இலவசம் எல்லாம் இல்லை.. ஜியோ ஹாட்ஸ்டார் பிளான்கள் என்ன! மினிமம் எவ்வளவு கட்டணும்? விளம்பரம் வருமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் இணைந்து இப்போது ஒரே ஓடிடி தளமாக உருவாகியுள்ள நிலையில், அதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்த புதிய ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் என்ன பிளான்கள் உள்ளன. அவற்றுக்கு நாம் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே ஓடிடி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விரும்பிய நிகழ்ச்சியை விரும்பிய நேரத்தில் பார்க்கலாம் என்பதால் மக்களின் ஆர்வம் ஓடிடிகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

technology Jio Hotstar

ஜியோ ஹாட்ஸ்டார்

அதன்படி இங்கு முக்கிய ஓடிடி தளங்களாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரும், ஜியோ சினிமாஸும் இருந்தது. கடந்த சில காலமாக சர்வதேச அளவில் டிஸ்னி நிறுவனம் சில பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வந்ததால் இந்தியாவில் ஜியோவுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்தனர். இதற்கான ஒப்பந்தம் கடந்தாண்டு உறுதி செய்யப்பட்டது.

என்னவெல்லாம் பார்க்கலாம்

இந்தச் சூழலில் இப்போது கிரிக்கெட் சீசன் தொடங்கும் முன்பு ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே இருந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி இப்போது ஜியோ ஹாட்ஸ்டார் என அப்டேட் ஆகியுள்ளது. இந்த புதிய ஓடிடி தளத்தில் 10 மொழிகளின் கன்டெண்டுகள் இருக்கும். மேலும், என்பிசி யுனிவர்சல், பீகாக், வார்னர் பிரதர்ஸ், டிஸ்கவரி, ஹெச்பிஓ மற்றும் பாரமவுண்ட் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களின் வீடியோக்களும் இதில் இடம்பெறுகிறது.

மேலும் ஐபிஎல், ஐசிசி போட்டிகள் மற்றும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து என எல்லா முக்கிய விளையாட்டுப் போட்டிகளையும் கூட ஒரே ஓடிடி தளத்தில் பார்க்கலாம். ஏற்கனவே, ஜியோ அல்லது ஹாட்ஸ்டார் வைத்திருப்போர் மட்டுமே இலவசமாக பார்க்கலாம். மற்ற அனைவரும் தனியாக சந்தா தொகை கட்ட வேண்டும். அதேநேரம் சப்ஸ்கிரிப்ஷன்களில் பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. நமக்கு எந்த பிளான் தேவையோ அதற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ள பிளான்கள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

பிளான்கள் என்ன?

முதலில் மொபைல் பிளான். இதுதான் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தின் மிகக் குறைந்த விலைக்கு இருக்கும் திட்டமாகும். ஒரு நேரத்தில் ஒரு செல்போனில் மட்டும் ஹியோ ஹாட்ஸ்டாரை பயன்படுத்த முடியும். அதிகபட்சம் 720pல் வீடியோக்கள் வரும். மேலும், இதில் விளம்பரங்களும் வரும். இதில் நீங்கள் 3 மாதங்களுக்கு ரூ.149 செலுத்த வேண்டும். அதேநேரம் ஆண்டுக்கு என்றால் ரூ.499ஐ கட்ட வேண்டும்.

அடுத்து இருப்பது "சூப்பர்" என்ற பிளான். டிவி உள்ளிட்ட பெரிய திரைகளில் பார்க்க இந்த திட்டம் மட்டுமே இருக்கிறது. இதில் நீங்கள் ஒரு நேரத்தில் இரு கருவிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரை பயன்படுத்தலாம். FullHD (1080p) மற்றும் Dolby Atmos ஆகிய வசதிகள் உள்ளன. அதேநேரம் இதிலும் விளம்பரங்கள் வரும். இதற்கு 3 மாதங்களுக்கு ரூ.299 செலுத்த வேண்டும். ஆண்டுக்கு என்றால் ரூ.899 கட்ட வேண்டும்.

இதுதான் பெஸ்ட்

அடுத்து பிரீமியம் திட்டம்.. உங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை 4Kஇல் பார்க்க இதுதான் ஒரே திட்டம். இதில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 8 கருவிகளைப் பயன்படுத்தலாம். இதில் விளையாட்டு மற்றும் லைவ் நிகழ்ச்சிகளைத் தவிர்த்துப் பிற நிகழ்ச்சிகளில் விளம்பரங்கள் எதுவும் வராது. விளம்பரம் இல்லாத ஹை குவாலிட்டி வீடியோக்களை பார்க்க இந்த பிளான் சரியாக இருக்கும். இதற்கு நீங்கள் மாதம் ரூ.299 செலுத்த வேண்டும். அதேநேரம் ரூ.499 (3 மாதம்), ரூ.1499க்கும் (12 மாதம்) நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+