மக்களே ஜாக்கிரதை! "இந்த" மூன்று விஷயங்களை கூகுள் செய்தால்.. நீங்கள் சிறைக்கு செல்லலாம்! எச்சரிக்கை
மும்பை: இந்த நவீன உலகில் நினைத்த நேரத்தில் எது குறித்து சந்தேகம் ஏற்பட்டாலும் நொடிகளில் கூகுள் செய்து அதற்கான விடையைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம். ஆனால், அப்படி கூகுள் செய்யும் போது கவனமாக இருங்கள். ஏனென்றால், சில குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து நீங்கள் சாதாரணமாகக் கூகுள் செய்தாலும் கூட அது உங்களைச் சட்டச் சிக்கலில் மாட்டிவிடும் ஆபத்து இருக்கிறது.
இந்த காலத்தில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. முன்பு போல எதாவது ஒரு சந்தேகம் ஏற்பட்டால் அதைத் தீர்க்க காத்திருக்கத் தேவையில்லை. கூகுள் செய்தால் எந்தவொரு விஷயத்திற்கும் விடை கண்டுபிடிக்கலாம்.

கூகுள்:
இதுபோல விரும்பிய நேரத்தில் விரும்பிய விஷயம் குறித்து கூகுள் செய்து தெரிந்து கொள்வது என்பது மிகப் பெரிய வசதியாக இருந்தாலும், இத்துடன் சில சிக்கல்களும் உள்ளன. கூகுள் தளத்தைப் பலர் நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துவதைப் போல சிலர் இதை ஆபத்தான மோசமான செயல்களுக்கும் பயன்படுத்துகின்றன. இதனால் கூகுளில் சில தேடல்கள் ஆபத்தானவை மட்டுமல்ல.. கடுமையான சட்ட விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
உலக நாடுகள் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் அமைதியைப் பேணவும் ஆன்லைன் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. சில விஷயங்கள் குறித்து நாம் தேடும்போது அவை அபராதங்கள் அல்லது சிறைத் தண்டனைக்குக் கூட வழிவகுக்கும். ஏது கூகுளில் சேர்ச் செய்தாலே தண்டனையா என்று ஷாக் ஆக வேண்டாம்.. இவை அனைத்துமே சட்டவிரோதமானவை தான். இது குறித்துத் தேடும்போது மட்டுமே அது நாம் சிறைக்குச் செல்லவும் காரணமாக அமைந்துவிடுகிறது.
வெடிகுண்டு:
அதில் முதலாவது வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று தேடுவது.. வெடிகுண்டு எப்படித் தயாரிப்பது எனத் தேடுவது பெரும்பாலான நாடுகளில் கடுமையான கிரிமினல் குற்றமாகும். ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்ட பயங்கரவாதம் தொடர்பான ஆன்லைன் தேடல்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். வெடிகுண்டு தயாரிப்பது எப்படி போன்ற கேள்விகள் அல்லது அது தொடர்பான தேடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம். சும்மா ஒரு ஆர்வத்தில் நாம் தேடினால் அது கூட நம்மை வம்பில் மாட்டிவிடும் ஆபத்து இருக்கிறது.
சிறார் ஆபாசப் படம்:
இதுதான் இருப்பதிலேயே மோசமானது.. அதுதான் சிறார் ஆபாசப் படம் குறித்த தேடல்கள். உலகின் அனைத்து நாடுகளிலும் சிறார் ஆபாசப் படம் தடை செய்யப்பட்டது. சட்டவிரோதமானது. நமது நாட்டில் சிறார் ஆபாசப் படங்கள் வைத்திருப்போர், அதைப் பகிர்வோர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுபோல சிறார் ஆபாசப் படங்களை வைத்திருக்கும் இணைய தளங்கள் மீதும் கூட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, இதைக் கூகுள் செய்வோரும் சட்டச் சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம்.
சிக்கல்கள்:
அதேபோல டிஜிட்டல் யுகத்தில் இணையப் பாதுகாப்பு என்பது ரொம்பவே முக்கியமானது. எனவே, ஹேக்கிங் செய்வது எப்படி எனத் தேடுவது கூட நம்மைச் சிக்கலில் மாட்டி விடலாம். குறிப்பாக முக்கியமான விவரங்கள், உதாரணமாகப் பெண்டகனை ஹேக் செய்வது குறித்து, அணு ஆயுதங்களை ஹேக் செய்வது குறித்தெல்லாம் தேடுவது தேவையில்லாத சட்ட பிரச்சினைக்குத் தான் வழிவகுக்கும்.
அதாவது இந்த விவகாரங்களில் நாம் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானால், இதுபோல நாம் சேர்ச் செய்துள்ளதையே கூட நீதிமன்றத்தில் ஆதாரமாக போலீசார் சமர்ப்பிப்பார்கள். நீங்கள் சும்மா சேர்ச் செய்தேன் எனச் சொன்னாலும் ஏற்க மாட்டார்கள். சமீபத்தில் ஷாரோன் ராஜ் வழக்கில் கூட கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை வழங்க அவரது கூகுள் தேடல்கள் முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications