போல மாறிவிட்டது என்றே சொல்லலாம். பலருக்கும் மொபைலை வீடுகளிலேயே மறந்து வந்துவிட்டால் அன்றைய நாளே ஓடாது.

 What are the myths surrounding about mobile phones

மொபைல்: இப்படி நம்மிடம் இருந்து அலைப்பேசிகள் முடியாத ஒன்றாக மாறிவிட்ட போதிலும், இன்னும் மொபைல் போன்களை சுற்றி இருக்கும் பல பொய்யான கட்டுக்கதைகளை உண்மை என்றே நம்பி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக மொபைல்கள் வந்தாலும், இந்த பொய்களும் கூடவே வருகிறது. இந்த பொய்களைக் குறித்து நாம் தெரிந்து கொண்டால் ஸ்மார்ட் போனை இன்னுமே ஈஸியாக பயன்படுத்தலாம்

இப்போது மொபைல் என்றாலே இணையம் தான். இணையச் சேவை இல்லாமல் யாரும் மொபைலை பயன்படுத்துவதில்லை. அதிலும் ஜியோ வருகை இணைய நுகர்வைப் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதில் பலரும் மொபைலில் இணையச் சேவை வேகமாக இருக்க சிக்னல் புல்லாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அப்படி இருக்க வேண்டும் என அவசியம் இல்லை..

வதந்தி: டவர் எந்தளவுக்கு வருகிறது என்பதையே சிக்னல் பயன்படுகிறது. ஒரு பாயணிட் சிக்னல் வந்தாலும் 5 பாயிண்ட் வந்தாலும் இணைய வேகம் ஒரே அளவில் இருக்கும். இணைய வேகம் என்பது சிக்னல் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து இருக்காது.

அடுத்து நம்மில் பலரும் பட்ஜெட் மொபைலில் பாஸ்ட் சார்ஜிங்கை வைத்துப் போட்டால் அது வேகமாக சார்ஜ் ஆகும் என்று ஒரு தரப்பினர் நினைப்பார்கள். மற்றொரு தரப்பினர் அது வெடித்துச் சிதறிவிடும் என்று நினைப்பார்கள். உண்மையில் மொபைல் வேகமாகவும் சார்ஜ் ஆகாது வெடித்தும் சிதறாது. மொபைலின் இன்புட் சார்ஜிங் எந்தளவுக்கு இருக்கிறதோ.. அந்தளவுக்கு மட்டுமே சார்ஜ் ஆகும்.

 What are the myths surrounding about mobile phones

ப்ளே ஸ்டோர்: அதேபோல ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யும் அனைத்து செயலிகளும் பாதுகாப்பானது என்று கண்ணை மூடிக் கொண்டு டவுன்லோட் செய்யக் கூடாது.. அதிலும் பல ஆபத்தான செயலிகள் இருக்கவே செய்கிறது. அவ்வப்போது ப்ளே ஸ்டோரில் இருந்து பல செயலிகள் நீக்கப்படுவதும் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். எனவே, எந்தவொரு செயலியை டவுன்லோட் செய்யும்போது பார்த்துப் பயன்படுத்துங்கள்.

மேலும், இரவு முழுக்க சார்ஜ் போடுவதில் மொபைல் வெடித்துவிடும் எனச் சிலர் நினைப்பார்கள். ஆனால் உண்மையில் எந்த பிரச்சினையும். ஏனென்றால் 100 வந்தவுடன் அப்படியே நின்றுவிடும். அதேபோல 0இல் இருந்து 100 வரை தான் சார்ஜ் செய்ய வேண்டும் என்று இல்லை. சொல்லப் போனால் 20 முதல் 80, 85 வரை சார்ஜ் செய்வதே பாதுகாப்பானதாக இருக்கும்.

பின்னணியில் அதிக செயலிகள் ரன் ஆகிக் கொண்டிருந்தால் மொபைலில் சார்ஜ் வேகமாகக் குறையும் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், தற்போது வரும் நவீன ஸ்மார்ட்போன்களில் இந்தப் பிரச்சினை வராது. பேட்டரியில் பெரிய வேறுபாடு இருக்காது. அதேபோல ப்ளூடூத், வைபை எப்போதும் ஆனில் வைத்திருப்பதாலும் பெரியளவில் சார்ஜ் வேறுபாடு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+