யூடியூப்பில் அதிக சப்ஸ்கிரைபர்கள்.. டாப் இடத்தில் இந்திய சேனல்.. டாப் 10இல் இருக்கும் மெகா ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகின் டாப் 10 யூடியூப் சேனல்களில் 3 யூடியூப் சேனல்கள் இந்தியாவைச் சேர்ந்தவையாகும். அவை என்னென்ன.. முதலிடத்தில் இருக்கும் அந்த இந்திய சேனல் எது என்பது குறித்துப் பார்க்கலாம்.

கடந்த 2005இல் தொடங்கப்பட்ட யூடியூப் தளம் நாம் இணையத்தை எப்படி நுகர்கிறோம் என்பதை முற்றிலுமாக மாற்றியது. குறிப்பாக வீடியோவை நாம் நுகர்வதை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது.

 What are the Three Indian YouTube Channels Among Most Subscribed YouTube Channels

இந்த யூடியூப் தளம் பொழுதுபோக்கு தளங்களில் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். வீடியோவை நாம் அணுகும் முறையை இது முற்றிலுமாக மாற்றி அமைத்தது.

இப்போது டிஜிட்டல் கலாச்சாரத்தில் வீடியோக்கள், லைவ் ஸ்ட்ரீம்கள் என பல நவீன பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அது சரி உலகிலேயே அதிகம் சப்ஸ்கிரைப் செய்யப்பட்ட யூடியூப் சேனல் எது என்பது உங்களுக்குத் தெரியுமா.. அதற்கான விடை உங்களை ஆச்சரியப்படுத்தலாம். யூடியூப்களில் அதிகம் சப்ஸ்கிரைப் செய்யப்பட்ட சேனல்கள் குறித்து நாம் பார்க்கலாம். இந்த பட்டியலில் பல ஆண்டுகளாக மிஸ்டர் பீஸ்ட் நம்பர் 1ஆக இருந்து வந்த நிலையில், இந்தாண்டு அவர்கள் அந்த இடத்தை இழந்துள்ளனர். .

இந்திய சேனல்கள்: கடந்த காலங்களில் பல ஆண்டுகளில் அமெரிக்க அல்லது ஐரோப்பிய சேனல்கள் தான் முதல் இடத்தில் இருந்துள்ளன. ஆனால், இந்தாண்டு அவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி டி-சீரிஸ் சேனல் முதலிடத்தில் இருக்கிறது. பாலிவுட் பாடல்கள், துள்ளலான வீடியோக்களை கொண்ட டி-சீரிஸ் தான் அதிகம் சப்ஸ்கிரைப் செய்யப்பட்ட சேனலாக இருக்கிறது. மேலும், இதில் விஷயம் என்னவென்றால் அதிகம் சப்ஸ்கிரைப் செய்யப்பட்ட சேனல்கள் லிஸ்டில் டாப் 10இல் 3 சேனல்கள் இந்தியாவை சேர்ந்தவையாகும்.

டி-சீரிஸ்: உலகின் நம்பர் ஒன் யூடியூப் சேனலாக டி சீரிஸ் இருக்கிறது. இவர்களிடம் 257 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய மியூசிக் லேபிள் மற்றும் மூவி ஸ்டுடியோவுக்குச் சொந்தமான இந்த சேனல் முதல் இடத்தில் இருக்கிறது.

மிஸ்டர் பீஸ்ட்: அடுத்து ஜிம்மி டொனால்ட்சனின் மிஸ்டர் பீஸ்ட் சேனல் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. விலையுயர்ந்த ஸ்டண்ட் மற்றும் சவால்கள் ஆகியவற்றுக்கு புகழ்பெற்ற இந்த சேனலுக்கு 232 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.

இதில் மூன்றாவது இடத்தில் Cocomelon சேனல் இருக்கிறது. 3டி முறையில் குழந்தைகளுக்கான நர்சரி ரைம்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களை உருவாக்கும் இந்த சேனல் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்கு 170 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். நான்காவது இடத்தில் சோனி இந்தியா இருக்கிறது. இதற்கு 167 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

கிட்ஸ் டயானா ஷோ (118 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள்), PewDiePie (112 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள்), லைக் நாஸ்தியா (112 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள்), விளாட் மற்றும் நிக்கி (108 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள்) ஆகிய சேனல்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதில் 9ஆவது இடத்தில் மற்றொரு இந்திய நிறுவனமான ஜீ மியூசிக் இருக்கிறது. இதன் மொத்த சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை 104 மில்லியன் ஆகும். இதில் 10ஆவது இடத்தில் 99 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உடன் WWE 10ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+