வெடித்து சிதறும் செல்போன்கள்.. இந்த அறிகுறிகளை நோட் பண்ணுங்க.. பாதுகாக்க என்ன செய்யணும்! ஈஸி டிப்ஸ்
சென்னை: செல்போன்கள் திடீர் திடீரென என வெடித்துச் சிதறும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் மொபைல்கள் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாக இருக்கிறது. எங்கே சென்றாலும் செல்போன் இல்லாமல் போய்விட்டால் பலருக்கும் ஒருவித பதற்றம் ஏற்பட்டுவிடும்.

ஏனென்றால் போட்டோ எடுப்பது முதல் பணம் செலுத்துவது வரை இப்போது செல்போன்களிலேயே நம்மால் அனைத்தும் மேற்கொள்ள முடிகிறது. மேலும், இப்போதெல்லாம் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் இருந்தும் கூட முக்கிய அறிவிப்புகளை வாட்ஸ்அப் மூலமாகவே அனுப்புகிறார்கள்.
வெடித்துச் சிதறும் செல்போன்: இதனால் இந்தக் காலகட்டத்தில் மொபைல் இல்லாமல் எங்காவது வெளியே செல்வதைப் பலராலும் யோசித்துக் கூட பார்க்க முடிவதில்லை. இப்படி நமது வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக செல்போன்கள் மாறிவிட்டது. அதேநேரம் சில இடங்களில் செலன்போன்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்களும் நம்மைப் பதற வைப்பதாகவே இருக்கிறது. பொதுவாக செல்போன்கள் வெடித்துச் சிதற வாய்ப்புகள் குறைவு என்றாலும் கூட சில டிப்ஸ்களை பின்பற்றினால் அதை வெகுவாக குறைக்கலாம்.
அதற்கு முன்பு செல்போன் வெடிக்கும் அபாயம் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம். செல்போன்கள் பெரும்பாலும் வெடிக்கும் போது அதில் சில அறிகுறிகள் தென்படும். அப்போதே உங்கள் செல்போனை தூர வைத்துவிடுங்கள். இல்லையென்றால் உடலில் தீக்காயம் முதல் உயிரிழப்பே கூட ஏற்படும் அபாயம் இருக்கிறது.
இதை கவனிங்க: மொபைலில் இருந்து மெலிதாக சத்தம் வரும். பிளாஸ்டிக் எரிவது அல்லது கெமிக்கல் வாசனை கூட வரத் தொடங்கும். அதேபோல வந்தால் அடுத்த சில நிமிடங்களில் செல்போன் வெடிக்கும் ஆபத்து இருக்கிறது என்று அர்த்தம். இதுபோன்ற நேரங்களில் செல்போனை கையில் எடுக்காதீர்கள். தப்பித் தவறிக் கூட சார்ஜ் போடவும் வேண்டாம்.
அதேபோல மற்றொரு முக்கியமான விஷயம் பேட்டரியில் வீக்கம் இருந்தாலும் அதில் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். மொபைலில் பேட்டரி பழுதாகி இருந்தால் மட்டுமே அவை இதுபோல வீங்கும். மொபைலை கீழே வைக்கும் போது அவை தட்டையாக இல்லாமல்.. எதாவது ஒரு பக்கம் ஏற்ற இறக்கமாக இருந்தாலே செல்போன் பேட்டரி வீங்கியுள்ளதை நாம் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். எனவே, இதைக் கவனிக்கவும்.
தவிர்க்க வேண்டியவை: பெரும்பாலான நேரம் மொபைல் சார்ஜ் போட்டிருக்கும் போது தான் அவை வெடித்துச் சிதறும் ஆபத்து இருக்கிறது. இதற்கான வாய்ப்பு மிக குறைவு என்றாலும் பரவலாக இதுபோன்ற சம்பவங்களே நடக்கிறது. மொபைல் ஹீட் ஆவதே இதற்குக் காரணமாகும். மொபைல் சார்ஜ் ஆகும் போது சும்மாவே அதில் வெப்பம் அதிகரிக்கும். அதுபோன்ற நேரத்தில் நாம் போன் பேசும்போது, மொபைல் வெடித்து சிதறும் அபாயம் இருக்கிறது. எனவே, கண்டிப்பாக சார்ஜ் போட்டு செல்போனில் பேசாதீர்கள்.
அதேபோல சார்ஜ் போட்டுவிட்டு மொபைலில் கேம் விளையாடினாலும் கூட அதன் வெப்பம் அதிகரிக்கும். இதன் காரணமாகக் கூட செல்போன் வெடித்துச் சிதறும் அபாயம் இருக்கிறது. எனவே, சார்ஜ்ஜில் இருக்கும் போது கேம்களை விளையாட வேண்டாம்.
சார்ஜ்: அடுத்து இரவு முழுக்க மொபைலை சார்ஜ் போடாதீர்கள். இதன் காரணமாகவும் கூட மொபைலில் வெப்பம் அதிகமாகும். பழைய மாடல் மொபைல்களில் தான் சார்ஜ் மிகவும் குறைவாக இருக்கும் வரை பயன்படுத்திவிட்டு 100% வரும் வரை சார்ஜ் போட வேண்டும் என்பார்கள். ஆனால், இப்போது வரும் மொபைல்களில் 20% வரும் போதே சார்ஜ் போட்டுவிடலாம். அதேபோல 80%க்கு மேல் வந்ததும் எடுத்துவிடலாம். இதுவும் செல்போன் ஹீட் ஆவதை தடுக்கும்.
மேலும், முடிந்தவரை நிறுவனம் அளித்த சார்ஜர்களையே பயன்படுத்துங்கள். மலிவான செல்போன் மூலம் சார்ஜ் செய்யும் போதும் இந்தச் சிக்கல் ஏற்படும். எனவே, முடிந்தவரைச் சம்மந்தப்பட்ட நிறுவனம் அளித்த சார்ஜர்களையே பயன்படுத்துங்கள். அல்லது நல்ல பிராண்ட் சார்ஜர்களை பயன்படுத்துங்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications