உங்க பட்ஜெட் ரூ.35 ஆயிரமா.. தாறுமாறான 7 மாடல்கள்! இதில் கடைசி மொபைல் நிஜமா வேற லெவல் தான்
சென்னை: புதிதாக ஒரு மொபைல் ரூ.35,000க்குள் வாங்கும் பிளான் இருக்கு.. ஆனால் எந்த மொபைல் வாங்கலாம் எனத் தெரியவில்லை என்று குழம்பிப் போய் இருக்கிறீர்களா.. இனி உங்களுக்கு அந்த குழப்பம் வேண்டாம்.. இந்த பட்ஜெட்டில் என்ன தான் பல மாடல்கள் இருந்தாலும், அனைவருக்கும் ஏற்ற 7 மொபைல் மாடல்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போதெல்லாம் மொபைல் இல்லாமல் வாழ்வது ரொம்ப ரொம்ப கடினம்.. எங்குச் சென்றாலும் கையில் பர்ஸ் இருக்கோ இல்லையோ.. மொபைல் நிச்சயம் இருக்கும். அந்தளவுக்கு மொபைல் முக்கியமானதாக மாறிவிட்டது.

இந்தளவுக்கு முக்கியமாக இருக்கும் மொபைலை தேர்வு செய்வது ரொம்பவே முக்கியம். அதன்படி ரூ.35 ஆயிரம் பட்ஜெட்டில் நீங்கள் மொபைல் வாங்க வேண்டும் என்றால் இந்த லிஸ்டை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒன்பிளஸ் நார்ட் 3 5G: இந்த பட்ஜெட்டில் தேவையான அனைத்து அம்சங்களையும் இது கொண்டுள்ளது. இதன் ப்ரீமியம் லுக் முக்கிய ப்ளஸ் பாயிண்ட். சைஸ் சிறியது என்பதால் இதை நீண்ட நேரம் யூஸ் செய்யலாம்.. ஆண்டிராய்டு 13 அடிப்படையிலான ஆக்ஸிஜன் OS 13.1, 6.74 இன்ச் டிஸ்ப்ளே, 5000 mAh பேட்டரி இதில் உள்ளது. மேலும், மொபைலை அதிவேகமாக சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இருக்கிறது. மேலும் IP54 சான்று இதற்கு இருக்கிறது.. அதாவது லேசாக தண்ணீர் பட்டாலும் மொபைலை பாதிக்காது. 16 MP முன்பக்க கேமரா மற்றும் 50 எம்பி மெயின் கேமரா அட்டகாசமான படங்களைத் தருகிறது.
யாருக்குச் சரியாக இருக்கும் எனக் கேட்கிறீர்களா.. நான் பல மணி நேரம் கூட கேம் விளையாடுவேன்.. மொபைல் பார்க்கவும் செமயாக இருக்க வேண்டும் என்பவர்கள் இதை வாங்கலாம்.
சாம்சங் கேலக்ஸி S21 FE 5G: சாம்சிங்கின் மிக முக்கியமான மொபைல்... 6.4 இன்ச் அமோலெட் டிஸ்பிளேவை கொண்ட இது 12எம்பி மெயின் கேமரா, 12எம்பி அல்ட்ராவைடு கேமரா மற்றும் 8 எம்பி டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. இதை வைத்து 30X வரை ஜூம் செய்யலாம். மேலும், செல்பி பிரியர்களுக்கு 32 எம்பி முன்பக்க கேமராவும் இதில் இருக்கிறது. ஆண்டிராய்டு 12 சிஸ்டம், 4500 mah பேட்டரியும் இருப்பதால் இதன் மற்றொரு சிறப்பு. கேமரா பிரியர்களுக்கு ஏற்ற மொபைல். இதன் அடுத்த வெர்ஷன் S23 FE சில சமயம் 37,000 என்ற ரேஞ்சில் ஆன்லைனில் வரும். இந்த ஆப்பர் கிடைத்தால் நல்ல டீல்.
ஜியோமி 11T ப்ரோ 5G: இது ஜியோமி பிரியர்களுக்கான மொபைல்.. ஸ்னாப்டிராகன் 888, 120Hz 6.67-இன்ச் அமோலேட் டிஸ்ப்ளே, 108MP HM2 பிரதான கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 5MP கேமரா இதில் இருக்கிறது.. குறைந்த வெளிச்சத்திலும் இதில் சூப்பரான வீடியோ மற்றும் போட்டோக்களை எடுக்க முடியும்.. அவ்வளவு ஏன் 8K வீடியோவையும் எடுக்கலாம். 5000mAh பேட்டரி, வெறும் 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் 120W ஹைப்பர்சார்ஜ் எனப் பல வசதிகள் கொட்டி கிடக்கிறது. எல்லாமே சூப்பர் வசதி என்றாலும் இரண்டு சிக்கல்கள் உள்ளன. முதலில் ஜியோமி ஆப்ரேடிங் சிஸ்டம் அனைவருக்கும் செட் ஆகாது. எனவே அதை யோசியுங்கள்.. அதேபோல நீண்ட நேரம் யூஸ் செய்தால் மொபைல் சூடாவதாகவும் புகார்கள் உள்ளன.
ரியல்மீ 12 Pro+ 5G: ஸ்னாப்டிராகன் 7s Gen 2 பிராசஸர், 50MP Sony IMX890 OIS கேமரா, 64MP பெரிஸ்கோப் கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா என மூன்று பின்னால் மூன்று கேமராக்களை இது கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்கு 32எம்பி சோனி செல்ஃபி கேமரா உள்ளது. ஆண்ட்ராய்டு 14இல் இயங்குதளம், 5000mAh பேட்டரி, 6.70 இன்ச் டிஸ்பிளே என இந்த ரேஞ்சில் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. OIS இருப்பதால் வீடியோ அதிகம் எடுப்பவர்களுக்குச் சரியாக இருக்கும்.
ஒன்பிளஸ் 11R 5G: இந்த லிஸ்டில் இருக்கும் மற்றொரு ஒன்பிளஸ் மொபல். இதில் உள்ள 50 MP டிரிபிள் கேமரா செட் அப் இதற்கு பிளஸ். ஏனென்றால் இந்த கேமராவில் இருப்பது IMX890 சென்சார்.. இதில் சூப்பர் படங்களை எடுக்கலாம்.. இதில் இருக்கும் 13 இன்டிபென்டென்ட் டெம்பரேச்சர் சென்சார்கள் மொபைல்கள் வேகமாக சார்ஜ் ஏறும் போதும் ஓவராக சூடாகாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. டிஸ்பிளே, பேட்டரி முக்கியம் என்பவர்கள் இதை கன்சிடர் செய்யலாம்.
விவோ ஐகூ நியோ 7 ப்ரோ: 8GB மற்றும் 12GB ரேம் ஆப்ஷன்களில் இந்த மொபைல் கிடைக்கிறது. இதன் 50MP GN5 OIS கேமரா இதன் முக்கிய ஹைலைட். OIS வசதி இருப்பதால் நடக்கும் போது எடுத்தாலும் கூட குலுங்கல் இல்லாமல் நேர்த்தியாக வீடியோக்கள் வரும்.செல்ஃபி எடுக்க 16 MP முன்பக்க கேமராவையும் இது கொண்டுள்ளது. 120Hz 10-பிட் AMOLED டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 13 Funtouch OS 13, 5000 mAh பேட்டரியை இது கொண்டுள்ளது. பேட்டரி மற்றும் கேரமா முக்கியம் என்பவர்கள் இதை பரிசீலனை செய்யலாம்.
மோட்டோ எட்ஜ் 5௦ ப்ரோ: லிஸ்டில் அடுத்து இருப்பது மோட்டோ எட்ஜ் 5௦ ப்ரோ.. 6.7 இன்ச் P-OLED டிஸ்பிளே, 144 Hz Refresh Rate இதில் இருக்கிறது. கேமரா பிரியர்களுக்காக 50 MP மெயின் கேமரா, 13 MP அல்டிரா வைட் கேமரா, 10 MP டெலிபோட்டோ கேமரா இதில் இருக்கிறது. முன்புறம் இதில் 50MP கேமரா இருக்கிறது. மேலும், 4500 சார்ஜிங் வசதியும் இருக்கிறது. இதற்கு IP68 இருக்கிறது. அதாவது தண்ணீரில் போட்டாலும் எதுவும் ஆகாது. இதில் Snapdragon 7 Gen 3 பிராசஸர் மட்டும் இருப்பதால் கேமிங் பிரியர்களுக்கு மட்டும் இது பெரியளவில் செட் ஆகாது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications