யூடியூப்பில் இந்தாண்டு அதிகம் டிரெண்டான தென்னிந்திய பாடல் எது தெரியுமா?
டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கூகுள் நிறுவனம் அந்த ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட, அதிகம் டிரெண்டிங்கில் இருந்த வீடியோக்களை வெளியிடும் அதன்படி இந்தாண்டிற்கான லிஸ்ட் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தாண்டு அதிகம் டிரெண்டான பாடல் குறித்த அறிவிப்பும் இருக்கிறது. அதில் டாப் இடத்தில் இருக்கும் பாடல் இந்தி பாடல் இல்லை. இது தென்னிந்தியப் பாடல் தான். அது என்ன பாடல் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கூகுள் நிறுவனத்தின் கீழ் இயங்கும் யூடியூப் தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மணி நேரம் ஓடக்கூடிய வீடியோக்கள் பதிவிடப்படுகிறது. இருப்பினும், அவற்றில் சில வீடியோக்கள் தான் மிகப் பெரியளவில் டிரெண்ட் ஆகிறது.

அடித்து நொறுக்கிய தமன்: அதன்படி இந்தாண்டு யூடியூப்பில் அதிகம் டிரெண்டான, அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் குறித்த லிஸ்டை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டாப் பாடல்கள் குறித்த லிஸ்டையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது அதில் பெரும்பாலும் இந்திப் பாடல்கள் தான் இடம்பிடித்து இருக்கிறது. ஆனால், முதலிடத்தில் இருப்பது இந்தி இல்லை.. அது தென்னிந்தியா மொழி பாடலாகும்.
அது வேறு எதுவும் இல்லை. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, ஸ்ரீலீலா நடிப்பில் தன் இசையமைப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்று இருந்த மடத்தபெட்டி பாடல் தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்த பாடலின் தெலுங்கு லிரிக் வீடியோ மட்டும் 111 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. அதேபோல வீடியோ பாடல் சுமார் 506 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. இது மட்டுமின்றி இதன் தமிழ் மொழியாக்கப் பாடல் மட்டுமே கூட 34 மில்லியன் வியூஸ்களை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், யூடியூப்பில் நடப்பாண்டில் டாப் கிரியேட்டர்களாக இருப்போரின் லிஸ்டும் இதில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரபல அமெரிக்க யூடியூபரான மிஸ்டர் மீஸ்ட் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். அடுத்த 3 இடங்களில் இந்தி யூடியூபர்கள் உள்ளனர். 5வது இடத்தில் பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோவின் யூஆர் கிறிஸ்டியானோ சேனல் இடம் பிடித்து இருக்கிறது.
அதேபோல அதிகம் டிரெண்டான வீடியோக்கள் என்ற லிஸ்டையும் கூகுள் வெளியிட்டுள்ளது, அதில் கிரிக்கெட் உலக கோப்பை, அம்பானி திருமணம் ஆகியவை அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களாக உள்ளன. மேலும், ஐபிஎல் 2024 தொடர்பான வீடியோக்களும் அதிகம் பார்க்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை தவிர்த்து என்ன பார்த்தோம் என்றால் பாரீஸ் ஒலிம்பிக் 2024 குறித்த வீடியோக்கள் அதிக வியூஸ்களை பெற்றுள்ளன. இப்படி டிரெண்டிங் டாப் 10இல் 3 விளையாட்டு தொடர்பானதாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications